விளம்பர இடைவெளி இல்லை...

அன்பு வலைத்தள நண்பர்களுக்கு,

பதிவர் சந்திப்பைப் பற்றியும் நூல் வெளியீடுகளைப் பற்றியும் எழுத ஆவலாக இருந்தாலும் சற்றுத் தள்ளிப்போட வேண்டிய நிலையில் இருக்கிறேன். நாளை மறுநாள் 31ஆம் தேதி அமெரிக்காவிற்குச் செல்லவிருப்பதால் பிரயாண ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறேன். அதனால் அங்கு சென்று ஓரிரு வாரங்கள் கழித்துப்  பதிவுகள் இடுவேன், உங்கள்  வலைப்பூக்களுக்கும் வருவேன்.என் நூலைப் படித்து தங்கள் கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

வாழ்த்துகள்!
அன்புடன்,
கிரேஸ் 

மழைக் காதலியே ... வருக! - கவிஞர் ஆர்.நீலாவின் மதிப்புரை

நூல் வெளியீடு அன்று கவிஞர் நீலா அவர்கள் ஒரு புத்தகம் கொடு என்று கேட்டார்கள். அப்பொழுது கையில் இல்லாததால் சென்று எடுத்து வந்து கொடுத்தேன். இடையில் பேசிய நண்பர்களின் உரையாடலில் சிறிது நேரம் கழித்தேக் கொடுத்தேன். ஆனால் கவிஞர் ஆர்.நீலா அவர்களோ உடனடியாகப் படித்துவிட்டு அங்கேயே மதிப்புரையும் எழுதிக் கொண்டுவந்து தந்தார்கள். அவர்களின் அன்பில் நெகிழ்ந்து விட்டேன். அவர்களுக்கு மனம்நிறை நன்றியைச் சமர்ப்பித்து அவர் எழுதிக் கொடுத்ததை இங்கே தட்டச்சுகிறேன்.
 


-----------------------------------------------------------------------------------------------------------------------
               புழுக்கமான உச்சிவெயில் நேரத்தில் ஒரு வேப்பமரக்காற்று வீசினால் சட்டென்று ஒரு புத்துணர்வு தோன்றுமே...அப்படித்தான் இருந்தது 'துளிர் விடும் விதைகள்' கவிதைத் தொகுப்பைப் படித்ததும். அவரது கவிதைத் தொகுப்பைப் போலவே அவரும் ஒரு ஐந்தரை அடி அருவிதான்...!
               வாழ்க்கையின் அவசரகதியில் நாம் தவறவிடும் அற்புத கணங்களை தன் கவிதையில் குட்டி குட்டியாய்ப் பதிவு செய்திருக்கிறார் சகோதரி கிரேஸ் பிரதிபா. கூடவே சூழல் விழிப்புணர்வை பாலில் கலந்த தேன் போல உறுத்தாமல் இயல்பாகத் தருவதிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

துளிர் விடும் விதைகள் - மலர்தரு கஸ்தூரி அண்ணாவின் வாழ்த்துரை

கவிஞர் கிரேஸ் பிரதீபாவின் துளிர் விடும் விதைகள் கவிதைத் தொகுப்பை வாழ்த்தும் முகத்து இங்கே உங்கள் முன்னே நான். 

நல்ல கவிதை என்பது ஆகச் சிறந்த வார்த்தைகளை ஆகச்சிறந்த வரிசையில் அடுக்குவது என்பார் ஆங்கிலக் பெருங்கவி சாமுவேல் டைலர் கோல்ரிட்ஜ். தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் கிரேஸ் பிரதீபா கட்டிய வானவில் தோரணம் துளிர் விடும் விதைகள். 

மொழியை நேசிப்போர் வியந்து ரசிக்கும் வார்த்தை பயன்பாடு இந்நூலெங்கும் விரவி ஜாமுன் ஜீராவாய் இனிக்கிறது.  

வலைப்பதிவர் திருவிழாவில் நூல் வெளியீடு


இதோ வந்துவிட்டது வலைப்பதிவர் திருவிழா. ஏற்கெனவே அறிந்தவரை எல்லாம் கண்டு மகிழவும், அறியாதவரை அறிந்துகொள்ளவும் பதிவர்கள் கூடும் இனிய திருவிழா. இத்திருவிழாவில் எனது முதல் கவிதைத்தொகுப்பு வெளியிடுவதை எண்ணி மனம் மகிழ்கிறேன். என்னுடைய நூல் வெளியீடு நிகழ்ச்சி நிரல் வருமாறு:

தலைமை : கவிஞர் திரு.நா.முத்துநிலவன் (தமிழாசிரியர், த.மு.எ.ச. மாநிலத்துணைத்தலைவர்)
இவரின் வலைப்பக்கம் http://valarumkavithai.blogspot.in/.

வெளியிட்டு வாழ்த்துபவர்: திரு.வின்சென்ட் (கோட்டப் பொறியாளர் - ஓய்வு, பி.எஸ்.என்.எல்., மதுரை, என் அன்புத் தந்தை)

பெற்றுக்கொண்டு வாழ்த்துபவர்: கவிஞர் திரு.நா.முத்துநிலவன் (தமிழாசிரியர், த.மு.எ.ச. மாநிலத்தலைவர்)

வாழ்த்துரை:
திரு.கஸ்தூரிரங்கன் (ஆசிரியர்)
இவரின் வலைப்பக்கம் http://www.malartharu.org/

திரு.ஓ.முத்து (துணைக் கோட்டப்பொறியாளர் - ஓய்வு, பி.எஸ்.என்.எல்., மதுரை)


ஏற்புரை: வி.கிரேஸ் பிரதிபா (வலைத்தளம் தேன் மதுரத்தமிழ்)

என் நூல் வெளியீட்டைச் சிறப்பிக்கும் இவர்களுக்கும் இதற்குத் தளம் அமைத்துக் கொடுத்தப்  பதிவர்த்  திருவிழா நிர்வாகக்குழுவின் சீனா ஐயா, தனபாலன் அண்ணா, பிரகாஷ், மதுரை சரவணன் சகோ மற்றும் அனைத்துப் பதிவுலக நண்பர்களுக்கும் என் மனங்கனிந்த நன்றிகள்.

அன்புடன்,
கிரேஸ் 

துளிர் விடும் விதைகள் - அணிந்துரை - எம்.ஏ.சுசிலா

திருமதி.எம்,ஏ.சுசிலா (http://www.masusila.com/) அவர்கள் பாத்திமா கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர்(ஓய்வு). எழுத்தாளராகத் தன் பணியைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார். நான் பாத்திமா கல்லூரியில் இயற்பியல் படித்தபொழுது எனக்கு நேரிடையாகப் பாடம் எடுக்காவிட்டாலும், அவரை நன்கு அறிவேன். அட்லாண்டாவில் இருக்கும்பொழுது வலைத்தளம் மூலமாகவே மீண்டும் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டேன். என் கவிதைத் தொகுப்பு வெளியிடப்போகிறேன் என்று கூறி அணிந்துரை கேட்டபொழுது மகிழ்வுடன் ஒப்புகொண்டார். அவருக்கு என் உளமார்ந்த நன்றி. அவர் வழங்கிய அணிந்துரையை  இங்கே பகிர்கிறேன்.

துளிர் விடும் விதைகள் - லவ் குரு முகவுரை

என் நண்பர் ஸ்ரீனி வழியாக அறிமுகமானவர் திரு.ராஜவேல். சென்னை ரேடியோ சிட்டி பண்பலையில் ரேடியோ ஜாக்கியாகப்(லவ்குரு) பணிபுரியும் அவர் தன் வேலை நெருக்கடிகளுக்கிடையிலும் என் கவிதைகளைப் படித்து உள்வாங்கி முகவுரை வழங்கியிருக்கிறார். திரைப்படத் துறையில் உதவி வசனகர்த்தாவாகவும்(கேடி பில்லா கில்லாடி ரங்கா, கப்பல்...) தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதுடன் அவர் வழங்கிய முகவுரையை இங்கே பகிர்கிறேன்.

“நற்றிணைக் காதலி“யின் இன்றைய கவிதைகள்! – நா.முத்துநிலவன் - முன்னுரை

என் கவிதைத் தொகுப்பான 'துளிர் விடும் விதைகள்' வடிவம் பெற்று அச்சுக்குச் செல்ல பெரிதும் உதவிய திரு.முத்துநிலவன் அண்ணா அன்புடன் முன்னுரையும் வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு என் மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அவர் வழங்கிய முன்னுரையை இங்கே பகிர்கிறேன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 “கன்னடமும், களிதெலுங்கும், கவின்மலையாளமும்“ தமிழிலிருந்து கிளைத்தெழுந்த மொழிகள் என மனோண்மணீயம் பெ.சுந்தரனார் பாடுகிறார். மொழிநூல் வல்லுநர்களும் அவ்வாறே சொல்கிறார்கள். ஆனால் அதனால் தமிழுக்கென்ன பெருமை என்று எனக்குத் தெரியவில்லை. “உலகின் மிக அதிக வயதானவர் என் தாத்தா” என்று சொல்வதில் பேரனுக்கு உள்ள பெருமையன்றி, பேரனின் இன்றைய நிலை என்ன? என்பதல்லவா முக்கியம்?

துளிர் விடும் விதைகள் - புத்தகவெளியீடு

 நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் மதுரையில் நடைபெறவிருக்கும் மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பில், என் முதல் கவிதைத் தொகுப்பு - துளிர் விடும் விதைகள் வெளியிடப்படுகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


இடம்: நடன கோபால நாயகி மந்திர்,
               3, தெப்பக்குளம்
                மதுரை
நாள்: 26 அக்டோபர், ஞாயிற்றுக் கிழமை
நேரம்: மதியம் 2.30  மணியளவில்

வெளியிடுபவர்:         திரு.வி.வின்சென்ட் 
                                          கோட்டப் பொறியாளர் - ஓய்வு
                                          பி.எஸ்.என்.எல்.
                                         மதுரை
                                        (என் அன்புத் தந்தை )

பெற்றுக்கொள்பவர்: கவிஞர் திரு.நா.முத்துநிலவன் 
                                           தமிழாசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர்

என் நூலை வெளியிட்டும்  பெற்றுக்கொண்டும் வாழ்த்த  இசைந்த இவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!

வாழ்த்திப் பேச இசைந்திருக்கும் என் அன்பு அண்ணா,
                                          திரு.கஸ்தூரிரங்கன், ஆசிரியர்  (http://www.malartharu.org/) அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

வலைத்தளத்தில் என்னை ஊக்குவித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த  நன்றி.


அன்புடன்,
கிரேஸ் 

புத்தக வெளியீடும் அன்பின் வெளிப்பாடும்

முத்துநிலவன் அண்ணாவின் புத்தக வெளியீடு பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். அங்கு நடந்த மினி பதிவர் கூட்டம் பற்றியும் அறிந்திருப்பீர்கள். தெரியும், தெரியும் நீ என்ன சொல்ல வர? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. புதுக்கோட்டை சென்று இனிய நட்புகளின் அன்பில் நெகிழ்ந்து மெய்மறந்த என் அனுபவம் இது. எழுத தாமதமாகிவிட்டது, அதுவும் நல்லதுதான் - நீங்கள் மறந்திருந்தால் நினைவூட்ட வேண்டும் அல்லவா? (சிலர், நான் வர முடியலேன்னு வருத்தப்படும்பொழுது , நீ வேற...என்று சொல்வது கேட்கிறது..இருந்தாலும்)...
 
செல்லமுடியுமா முடியாதா என்ற குழப்பத்திற்கு இடையே எப்படியோ சென்று விட்டேன், அதை நினைத்து மகிழ்கிறேன். அலைபேசியில் அன்புடன் பேசிய நிலவன் அண்ணா, மல்லிகா அண்ணி இருவரும் மகிழ்ந்து வீட்டிற்கு வந்துவிடம்மா என்று அழைத்த அன்பு! வருகிறேன் என்று தகவல் சொன்னதிலிருந்து  மகிழ்ந்து எப்போ கிளம்புகிறேன், எங்கு இருக்கிறேன் என்று அன்புடன் அலைபேசியில் விசாரித்து உற்சாகம்  காட்டிய மைதிலி, கஸ்தூரி அண்ணா  மற்றும் கீதாவின் அன்பு! புதுக்கோட்டையில்,சாலையோரச்  சுவற்றில்  அழகாய் தீட்டப்பட்டிருந்த ஓவியங்கள் மனம் கவர்ந்தன. அதனை ரசித்துப் பார்த்துக்கொண்டே நகர் மன்றம் சென்றோம். அங்கு நிலவன் அண்ணாவும் உடனிருந்தவர்களும் மகிழ்ச்சியுடனும்  அன்புடனும்  வரவேற்றனர். விழா நாயகனாய் இருந்தாலும் எங்களை உபசரிக்க வேண்டும் என்ற நிலவன் அணணாவின் அன்பு பெரியது. அவருடைய அன்பான மகள் லட்சியா இனிமையானவர், அவரைப் பார்த்ததும் இரட்டிப்பு மகிழ்ச்சி...அண்ணனின்  இனிய துணைவியார் மல்லிகா அண்ணி எங்களை காபி அருந்த அழைத்துச் சென்றார். அதற்குள் சிட்டாய் பறந்து  வந்த கீதாவை பார்த்து மகிழ்ந்தேன்..அவரும் இணைந்து கொள்ள காபி அருந்தி வந்தோம்..மல்லிகா அண்ணியும் கீதாவும் உடனே இருந்தனர். அதற்குள் மைதிலியும், கஸ்தூரி அண்ணாவும், மகி குட்டியும் வந்துவிட அங்கு மகிழ்ச்சி நிறைந்தது. ஒருவரை ஒருவர் பார்த்த மகிழ்ச்சி, சிறு பரிசுகள் பகிர்ந்துகொண்டது, படங்கள் எடுத்துக் கொண்டது எல்லாம் இனிய நினைவாக மனதில் பதிந்துவிட்டன.தமிழ் இளங்கோ ஐயா, சகோதரர் கரந்தை ஜெயக்குமார், சகோதரர் ஸ்டாலின் சரவணன் இன்னும் பல புதுக்கோட்டை பதிவர்களையும் எழுத்தாளர்களையும் பார்த்தது மகிழ்ச்சி. இளங்கோ ஐயாவும் என் கணவரும்  புகைப்படங்கள் எடுத்தனர். 
புத்தக வெளியீட்டிற்குப் பின்னர், நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்ததால் விழா இறுதி வரை இருக்கமுடியாமல் கிளம்பினோம்..இங்கு வந்துவிட்டு சாப்பிடாமல் எப்படி போவீர்கள் என்று கஸ்தூரி அண்ணா, மைதிலி மற்றும் கீதா எங்களை அழைத்துச் சென்று உணவருந்தவைத்தே அனுப்பினர். உணவுடன் உள்ளத்து உரையாடல்கள். நிறைகுட்டியும் மகிகுட்டியும் நெருக்கமாகிவிட்டனர், அன்பாய்ப் பேசினர். மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் கிளம்பினோம்.

இன்னும் தகவல்களுக்கும் படங்களுக்கும் பார்க்க இந்த இணைப்புகள்:
மைதிலியின் பார்வையில் 

தமிழ் இளங்கோ ஐயாவின் பார்வையும் படங்களும் 

மு.கீதாவின் பார்வையில் 


வலைப்பதிவர்களே வாருங்கள், இது நம் திருவிழா!


வலைப்பதிவர்கள் திருவிழா, மதுரையில். வலைப்பதிவர்களே, நட்புகளே
வாருங்கள் சந்திப்போம்.

நிகழ்ச்சி நிரல் மேலே உள்ள படத்தில்!

உடைப்பது யாரோ

நன்றி:கூகிள் 

உயரத்தில்  தேங்காய்  உடைப்பது யாரோ
இடியுடன்  பெய்யும்  பொழிவு


கனவின் இசைக்குறிப்பு - மைதிலி கஸ்தூரிரங்கன்

பிப்ரவரி 2, 2024. 'கனவின் இசைக்குறிப்பு' கவித்துவமான தலைப்பு தன்னில் நிறுத்திப் பல மணித்துளிகளை இசைக்கிறது. இசைத்தட்டை கவனமாகத் திர...