பாரதியார் பிறந்த நாள் - வெண்பா
மகாகவி பாரதியார் பிறந்த நாளில் அவர்தம் புகழ் போற்றி தமிழ் போற்றி ஒரு பாமாலை. நெஞ்சுரமூட்டி விடுதலை உணர்வை விதைத்து அச்சமும் மடமையும் கொளுத்திய உன் புகழ் வாழ்க!
நெஞ்சு பொறுக்குதில்லையே என்றவர் அன்று பாடியதை இன்றும் பாடும் சூழலையெல்லாம் கொளுத்திடவே மனம் ஏங்குதே. மேனி செழித்தத் தமிழ்நாடு மேனி வாடுதல் அறிவாயோ? மனதில் உறுதி கொண்ட அக்கினிக் குஞ்சுகள் எந்தக் காட்டினில் வைத்தாய் சொல்வாயோ?
தமிழகம் கண்ட பெண் ஆளுமை
தமிழகம் கண்ட பெண் ஆளுமை முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கண் மூடி மண்ணில் தஞ்சம் புகுந்த நாள் இன்று. வேறுபாடுகள் ஒதுக்கி மாநிலம் முழுவதும் நாடு முழுவதும் துக்கம். என் மனதும் ஒருவித கனமாக ஒருவித சோகமாக உணர்கிறது. பதின்ம வயதில் நான் அடியெடுத்து வைத்த காலமும் ஜெயலலிதா அவர்கள் தன்னுடைய அரசியல் வாழ்வில் அழுத்தமாக அடியெடுத்து வைத்தக் காலமும் ஏறக்குறைய ஒன்று. இரட்டை இலையென்றும் இரட்டைப் புறாவென்றும் தேர்தல் சந்தித்த நாட்கள் அவை. புரிந்தும் புரியாத வயதில் நாளிதழ்களை வாசித்துவிட்டுக் கடந்து சென்றுவிடுவேன். இரட்டைப் புறாக்கள் காணாமல் போய் இரட்டை இலை நன்கு துளிர்த்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை
கொக்கரக்கோ இலக்கிய வட்டம் திங்கள் தோறும் நடத்தும் சிறுகதை பகிர்வு நிகழ்ச்சியில் சாகித்ய அகதெமி விருது பெற்றிருக்கும் எழுத்தாளர் அம்பை அவர்க...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
பொன்விழா கொண்டாடும் நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழு 'வெள்ளிதோறும் இலக்கிய உலா' என்ற நிகழ்வினை சிறப்பாக நடத்தி வருகின்...
-
அவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..


