இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இரட்டைப் படிவங்கள்

படம்
இவன் பெயரால் அவனையும் அவன் பெயரால் இவனையும் விளிப்பது வழக்கமே எழுத்திலும்  வந்தகுழப்பம் புதிது! இரட்டைப் படிவங்கள்!!!

புத்தாண்டில் முன்னோக்கி

படம்
படம்: நன்றி இணையம் ஆண்டிறுதி திரும்பிப் பாரென்றனர் பார்த்தேன்

பாரதியார் பிறந்த நாள் - வெண்பா

படம்
மகாகவி பாரதியார் பிறந்த நாளில் அவர்தம் புகழ் போற்றி தமிழ் போற்றி ஒரு பாமாலை. நெஞ்சுரமூட்டி விடுதலை உணர்வை விதைத்து அச்சமும் மடமையும் கொளுத்திய உன் புகழ் வாழ்க! நெஞ்சு பொறுக்குதில்லையே என்றவர் அன்று பாடியதை இன்றும் பாடும் சூழலையெல்லாம் கொளுத்திடவே மனம் ஏங்குதே. மேனி செழித்தத் தமிழ்நாடு மேனி வாடுதல் அறிவாயோ? மனதில் உறுதி கொண்ட அக்கினிக் குஞ்சுகள் எந்தக் காட்டினில் வைத்தாய் சொல்வாயோ?

கயல் போன்ற கண்கள்

படம்
மறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.

தமிழகம் கண்ட பெண் ஆளுமை

படம்
தமிழகம் கண்ட பெண் ஆளுமை முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கண் மூடி மண்ணில் தஞ்சம் புகுந்த நாள் இன்று. வேறுபாடுகள் ஒதுக்கி மாநிலம் முழுவதும் நாடு முழுவதும் துக்கம். என் மனதும் ஒருவித கனமாக ஒருவித சோகமாக உணர்கிறது. பதின்ம வயதில் நான் அடியெடுத்து வைத்த காலமும்   ஜெயலலிதா அவர்கள்  தன்னுடைய அரசியல் வாழ்வில் அழுத்தமாக அடியெடுத்து வைத்தக் காலமும் ஏறக்குறைய ஒன்று. இரட்டை இலையென்றும் இரட்டைப் புறாவென்றும் தேர்தல் சந்தித்த நாட்கள் அவை. புரிந்தும் புரியாத வயதில் நாளிதழ்களை வாசித்துவிட்டுக் கடந்து சென்றுவிடுவேன். இரட்டைப் புறாக்கள் காணாமல் போய் இரட்டை இலை நன்கு துளிர்த்தது.

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா

படம்
  புத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா! புத்தக வாசனை பிடித்து வாங்கி படித்து  வாழ்வில் சிந்தித்து  உயர்ந்திடவே  புறப்படுங்கள்  புத்தகத் திருவிழாவிற்கு! நவம்பர் 26 முதல் டிசம்பர் 4 வரை, புதுக்கோட்டை நகர் மன்றத்தில்! விதவிதமான அரங்குகள், நிகழ்வுகள் மற்றும் விவரங்கள் அறிய  இப்பதிவில் இணைத்துள்ள படங்களைப் பார்க்கவும். நன்றி!

நார் உரி ஆம்பல் மென்கால்

படம்
 தவறொன்றும் நிகழாதது போல வாயில் வேண்டி தூது வருபவரைக் கண்டால் சினம் வருகிறது தோழி. என்னைப் பார்த்தாலே புரியவில்லையா? அவர் செயலால் நான் முன்பிருந்த களையிழந்து வாடி நிற்பது?

நீ

படம்
Image: Thanks Google ஒவ்வோரடிக்கும் எட்டுத்திக்குகள்  எந்த திக்கிலும்  உடனிருக்கிறாய் நீ எண்ண அலைகள்  போராட்டம் என்கிறேன்  பேராற்றல் என்கிறாய் நீ 

காட்டுத்தீ

படம்
காட்டுத்தீ... காட்டுத்தீ எங்கோ என்று செய்திவரும் ஐயோ! மரங்கள்..!! மிருகங்கள்!! பறவைகள் பறந்திருக்குமா?!! மோதிடும்  எண்ண அலைகள்! ஆனால் இன்று? சென்றமாதம் மலையேறி வியந்து ரசித்த காடழிவதின் வெப்பம் கண்ணில் உணர்கிறேன் எரிச்சலும் புகைமூட்டமுமாய்!

நிசப்தம்

படம்
பனிவருடிய புல்லில் பருப்பெடுத்து ஓடுகிறது அணில் பறவை இரைக்குப்பியில் பசியாறுகிறது நூற்குஞ்சமுள்ள சிறுபறவை சூரியச் சிவப்பில் வந்துசேருகிறது

எழுத்தில் மட்டும்

படம்
கவிதை எழுதப் போகிறேன் என்றுதான் எழுந்தேன் சில மணிநேரங்களுக்குப் பின்

சாளரமருகில் சிலையென

படம்
Img: thanks Google உள்ளம் நனைக்கிறான் தொடாமலே! வேலைகள் விட்டு மயங்க வைக்கிறான்!

ஆம்பளடா

படம்
Img:thx google மூன்றுபேர் இருசக்கர வாகனத்தில் வேண்டுமென்றே குறுக்கே வெட்டி ஆட்டம் காட்டலாம்...

அட..நீங்கள் வேறு! Olympics memes

படம்
Image:Thanks Google படிபடி என்பார் பச்சைக் குழந்தையைப்  பள்ளிசேர்க்கப் பாடாய்ப்படுவார் பாடமென்றால்  கணிதமும் அறிவியலும் தான் கணித மேதையோ  அறிவியல் மேதையோ  அதிகம் இல்லை  சல்லடை போட்டுத் தேடிடுவோம்  பாதகமில்லை! பள்ளிதாண்டியும் வகுப்பு அதிலும்  முன்னால் நிற்கும் படிப்பு ஓடாதே...ஆடாதே.. கவனமாய்ப் படி என்பார் ஒப்பித்து ஒப்பித்து  ஒப்பேத்தும் நிலையில் ... திடீரென்று கூவுகிறார் ஒலிம்பிக் ஒலிம்பிக் தங்கம் இல்லையாம்.. பதக்கம் இல்லையாம்.. அட..நீங்கள்வேறு.. அதெல்லாம் வருத்திடுமா? இந்த நகைச்சுவைத் திறமை  யாருக்கும் வராது! சிரிப்பாய்ச் சிரிக்கிறார் கண்ணாடி முன்னிருப்பது உணராமல்.. ஒலிம்பிக் .. அங்குபோனவர் பட்ட பாடு அப்பப்பா யாருக்குத் தெரியும்? அதைத் தெரிந்து  அதற்குக் குரல் கொடுத்தால் ... அட..நீங்கள் வேறு!

அவள் பெண்

படம்
Image:thanks Google ஒயிலாக நடக்கும் பாதையல்ல முட்கள் அகற்றி, கற்கள் தாண்டி ஏறியும் குதித்தும்  கணக்கிலடங்காக்  காயங்கள்  புறம் தள்ளி 

புதையல்

படம்
Image:thx Internet கரைக்குவர நினைக்கும்போதெல்லாம்  ஓரலை உள்ளிலிழுக்கும்  புது திசை...புதுப் பார்வை  வித்தியாசமான மீன்கள்  விதவிதமான சிப்பிகள்  கையில் எடுத்துக் கொண்டு  கரைவரப் பார்ப்பேன்..

தீபத்தின் ஒளியில்

படம்
சுட்டெரிக்கும் வெயிலில்          சூளையில் வெந்துவிட்டும் பட்டாசு ஓட்டிப்           பகலெல்லாம் தேய்ந்துவிட்டும் கட்டிடமும் ஓங்கவே           கல்சுமந்து ஓய்ந்துவிட்டும் தட்டுகள் டம்பளர்கள்            தண்ணீரில் சுத்தமாக்கி முட்டிநிற்கும்  கண்ணீரை            மூக்குறிஞ்சிப் புள்ளிவைத்து எட்டத்தான் பார்க்கிறோம்            எம்வாழ்வில் ஓங்கிடமே திட்டம்தான் வெல்லுமா            தீபத்தின் ஒளியில்!

தேர்தல் நாள்

தேர்தல் நாள் - தினமணி கவிதைமணியில் 16/5/16இல் வெளியிடப்பட்டிருக்கும் கவிதை. வறுமை இருக்கலாம்  வறட்சி இருக்கலாம்  ஆனால்  ஒரு நாள் சோறு உதவாது..

பேசும் மௌனம்

படம்
விதையின் மௌனம் மரமாய் சிப்பியின் மௌனம் முத்தாய்

ஹார்வர்டு தமிழ் இருக்கை , வேண்டும் உங்கள் கை!

படம்
" தேனால் செய்தஎன் செந்தமிழ்தான் திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்!"  பாவேந்தரின் வரிகள் உண்மையாகட்டும்! 

சித்திரை மகளே வாராய்

படம்
சித்திரை மகளே வாராய் நித்திரை நீக்க வாராய்

வாக்களிப்பீர்! வாக்களிப்பீர்!

படம்
  வருவது நலமாக வாக்களிக்க நேரமில்லை, வேலைப்பளு என்றால்  நாளை வேலையும் இல்லாமல் போகலாம்  வருவது நலமாக வாக்களிப்பீர் 

உய்வுதரும் ஓட்டு

படம்
 இவர் கொள்கை என்ன?  அவர் கொள்கை என்ன? சமூகத் தேவை என்ன? என்னிடம் இருப்பது ஓர் ஓட்டு எண்ணத்தக்க ஓர் ஓட்டு இவரா? அவரா?

சேய்காண ஓடும்தாய்

படம்

நாசி ஹோலோகாஸ்ட் - 1

படம்
               ஹென்றி பெர்ன்ப்ரேவிற்கு (Henry Birnbrey) அவர் பெற்றோர் அமெரிக்கா  செல்வதற்கான விசா ஏற்பாடு செய்தனர். பதினான்கே வயதான ஹென்றி பெற்றோரை விட்டு, சொந்த ஊரை விட்டு முகம் தெரியாத நாட்டிற்குப் பயணப்பட்டார். அவருடன் அப்படிப் பயணித்த சிறு குழந்தைகள் 1200 பேர். விழிகளில் நீர்மல்க பெற்றோர்கள் வழியனுப்பி வைத்தனர். ஏன்? ஏன் அந்தக் குழந்தைகள் பெற்றோரை விட்டு அமெரிக்காவிற்குப் புறப்பட்டனர்? இதயம் வேதனையில் துடிக்கப் பிள்ளைகளை ஏன் அனுப்பினர் அப்பெற்றோர்?                அது 1938 ஆம் ஆண்டு! ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியில் ஆஸ்திரியாவின் மேல் ஜெர்மன் படை எடுத்திருந்த நேரம். பெரும்போர் வரப் போகிறது என்று உணர்ந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப வழியுண்டா என்று ஏங்கிய நிலையில் அமெரிக்கா 1200 சிறுவர் சிறுமியருக்கு அவசரகால விசா கொடுப்பதாக அறிவித்தது. அப்படித்தான் ஹென்றி அமெரிக்கா புறப்பட்டார். இப்பொழுது 97 வயதாகும் அவரை நேரில் பார்க்கவும் அவர் வாய் மொழியாக வரலாற்றின் கொடுமையான சில பக்கங்களைப்  பார்க்கவும்  முடிந்தது. அந்த அனுபவத்தை இங்கு பகிர்கிறேன்.       

கவிப்பேராசான் மீரா விருது 2015

படம்
என் முதல் விருது! என் பெருமை! என் மகிழ்ச்சி! 'துளிர் விடும் விதைகள்' செழிக்கப் பெய்த மழை 'கவிப்பேராசான் மீரா' விருது ! கடலின் ஒரு துளி நீராய் உள்ளத்து உவகையின் துளியாய் இப்பதிவு!

காதலே உன்னைக் காதலிக்கிறேன்

படம்
என்னைப் புரியாமல் உணராமல் தூற்றுகிறார்களே என்று கலங்கும் காதலே உன்னைக் காதலிக்கிறேன் கலங்காதே!

நிமிர்ந்தோங்கி வாழ்ந்திடவே

படம்
தந்தையுடன் தானும் மதித்தேத்தும் மாண்புகளைச்  சிந்தைதனில் ஊன்றிச் சிறந்திடவே - எந்நாளும்  நிந்தை விலக்கி நிமிர்ந்தோங்கி வாழ்ந்திடவே  தந்துலகில் எண்பிப்பாள் தாய் திருமிகு.பாரதிதாசன் ஐயா அவர்களின் பாவலர் பயிலரங்கம் முகநூல் பக்கத்திற்காக எழுதியது. வெண்பா எழுதக் கற்றுக்கொள்ளும் தளம் அமைத்திருக்கும் ஐயா அவர்களுக்கு நன்றி.

போதை மருந்து..பள்ளிகள்..பலிகள்

படம்
               ஹெரோயின் போதை மருந்து தாராளமாகப் புழங்கி வந்ததும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அடிமையானதும், பல இளைஞர்கள் இதனால் உயிர் இழந்திருப்பதும் வெளிவந்திருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களில் போதை மருந்தினால் ஏற்படும் உயிர் இழப்புகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளன என்கிறார்கள் இதை வெளிகொணர்ந்துள்ள செய்தியாளர்கள் , 4000% அதிகரித்திருக்கிறதாம்!! கற்பனை செய்ய முடிகிறதா? ஒரு முக்கோணப் பகுதியில் (மிகுந்திருக்கும் போதை மருந்து புழக்கம் பற்றிய செய்திகள் தற்பொழுது வெளிவந்து பெற்றோரைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கின்றன.

கேலியாய்ப் பறக்கிறாய்

படம்
எனக்காகப்  பாடுகிறாய் என்றெண்ணி ரசித்திருந்த வேளையில் கேலியாய்ப் பறக்கிறாய் கூடவந்த இணையுடன்!

தொடரும் தொடர் பதிவர்கள்

படம்
பதிவர்கள் பல விதம்! ஒவ்வொருவரும் ஒரு தனித்துவம்! சிலரைத் தொடரலாம், பலரை அறியாமல் இருக்கலாம். நாம் அறிந்தவரை பலரை  அறியாதவர்களுக்கு அறிமுகப் படுத்தினால் பலரை அறியாமல் இருப்பது சிலரை அறியாமல் இருப்பதாகக் குறையும் அல்லவா? குழப்ப வேண்டும் என்று நினைத்துக் குழப்பவில்லை, குழப்பவில்லை என்று சொல்லிக் குழப்பவும் இல்லை. குழம்பிக் கிளம்பிப் போய்விடாமல் தொடர்ந்து  வாசிக்க வேண்டும் என்று விழைந்து விளம்புகிறேன். வாசியுங்கள், நான் குழப்பாமல் கிளம்புகிறேன்.

தேர்வின் மதிப்பெண்களில் நசுக்கப்படும் திறமைகள்

படம்
Image: thanks Internet " ஒவ்வொருவரும் மேதைதான். ஆனால் மரம் ஏறும் அளவுகோலை வைத்து ஒரு மீனை மதிப்பிடுவீர்களேயானால், அந்த மீன் தன் வாழ்க்கை முழுவதும் தான் ஒரு முட்டாள் என்றே நினைக்கும்." - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

கணினியின் முன்னோடிப் பெண்களைத் தெரியுமா? - உலக மகளிர் நாள் 2016

படம்
              மார்ச் 8 - சர்வதேச மகளிர் நாள்! இவ்வாண்டின் கருப்பொருள் 'சரிசமநிலைக்கு உறுதி எடுப்போம்'! பெண்களின் முன்னேற்றத்திற்கும் சம உரிமைக்கும் சர்வதேச பெண்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்ற நோக்கில் கொண்டாடப்படும் நாள். பெண்களை மதிக்கும் சமமாகப் பாவிக்கும் சமூகம் முழுவதுமாக அமையவில்லை என்பது மிகவும் வேதனையான விசயம். நிறுவனங்களில் உயர்பதவிகளில் பெண்கள் இருப்பது குறைவாகவே இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள், அவற்றை அலசி ஆராய்ந்தால் பெண் சமூகம் போராட வேண்டியிருப்பது அதிகம் என்று புரியும். முன்னோடிகளாயிருந்து வரலாற்றில் புதையுண்ட சில பெண்மணிகளைப் பற்றி பகிர்வதே இப்பதிவின் நோக்கம். அவர்களுக்கும் அனைத்து மகளிருக்கும் என்னுடைய மகளிர் தின அர்ப்பணிப்பாகவும்  சிந்தனை தூண்டும் சிறு தீபமாகவும் இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

விடுதலைப் பயணம் Freedom March

படம்
முந்தையப் பதிவுகளின் இணைப்புகள் 1.செல்மா  2.மாரியன்  3.ஜிம்மி லீ ஜாக்சன்  4. ஜான் லூயிஸ்  5. செங்குருதி ஞாயிறு Image:thanks Google          மகாத்மா காந்தியின் அகிம்சை வழியிலான போராட்டம் மக்களை ஈர்த்து ஆங்கிலேயரை ஆட்டம்காணச் செய்தது அல்லவா? அது போல செங்குருதி ஞாயிறும் அமெரிக்க மக்களின் உணர்ச்சிகளைத் தொட்டு அமெரிக்காவில் நிலவிவந்த வேற்றுமை வியாதியை நிலைகுலையச் செய்தது. அமைதியாக ஊர்வலம் சென்ற மக்கள் மேல் தடியடி நடத்துவதா? புகைக் குண்டுகள் வீசுவதா என்று அமெரிக்க மக்கள்  வெகுண்டனர். ஆமாம், அனைவரும் நிறவெறி பிடித்தவர்கள் அல்லவே!          செங்குருதி ஞாயிற்றின் பலனாக மார்ச் 15ஆம் தேதி அப்போதைய அதிபர் திருமிகு.லிண்டன் பி.ஜான்சன் காங்கிரஸ் கூட்டத்தில் குடியுரிமை அமல்படுத்துவது பற்றி பேசினார்.

வேண்டாம்...மழையே!

படம்
Image:thanks Google மழலையாய் நெஞ்சம் அள்ளி

ஏழ்மையின் எதிர்பார்ப்பு

படம்
வான்மழை பொய்க்காமல்  வள்ளன்மை  காட்டுமா? கான்செழித்து மண்ணின் கலக்கத்தை நீக்குமா?

காதல் ஓய்வதில்லை

படம்
Image: thanks Google ஊற்றெடுக்கும் கவிதைகளை ஒவ்வொன்றாய் அனுப்புகிறேன் மூச்சடைக்கும் என்பதால்

காதல் எனும் ஒரு வழிப்பாதை

படம்
உன்னில் நானும் என்னில் நீயும் உயிரில் ஒன்றானபின் உவக்கும் வாழ்வு அது ஒரு வழிப்பாதை காதல் எனும் ஒரு வழிப்பாதை

சட்னி சாட்சி

படம்
அவசர வேளையில் அனுமதியின்றியே  அத்துமீறி நுழையும்  இலவச அடுமனை ஆச்சரியங்கள்!! Image:thanks Google

செங்குருதி ஞாயிறு

படம்
 முந்தையப் பதிவுகளின் இணைப்புகள் 1.செல்மா  2.மாரியன்  3.ஜிம்மி லீ ஜாக்சன்  4. ஜான் லூயிஸ்   எட்மன்ட் பெட்டஸ் பாலத்தின் மேற்பகுதியை அடைந்த ஜான் லூயிசும் வில்லியம்சும் திடிரென்று நின்றனர். அங்கே பாலமிறங்கும் இடத்தில் நீலவானம் இறங்கி வந்திருக்கிறதோ என்று ஐயுறும் வகையில் ஒரு தோற்றம்! ஆம்! நீலத்  தலைக்கவசமும் நீலச் சீருடையும் அணிந்த அலபாமா மாநிலப் படையினர் நெடுஞ்சாலை 80இன் ஒரு புறமிருந்து மறுபுறம்வரைத் திரண்டிருந்தனர். அவர்களோடு இணைந்து நிறவெறிபிடித்த வெள்ளைப் பொதுமக்களும் எள்ளி நகையாடிக் கான்பெடரேட் (Confederate) கொடிகளை அசைத்துக்கொண்டு! செல்மாவின் செரிப் ஜிம் கிளார்க் நியமனம் செய்திருந்த வெள்ளைப் பிரதிநிதிகளும் தடிகளோடும் சாட்டைகளோடும் குழுமியிருந்தனர். முட்கம்பிகள் பொருத்தப்பட்ட ரப்பர் பைப்பைச் சுழற்றிக்காட்டியதாகவும் குறிப்புகள் சொல்கின்றன.  

அன்பின் தினம்

படம்

ஜான் லூயிஸ் - குடியுரிமைப் போராட்டம்

படம்
முந்தையப் பதிவுகளின் இணைப்புகள் 1.செல்மா  2.மாரியன்  3.ஜிம்மி லீ ஜாக்சன்  ஜிம்மி லீ ஜாக்சனின் மரணம் அதிர்வலைகளை ஏற்படுத்தி  சம உரிமை வேண்டும் போராட்டம் மேலும்  எழுச்சிபெறச் செய்தது. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் நிகழ்ந்த அநீதியைக் கண்டுக் குமுறினர், நிறம் கறுத்த எம்முயிர் துச்சமா என்று வெகுண்டு எழுந்தனர். குடியுரிமை பெற்று ஜிம்மியின் மனவிருப்பம் நிறைவேற்றுவோம் என்று வீறு கொண்டனர்.

உணர்ந்துநீ பிழை

படம்
கூரை கழுவியபின் வீதி சேரும் மழை; கூட்டிப் பெருக்கும் குப்பை வீதி முனையில் குவியும்; வாய்ப்பிருந்தால் அதுவும் ஆயாசமின்றி அண்டை நிலத்தில்!

பாவம் சிறுத்தை

படம்
Image: thanks Google காடழித்துக்  கற்கும் பாடம் என்னவென்று பார்க்க வந்ததோ

கண்பார்க்கும் போதெல்லாம்

படம்
Image: thanks Google

ஜிம்மி லீ ஜாக்சன்

படம்
முந்தையப் பதிவுகளின் இணைப்புகள் 1.செல்மா  2.மாரியன்           விவியன் அவர்கள் சென்றவுடன், ஆல்பர்ட் டர்னர் அங்கிருந்த மக்களுடன் விடுதலைப் பாடல்களைப் பாடிக்கொண்டு சிறைச்சாலை வரை ஒரு ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்தார். மக்களும் பாடிக்கொண்டு அமைதியான முறையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அமைதியான போராட்டம் என்றாலும் இரவின் போர்வையில் மிகப்பெரிய கொடுமை அரங்கேறியது.

இயந்திரங்களுக்கே

படம்
கூட்டமாய்க் கட்டிடங்கள் கூடிப்பேச மனிதரில்லை நகர மயமாக்கல் தண்ணீர் சூழாத் தீவுகள்!