நற்றிணை நல்ல குறுந்தொகை அறிவாயோ
ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து அறிவாயோ
ஓங்கு பரிபாடல் படித்தாயோ
கற்றறிந்தார் ஏற்றும் கலித்தொகை கண்டாயோ
அகம் புறம் என்று இரு நானூறு பயின்றாயோ
இந்த எட்டுத்தொகையும் சொல்லும் அகம் புறம் பற்றி அறிவாயோ!
முருகராற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
மலைப்படுகடாம் மதுரைக்காஞ்சி
குறிஞ்சிப்பாட்டு முல்லைப்பாட்டு
பட்டினப்பாலை நெடுநல்வாடை
என்று பத்துப் பாட்டும் சொல்லும் இயற்கையும் வாழ்வும் அறிவாயோ!
இவை ஏதும் அறியாமல் 'ஹலோ' 'ஹாய்' என்று சிலாகித்து
'ஐ ஸ்பீக் இங்கிலீஷ் ' என்று வெட்டி பெருமை பாராட்டிக் கொண்டு
கண் மூடியிருக்கும் தமிழா!
நீதி நூல்களும் இலக்கியச் செல்வமும் நிறைந்த தமிழைப் பார்!
படித்து அறிந்து கண்ணைத் திற! உண்மையான பெருமை கொள்!
'ஐ ஸ்பீக் இங்கிலீஷ், ஷால் ஐ டெல் யூ அபௌட் தமிழ்'
என்று இறுமாந்து தாய் மொழியை எவ்விடமும் கொண்டு செல்வாயோ!