வல்லினச் சிறகுகள் -அக்டோபர் 2020


 வல்லினச் சிறகுகள் அக்டோபர் 2020 இல் என்னுடைய இரு கவிதைகளும், சாதனைப் பெண் புதுக்கோட்டை மாணவி ஜெயலட்சுமியுடன் என் நேர்காணலும்.

உலகப் பெண் கவிஞர் பேரவை, அட்லாண்டா, வெளியிடும்  மின்னிதழ் 'வல்லினச் சிறகுகள்'! ஒரு துளிக் கவிதை, புதுச்சேரி திரு.அகன் அவர்களால் தொடங்கப்பட்டு அவருடைய வழிநடத்துதலில் சிறப்பாகச் செயல்படுகிறது உலகப் பெண் கவிஞர் பேரவை. இதன் ஒரு சிறப்பம்சமாக 'வல்லினச் சிறகுகள்' செப்டெம்பர் 2020 இல் தொடங்கப்பட்டது.

அக்டோபர் 2020 இதழில்:

பன்னாட்டுக் கவிஞர்களின் வாழ்த்துரைத் துளிகள், கவித்துளிகள், அயலகத்தில் "தமிழன்பன் 80" விருது பெற்றோர் பட்டியல்,  உலகப் பெண் கவிஞர்களின் கவிதைப்  பூக்கள், மொழிபெயர்ப்புக் கவிதை, நூல் விமர்சனம், உலகப் பெண்கவிஞர் யார் எவர், நேர்காணல்கள் மற்றும் வாசகர் விமர்சனத்தோடு மகாகவி ஈரோடு தமிழன்பன் 87ஆவது பிறந்தநாள் சிறப்பிதழாக உலா வருகிறது இம்மாத இதழ்! வழிநடத்திச் செல்லும் ஒருதுளிக்கவிதை, புதுச்சேரி  திரு.அகன் ஐயாவிற்கும், அழகுற வடிவமைத்த திரு. லோகராஜ் குழுவிற்கும், உழைத்த ஒவ்வொருவருக்கும் ஆசிரியர் குழுவிற்கும் நன்றிகள்!

 ஆசிரியர் குழுவில் அன்புத் தோழி மு.கீதா அவர்களும் ஒருவர். 

இவ்விதழில், நாசா செல்லத் தேர்ந்தெடுக்கப் பட்ட  புதுக்கோட்டை மாணவி , தன் கிராமத்திற்குக் கழிவறை வசதி செய்துகொடுத்துச் சாதனை படைத்த ஜெயலட்சுமியை நான்நேர்காணல் செய்ததும் மகிழ்ச்சி. அனைவருக்கும் ஒருஉந்துசக்தியாக விளங்கும் அவரை வாழ்த்துவோம். நேர்காணலை இதழில் படியுங்கள் 42ஆம் பக்கம். 


இதழை வாசிக்க மற்றும் பகிர:
https://tinyurl.com/yxoyvds7 








மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் பிறந்தநாள் சிறப்பு நிகழ்வைக் குறித்தப் பதிவின் இணைப்பு.

10 கருத்துகள்:

  1. சிறப்பான அறிமுகம்.. கவிதையும் வாழ்த்துக்கள் மா

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...