ஹிச்கி - பார்க்க வேண்டிய ஒரு சமூகத் திரைப்படம்

 ராணி முகர்ஜி நடித்து 2018இல் வெளியான இந்தித் திரைப்படம் 'ஹிச்கி'.  வித்தியாசமான உடல்நலக் குறைபாட்டை சமூகத்தில் அனைவரும் அறிந்திருப்பதில்லை. அது பரவாயில்லை, அனைத்தையும் அறிந்திருக்க முடியாது என்பதை நம் பாட்டி சொல்லிக் கொடுத்திருக்கிறாரே, "கற்றது கைமண் அளவு" என்று! ஆனால் ஒரு நோயை அறிய வரும்பொழுது எப்படிக் கையாள்கிறோம் என்பதில் தான் சான்றாண்மை இருக்கிறது! 

பொதுவாகச் சமூகத்தில் புதிய ஒரு நோயைக் காணும்பொழுது அதனைக் கிண்டல் செய்வதையும்  பாதிக்கப்பட்டவரைச் சாதாரணமாக, சக மனிதராக நடத்தாத நிலையையும் பேசும் இப்படம் இன்னும் சில விசயங்களையும் சிறப்பாக எடுத்துக்காண்பிக்கிறது. 

சொந்தச் சீப்பு - கி. ராஜநாராயணன்

 

திரு.கி. ராஜநாராயணன் (கி ரா) அவர்களுடையப் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் புதுக்கோட்டை வீதி கலை இலக்கியக் களம் நடத்திய நிகழ்வில் கி.ராஅவர்களுடைய 'சொந்தச் சீப்பு' என்ற கதையைப் பகிர்ந்தேன். எனக்கு மிகவும் மகிழ்வான நிகழ்வில் மேலும் இனிமையூட்டினார் கி ராஅவர்கள் தன்னுடைய வருகையினால். 

 

சொந்தச் சீப்பு என்னுடைய யூட்யூப் தளத்தில்!


நண்பர்கள் பார்த்து உங்கள் கருத்துகளைப் பதிவிட வேண்டுகிறேன். நன்றி.


பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...