எங்கோ

படம்: நன்றி இணையம்

எங்கோ அழும் அழுகை என் காதில் கேட்கிறது
எங்கோ எரியும் நெருப்பு என் நெஞ்சைச் சுடுகிறது

உலகத் தாய்மொழி நாள் பா - சங்கத் தமிழே தாயே

தமிழன்னை படம்: நன்றி இணையம்

தமிழே தாயே தாய்மொழியே தவமே
அமிழ்தே அன்னாய் பைந்தமிழே
அறிவே ஆன்றோர் அறமொழியே
செறிவே என்றும் என்னுயிரே
உலகில் எங்கு வாழ்ந்தாலும்
சொல்லில் நீயே ஊறிடுவாய்
உற்றார் தூர உறைந்தாலும்
சுற்றம் சேரத் தூண்டிடுவாய்   
எங்கும் தமிழர் சேர்ந்திடவே
சங்கத் தமிழே சங்கமிப்பாய் தாயே


நூறுநூறு ஆயிரமாய்


படம்: நன்றி இணையம்
காதல் ஆழ்ந்த அன்பினது, காதலுக்குத் தோள்கொடுத்த எதனையும் மறக்காது நன்றி பாராட்டும்! இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த தமிழர் காதலோடுஇயற்கையும் போற்றினர்.

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா
எல்லோருக்கும் எங்கும்
சுவாசித்தல் போல
வாசித்தல்புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2020
நகர் மன்றம்
பிப்ரவரி 14 முதல் 23 வரை
காலை 9.30 முதல் இரவு 9 வரை
நடத்துபவர்:  தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

சென்று வாங்கி வாசிப்பவர் : நாம் தான்
பயனடைபவர்: நாமே தான்.


சுவாசிக்க வாசிப்போம், வாசிக்க சுவாசிப்போம்கருங்கடர்க் கொண்டல்


படம்: நன்றி இணையம் 
கீழ்த்திசைக் கதிரோன் கடலெழும் முன்பே
பளிச்சிட்ட ஒளியில் கண்கள் மலர்ந்தேன்
வாள்ஒளி வானம் கீறக் கண்டேன்
வாட்சண்டை வீரர் முழங்கக் கேட்டேன்

யாழிசை இல்லறம் - ஐங்குறுநூறு 402

  ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. தலைவனும் தலைவியும் திருமணம...