குடும்பமாகிய நட்பு. அப்பாவின் நெருங்கிய நண்பர், இருவர் குடும்பத்தினரும் ஒன்றாகிப்போன அன்பு. எங்கள் நலம் விரும்பி.
முத்தான இந்த மாமா என்னைத் தூக்கி வளர்த்தவர். வாழ்வில் ஒவ்வோரு நிகழ்விலும் இருப்பார் -நான் பிறந்ததிலிருந்து என் குழந்தைகள் பிறந்த நேரத்திலும்... தீபாவளி, கிறிஸ்துமஸ் என்று பண்டிகைகளும் இவரில்லாமல் இருந்ததில்லை. எங்கள் குடும்ப இன்பதுன்பங்களில் என் அப்பாவிற்குத் தோள் கொடுத்து நின்றவர். இவருடைய அகன்ற அறிவும் வாசிப்பனுபவங்களும் சிரிப்போடு ஒலிக்கும். அன்பில் வான்தொடுவார், எளிமையின் பாதங்கள் தரைதொட்டே இருக்கும்.
நிறைய இருக்கிறது..! நினைவுகளில் ஏங்குவேன் பலநாட்கள். என் நூல் வெளியீட்டு விழாவிலும் மகிழ்ந்து உரையாற்றியவர். மாமா, என் எழுத்தில் சற்று பிடித்து வைக்கிறேன் உங்களை.
'பிரதிபா எப்டிம்மா இருக்க?' என்று அவர் குரல் பாசத்துடன் கேட்கிறது. சிரித்த முகம் தெரிகிறது..பின்னர் கலங்கி கன்னத்தில் வழிகிறது. ஆம், மாமாவை எடுத்துக்கொண்டார் இறைவன். மாரடைப்பு எப்படி வந்தது? ஊரடங்கு உத்தரவு அதற்கில்லையோ? தானே வண்டியோட்டி மருத்துவமனை சென்றவருக்குத் திரும்பி வர முடியலியே.. பிள்ளைகளும் வரமுடியாமல் சூழ்நிலைச் சட்டங்களால் அவசரச் சடங்குகள்! நானே தேற முடியவில்லை..அம்மா அப்பாவிடம் என்ன சொல்வது! அத்தை என்ன செய்கிறாரோ! தம்பி, தங்கைகள் எப்படித் தாங்குவர்? ஓடோடி உதவும் மாமாவிற்காக ஓடமுடியா கொடுமை, ஊரடங்கால். அன்பு முகம் உற்றவர் எல்லாம் பார்க்கமுடியாதக் கொடுமை! சிரித்த முகமே நினைவில் வாழட்டும் என்பதாலோ? தூய இதயம் ஓய்வெடுக்கட்டும் என்று ஆண்டவர் அழைத்துக் கொண்டார்.
மாமா, 'ஆண்டவன் இருக்கான் (என் தந்தை பெயர்)' என்பீர்களே, அந்த ஆண்டவனோடு தானே இருக்கிறீர்கள்? அமைதியில் இளைப்பாறுங்கள்.
உங்கள் அன்பு எங்குச் சென்றுவிடப்போகிறது? மிஸ் யூ மாமா இப்புவியில், ஆனால் எங்களுடன் என்றும் இருப்பீர்கள்.
கண்ணீருடன், பிரதிபா.
கொரோனா வைரஸ் பிரச்சினையால் இதுபோல் சில முக்கிய பிரச்சினைகள கவனிக்க முடியாமல் கொரோனோவிலேயே தேவைக்கு மேல் கான்சென்ட்ரேட் செய்து இதுபோல் இழப்புகள் நடக்கின்றன. :(
பதிலளிநீக்குசாரி,ங்க, Grace! :(
நன்றிங்க வருண்.
நீக்குஎப்படி இருக்கீங்க, வருண்?
நீக்குI am all right, Grace. Thanks. I guess I am keeping my life really busy because boredom will kill me if not Caronavirus! :)
நீக்குகொடுமை ...கொரோனா மனித இனத்திற்கு பாடம் கற்பிக்கும் சூழலில் நாமும் சிக்கிக் கொண்டோம்
பதிலளிநீக்குஆமாம் கீதா
நீக்குஉங்களின் இழப்புக்கு ஆழந்த வருத்தங்கள் கிரேஸ்
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்கு
பதிலளிநீக்குஇந்த வைரஸ் மனிதர்களுக்கு பல பாடங்களை கற்று தருகிறது...ஆனால் அதை அவர்கள் கற்று கொள்கிறார்களா என்பது ஒரு கேள்விக்குறியே
ம்ம்ம்..உண்மைதான்
நீக்குசூழ்நிலைக் கைதிகளாக நாம் எல்லோருமே இப்போது...
பதிலளிநீக்குஅவரது குடும்பத்தினருக்கு இந்த இழப்பிலிருந்து மீளும் மன திடத்தை எல்லாம் வல்லவன் அருளட்டும்.
நன்றி அண்ணா
நீக்குமிகவும் வருத்தப்படுகிறேன் சகோதரி... ஆறுதல்படுத்திக் கொள்ளுங்கள்...
பதிலளிநீக்குநன்றி அண்ணா
நீக்குஸாரி தாமதமாக வருகிறோம். ஆழ்ந்த வருத்தங்கள். உங்கள் மாமா குடும்பத்தினருக்கும் உங்கள் எல்லோருக்கும் இதிலிருந்து மீள இறைவன் அருளட்டும் க்ரேஸ்
பதிலளிநீக்குகீதா
ஓ..அப்படி எல்லாம் இல்லை கீதா.
நீக்குநன்றி கீதா
இறுதி மரியாதை செலுத்த முடியாத மரணத்தின் கனம் குறைவதேயில்லை! கிரேஸ் dear மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்! வேறென்ன சொர்ல முடியும்...
பதிலளிநீக்குஆமாம்...நன்றி டியர்
நீக்குதங்களது துயரத்தில் நாமும் பங்கு எடுக்கின்றோம்
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஆழ்ந்த வருத்தங்கள் கிரேஸ். நினைவுகளே இனி நிரந்தரம். அப்பா அம்மாவையும் மாமாவின் குடும்பத்தாரையும் தேற்றுங்கள்.
பதிலளிநீக்குஆமாம் கீதா. நன்றி
நீக்குஇந்தப் பாரம் குறையட்டும்
பதிலளிநீக்குஅவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்
நன்றி அண்ணா
நீக்கு