காதலே உன்னைக் காதலிக்கிறேன்


என்னைப் புரியாமல்
உணராமல்
தூற்றுகிறார்களே
என்று கலங்கும்
காதலே
உன்னைக் காதலிக்கிறேன்
கலங்காதே!

நிமிர்ந்தோங்கி வாழ்ந்திடவே



தந்தையுடன் தானும் மதித்தேத்தும் மாண்புகளைச் 
சிந்தைதனில் ஊன்றிச் சிறந்திடவே - எந்நாளும் 
நிந்தை விலக்கி நிமிர்ந்தோங்கி வாழ்ந்திடவே 
தந்துலகில் எண்பிப்பாள் தாய்

திருமிகு.பாரதிதாசன் ஐயா அவர்களின் பாவலர் பயிலரங்கம் முகநூல் பக்கத்திற்காக எழுதியது. வெண்பா எழுதக் கற்றுக்கொள்ளும் தளம் அமைத்திருக்கும் ஐயா அவர்களுக்கு நன்றி.

போதை மருந்து..பள்ளிகள்..பலிகள்

               ஹெரோயின் போதை மருந்து தாராளமாகப் புழங்கி வந்ததும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அடிமையானதும், பல இளைஞர்கள் இதனால் உயிர் இழந்திருப்பதும் வெளிவந்திருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களில் போதை மருந்தினால் ஏற்படும் உயிர் இழப்புகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளன என்கிறார்கள் இதை வெளிகொணர்ந்துள்ள செய்தியாளர்கள், 4000% அதிகரித்திருக்கிறதாம்!! கற்பனை செய்ய முடிகிறதா? ஒரு முக்கோணப் பகுதியில் (மிகுந்திருக்கும் போதை மருந்து புழக்கம் பற்றிய செய்திகள் தற்பொழுது வெளிவந்து பெற்றோரைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கின்றன.

கேலியாய்ப் பறக்கிறாய்


எனக்காகப்  பாடுகிறாய்
என்றெண்ணி
ரசித்திருந்த வேளையில்
கேலியாய்ப் பறக்கிறாய்
கூடவந்த இணையுடன்!



தொடரும் தொடர் பதிவர்கள்

பதிவர்கள் பல விதம்! ஒவ்வொருவரும் ஒரு தனித்துவம்! சிலரைத் தொடரலாம், பலரை அறியாமல் இருக்கலாம். நாம் அறிந்தவரை பலரை  அறியாதவர்களுக்கு அறிமுகப் படுத்தினால் பலரை அறியாமல் இருப்பது சிலரை அறியாமல் இருப்பதாகக் குறையும் அல்லவா? குழப்ப வேண்டும் என்று நினைத்துக் குழப்பவில்லை, குழப்பவில்லை என்று சொல்லிக் குழப்பவும் இல்லை. குழம்பிக் கிளம்பிப் போய்விடாமல் தொடர்ந்து  வாசிக்க வேண்டும் என்று விழைந்து விளம்புகிறேன். வாசியுங்கள், நான் குழப்பாமல் கிளம்புகிறேன்.

தேர்வின் மதிப்பெண்களில் நசுக்கப்படும் திறமைகள்

Image: thanks Internet
" ஒவ்வொருவரும் மேதைதான். ஆனால் மரம் ஏறும் அளவுகோலை வைத்து ஒரு மீனை மதிப்பிடுவீர்களேயானால், அந்த மீன் தன் வாழ்க்கை முழுவதும் தான் ஒரு முட்டாள் என்றே நினைக்கும்." - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

கணினியின் முன்னோடிப் பெண்களைத் தெரியுமா? - உலக மகளிர் நாள் 2016

              மார்ச் 8 - சர்வதேச மகளிர் நாள்! இவ்வாண்டின் கருப்பொருள் 'சரிசமநிலைக்கு உறுதி எடுப்போம்'! பெண்களின் முன்னேற்றத்திற்கும் சம உரிமைக்கும் சர்வதேச பெண்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்ற நோக்கில் கொண்டாடப்படும் நாள். பெண்களை மதிக்கும் சமமாகப் பாவிக்கும் சமூகம் முழுவதுமாக அமையவில்லை என்பது மிகவும் வேதனையான விசயம். நிறுவனங்களில் உயர்பதவிகளில் பெண்கள் இருப்பது குறைவாகவே இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள், அவற்றை அலசி ஆராய்ந்தால் பெண் சமூகம் போராட வேண்டியிருப்பது அதிகம் என்று புரியும். முன்னோடிகளாயிருந்து வரலாற்றில் புதையுண்ட சில பெண்மணிகளைப் பற்றி பகிர்வதே இப்பதிவின் நோக்கம். அவர்களுக்கும் அனைத்து மகளிருக்கும் என்னுடைய மகளிர் தின அர்ப்பணிப்பாகவும்  சிந்தனை தூண்டும் சிறு தீபமாகவும் இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

விடுதலைப் பயணம் Freedom March

முந்தையப் பதிவுகளின் இணைப்புகள்
1.செல்மா 
2.மாரியன் 
3.ஜிம்மி லீ ஜாக்சன் 
4. ஜான் லூயிஸ் 
5. செங்குருதி ஞாயிறு


Image:thanks Google

         மகாத்மா காந்தியின் அகிம்சை வழியிலான போராட்டம் மக்களை ஈர்த்து ஆங்கிலேயரை ஆட்டம்காணச் செய்தது அல்லவா? அது போல செங்குருதி ஞாயிறும் அமெரிக்க மக்களின் உணர்ச்சிகளைத் தொட்டு அமெரிக்காவில் நிலவிவந்த வேற்றுமை வியாதியை நிலைகுலையச் செய்தது. அமைதியாக ஊர்வலம் சென்ற மக்கள் மேல் தடியடி நடத்துவதா? புகைக் குண்டுகள் வீசுவதா என்று அமெரிக்க மக்கள்  வெகுண்டனர். ஆமாம், அனைவரும் நிறவெறி பிடித்தவர்கள் அல்லவே!
         செங்குருதி ஞாயிற்றின் பலனாக மார்ச் 15ஆம் தேதி அப்போதைய அதிபர் திருமிகு.லிண்டன் பி.ஜான்சன் காங்கிரஸ் கூட்டத்தில் குடியுரிமை அமல்படுத்துவது பற்றி பேசினார்.

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...