வாசித்ததைப் பதிவு செய்து வைக்கவும் பின்னொரு நாள் பார்த்து மகிழவும், குறிப்பாக, அடுத்த ஆண்டு இன்னும் அதிகமாக வாசிக்க உந்துதலாகவும் இப்பதிவு! நண்பர்களும் எத்தனை நூல்கள் வாசித்தீர்கள் என்று சொன்னால் ஒருவருக்கொருவர் உந்துதலாக இருக்கும். வாசிப்போம்! வாழ்வோம்!
ஹிச்கி - பார்க்க வேண்டிய ஒரு சமூகத் திரைப்படம்
ராணி முகர்ஜி நடித்து 2018இல் வெளியான இந்தித் திரைப்படம் 'ஹிச்கி'. வித்தியாசமான உடல்நலக் குறைபாட்டை சமூகத்தில் அனைவரும் அறிந்திருப்பதில்லை. அது பரவாயில்லை, அனைத்தையும் அறிந்திருக்க முடியாது என்பதை நம் பாட்டி சொல்லிக் கொடுத்திருக்கிறாரே, "கற்றது கைமண் அளவு" என்று! ஆனால் ஒரு நோயை அறிய வரும்பொழுது எப்படிக் கையாள்கிறோம் என்பதில் தான் சான்றாண்மை இருக்கிறது!
பொதுவாகச் சமூகத்தில் புதிய ஒரு நோயைக் காணும்பொழுது அதனைக் கிண்டல் செய்வதையும் பாதிக்கப்பட்டவரைச் சாதாரணமாக, சக மனிதராக நடத்தாத நிலையையும் பேசும் இப்படம் இன்னும் சில விசயங்களையும் சிறப்பாக எடுத்துக்காண்பிக்கிறது.
சொந்தச் சீப்பு - கி. ராஜநாராயணன்
திரு.கி. ராஜநாராயணன் (கி ரா) அவர்களுடையப் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் புதுக்கோட்டை வீதி கலை இலக்கியக் களம் நடத்திய நிகழ்வில் கி.ராஅவர்களுடைய 'சொந்தச் சீப்பு' என்ற கதையைப் பகிர்ந்தேன். எனக்கு மிகவும் மகிழ்வான நிகழ்வில் மேலும் இனிமையூட்டினார் கி ராஅவர்கள் தன்னுடைய வருகையினால்.
சொந்தச் சீப்பு என்னுடைய யூட்யூப் தளத்தில்!
நண்பர்கள் பார்த்து உங்கள் கருத்துகளைப் பதிவிட வேண்டுகிறேன். நன்றி.
தி டெவில்'ஸ் அரித்மெடிக்
நான் ஏன் கசப்பான கீரைகள் சாப்பிடவேண்டும்? எதற்காக நினைவில் வைத்திருக்க வேண்டும்? என்றோ நடந்ததை ஏன் ஆண்டு தோறும் பேசவேண்டும்? இப்படி எண்ணற்றக் கேள்விகள் ஹானாவின் உள்ளத்தில் குமுறின. வாதிட்டு அழுது அரற்றினாலும் தாயின் கட்டளைக்கிணங்கி தாத்தா வீட்டுக்குச் செல்கிறாள். தாத்தா வில், பாட்டி பெல், வில்லின் தங்கை, ஆன்ட் ஈவா, தம்பி ஆரோன் எல்லோரும் இருக்கிறார்கள். தாத்தா வில் தொலைக்காட்சியில் பழைய காட்சிகளை ஓடவிட்டு திட்டிக் கொண்டிருந்தார். ஏன் பார்க்க வேண்டும்? ஏன் திட்ட வேண்டும்? ஹானாவிற்கு எரிச்சலாக இருந்தது.
வல்லினச் சிறகுகள் -அக்டோபர் 2020
வல்லினச் சிறகுகள் அக்டோபர் 2020 இல் என்னுடைய இரு கவிதைகளும், சாதனைப் பெண் புதுக்கோட்டை மாணவி ஜெயலட்சுமியுடன் என் நேர்காணலும்.
அறம் தள்ளுதல் மறமோ
பிரதிலிபியில் இக்கவிதை.
இக்கவிதையின் ஆங்கில ஆக்கத்தையும் என்னுடைய ஆங்கிலத் தளத்தில் பதிவிட்டுள்ளேன். நண்பர்கள் பார்த்து உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள். நன்றி.
ஆலந்தூர் கோ. மோகனரங்கன் பன்னாட்டுக் கவியரங்கம்
முத்தமிழ்க் கவிஞர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல், அக்டோபர் 4ஆம் நாள், அவருடைய மகனார் முனைவர் திரு.பாட்டழகன் அவர்களால், பன்னாட்டுக் கவியரங்கம் நடத்திச் சிறப்பிக்கப்பட்டது. 'தமிழே எங்கள் தலைமை' என்ற முதன்மைத் தலைப்பில் சிறப்பாக நிகழ்ந்த இக்கவியரங்கில் நான்கு அமர்வுகளில், 12 துணைத்தலைப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டக் கவிஞர்கள் உலகெங்குமிருந்து கவிதைகள் வாசிக்க, ஏறக்குறைய 8 மணிநேரம் நடந்து சாதனைக் கவியரங்கமாகவே அமைந்தது.
மகாகவி ஈரோடு தமிழன்பன் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி
மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் 87ஆவது பிறந்தநாளில் நடத்தப்பட்ட இணையவழிச் சிறப்பு நிகழ்வில் கவிதை வாசித்த வாய்ப்பிற்கு நன்றியுடனும் மகிழ்வுடனும் இங்கே பகிர்கிறேன்.
'தமிழே அமுதே ' - முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே - நூலறிமுகம்
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை தோறும் இணையவழி நிகழும் 'தமிழே அமுதே' நிகழ்ச்சியில் நான் அன்பு அண்ணன் கவிஞர் திரு.நா.முத்துநிலவன் அவர்களின் 'முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே' எனும் நூலை அறிமுகம் செய்தேன். பெரும் வரவேற்பைப் பெற்றது இந்நூல். இந்நூலினைப் படிக்க வேண்டும் என்று பலரும் என்னிடம் கேட்டபடியுள்ளனர்.
திரு. வி. க. கல்லூரி பன்னாட்டுக் கவியரங்கம் - நான் வாசித்த கவிதை
நான் மட்டும் மாறியிருக்கிறேன்
காற்றிலாடும் மரங்களும்
அவற்றில் ஆடும் இலைகளும்
500ஆவது பதிவு பன்னாட்டுக் கவியரங்குடன்
இணைய மேடை இங்கிதங்கள்
Dr. Muthulakshmi Reddy | மரு.முத்துலட்சுமி ரெட்டி
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தில் மகளிர் வாரக் கொண்டாட்டத்தில் (தகவல் பதிவு), சமூகத்தில் தடம் பதித்தத் தாரகை மரு.முத்துலட்சுமி ரெட்டி அவர்களைப் பற்றி நான் பகிர்ந்து கொண்டதன் காணொலி.
என்னுடன் இன்னும் நான்கு தோழியர் பகிர்ந்து கொண்ட முழு நிகழ்ச்சியையும் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் முகநூல் பக்கத்தில் பார்க்கலாம்.
தந்தையர் நாள் வாழ்த்து
தந்தையாகிச் சிந்தை நெகிழ்ந்தாலும்
தன்னுடலில் தாய்போல் உணராமல்
புரிந்தும் புரியாமலும்
பரிவும் பரிதவிப்புமாய் பொறுப்பினை மனம்சுமந்து
குழந்தை துள்ளுவதாய்த் தாய் சொல்ல
துள்ளி வந்து தாய்வயிறு தொடுவதற்குள்
குழந்தை புரண்டுபடுத்து துயில் தொடரும்
ஏமாற்றமும் ஏக்கமும் மகிழ்வில் மறைத்து
ஏங்கி தாங்கிக் காத்திருந்து
மென்பூவாய் பிஞ்சு கைவர
மென்மை கையில் திரட்டி
மனம்தாங்கியச் செல்வத்தை ஏந்தி
அன்பூறி அகம் நிறையக் கண்டு
தோள் தாங்கி கையில் தாங்கி
வாழ்வெலாம் உள்ளத்தில் தாங்கி
பிள்ளையே வாழ்வென கடமையாற்றி
அரணாய் அரவணைக்கும் அப்பாக்கள் போற்றி !
தந்தையர் அனைவருக்கும் தந்தையர் நாள் வாழ்த்துகள்!
அன்னையர் நாள் - இவளின்றி நானா?
வாழ்வில் ஒவ்வொரு வெற்றியிலும் மகிழ்வின் தருணங்களிலும் என் தந்தையை நினைத்து அவரைப் பற்றி சிலாகித்துப் போற்றிய நான் ஒருபோதும் என் தாயைப் பற்றி, அவர் செய்த தியாகங்கள், அவருடைய நிபந்தனை இல்லாத எல்லையில்லாத அன்பினை, வீட்டிற்கு வரும் நண்பர்கள் உறவினர்கள் அனைவரையும் அரவணைத்துக் குடும்பத்தை நடத்தியப் பாங்கையும் பற்றிப் பேசியதில்லை.
மகளிர் வாரம் முதல் நாள் - ஆசிரியர்களுக்கு

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் மகளிர் வாரம் என்று கொண்டாடுகிறது. ஆண்டுதோறும் மே மாதத்தில் ஒரு நாள் கொண்டாடப்பட்ட மகளிர் நாள் இந்த ஆண்டு ஒரு வாரமாக இணையவழியில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் ஆசிரியர்களுக்கு அர்ப்பணம். இணைய இணைப்பில் நாற்பது பேருக்கும் மேலாக இணைந்து ஒன்றரை மணித்துளிகள் சிரிப்பும் விளையாட்டும் கவிதையும் என்று கலகலத்தது.
தேன்மதுரத் தமிழோசை - யூட்யூப் மற்றும் டிக்டாக்
வீரயுக நாயகன் வேள்பாரி - சு. வெங்கடேசன்
பாரியைப் பற்றி அறிந்துகொள்ள பறம்பேறிய கபிலர் உடனே நானும் பயணித்தேன். பறம்பையும் பாரியையும் அறிதலில் அவர் வியந்ததைப் போன்றே நானும் வியந்தேன். பாரியின் அன்பிலும் அறத்திலும் கட்டுண்ட பெரும்புலவர் போன்றே நானும் கட்டுண்டேன். பறம்பின், பறம்புத்தலைவனின் இயற்கை அறிவையும் வீரத்தையும் அணு அணுவாக ரசித்து மயங்கிக் காதலில் விழுந்தேன். ஆம் இதுவும் காதல்தான்!
கரோனா
பகீர்
ஒவ்வொருவரும் சமநிலைக்கு - உலக மகளிர் நாள் 2020
![]() |
படம்: நன்றி இணையம் |
உலக பெண்கள் நாள் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக பெண்கள் நாளுக்கு ஒரு கருத்தை மையமாக அறிவிக்கும். அவ்வகையில் இவ்வாண்டு #EachforEqual, #ஒவ்வொருவரும்சமநிலைக்கு என்பதே கருவாக அறிவிக்கப்பட்டது. ஒவ்வொருவரும் சமநிலைக்கு, ஒவ்வொருவரும் சமநிலை நோக்கி என்று நாம் கொள்ளலாம்.
பொங்குக பொங்கல்
பொங்குக இனிய பொங்கல் பட்டினி மறைய பாரில் பொங்குக இனிய பொங்கல் போரினி அறுக மண்ணில் பொங்குக இனிய பொங்கல் படிப்பினில் அழுத்...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். "வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...