முகநூலில் சிரிக்குது

Image: thanks to internet
 
டேக் இட் ஈஸி உலகம்
இலேசாக எடுத்துக் கொள்வதே
வாழ்வு முறையானதோ...

பூனைகள் ஆனோமோ
கண் மூடிக்கொண்டால் உலகம் இருட்டென்று...
இல்லையில்லை
தன் வீட்டில் அடுப்பெரிந்தால்
தரணியே பசிதீர்த்ததென்று
உலகப்போர் காலங்களில்
மீம்ஸ் இல்லையே...
மஞ்சள் காய்ச்சல் காலரா
கொன்றபோது இருந்ததா?
இருபத்தொன்றாம் நூற்றாண்டில்
உயிர் மதிப்பு இழந்ததோ
உலகமயம் ஆக்கலுக்கு முன்
ஊரே ஒப்பாரி வைத்தது
பின்னோ
அடுத்த வீட்டில் எழவென்றாலும்
முகநூலில் சிரிக்குது


10 கருத்துகள்:

  1. படிக்க உறுத்தினாலும் இதுதானே நிஜம்..

    பதிலளிநீக்கு
  2. அருமையான கண்ணோட்டம்

    கொரோனா தொற்றில் இருந்து முற்காப்பு எடு!
    http://www.ypvnpubs.com/2020/03/blog-post_15.html

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை

 கொக்கரக்கோ இலக்கிய வட்டம் திங்கள் தோறும் நடத்தும் சிறுகதை பகிர்வு நிகழ்ச்சியில் சாகித்ய அகதெமி விருது பெற்றிருக்கும் எழுத்தாளர் அம்பை அவர்க...