'பாட்டன் காட்டைத் தேடி' - இரண்டாவது கவிதைத் தொகுப்புமுதல் குழந்தை பிறக்கும்பொழுது அம்மா ஆகிவிட்டேன்  என்று ஆனந்திக்கும் தாய்மனம் அடுத்தக் குழந்தைக்கும் அதே அளவில், ஏன் இன்னும் அதிகமாய்க்கூட ஆனந்திக்கும். ஒவ்வொரு குழந்தையும் ஆனந்தம், பூரிப்பு! அதுபோலவே என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தபொழுது மகிழ்ந்தேன். என் இரண்டாவது கவிதைத் தொகுப்பிற்கும் பன்மடங்கு மகிழ்கிறேன். நண்பர்களின் ஊக்கத்திற்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

யாழிசை இல்லறம் - ஐங்குறுநூறு 402

  ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. தலைவனும் தலைவியும் திருமணம...