ஐங்குறுநூறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐங்குறுநூறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஐங்குறுநூறு 252 - கூதிர்ப் பெருங்குளிர்க் காற்று வருமுன்

  

ஐங்குறுநூறு 252
குன்றக் குறவன் புல்வேய் குடிலை 
மன்று ஆடும் இளமுகில் மறைக்கும் 
அந்த நாடன் உயர்ந்த பண்பாளன்  
தோழி, அவன் வாழி! 
விரையும் மழையுடன் கடும்பனி கலக்கும் 
கூதிர்ப் பருவப் பெருங்குளிர்க் காற்று 
வருமுன் தானே வந்து விட்டானே!
இப்பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு, இந்த இணைப்பில் சொடுக்கவும், Ainkurunooru 252 - Before the cold northern winds!

ஐங்குறுநூறு 202 - குடுமி கொண்ட குதிரைகள்

 

அன்னாய் வாழ்க! சொல்வதைக் கேளாய்!
நம்ஊர் பார்ப்பனச் சிறுவர் போல
குடுமி கொண்ட குதிரைகள் பாராய்
நெடுமலைத் தலைவன் தேரில் பூட்டியே!
இப்பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு, இந்த இணைப்பில் சொடுக்கவும், 

ஐங்குறுநூறு 402 - யாழிசை இல்லறம்

 


ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. தலைவனும் தலைவியும் திருமணம் புரிந்து  இல்லறம் நடத்துவதைப் பாடும் பாடல்கள். தலைவனும் தலைவியும் இல்லத்தில் காதலோடு இன்புற்றிருந்து வாழ்வதும் முல்லைத்திணையின் 'இருத்தலும் இருத்தல் நிமித்தமும்' என்ற உரிப்பொருளுக்குப் பொருந்தும் என்பார் திரு.பொ.வே.சோமசுந்தரனார். 

ஐங்குறுநூறு 201 - என்ன மரமது சொல்வாய்


"என்னவன் அணிந்தான் தழைகளை
எனக்கும் கொடுத்தான் ஆடையாய்;
அவன்மலைச் சாரல் வளர்ந்திடும் மரம்
என்ன மரமது தோழி, சொல்வாய்!"
இப்பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு, இந்த இணைப்பில் சொடுக்கவும், What tree is it my friend.

ஐங்குறுநூறு 281 - நூறுநூறு ஆயிரமாய்


படம்: நன்றி இணையம்
காதல் ஆழ்ந்த அன்பினது, காதலுக்குத் தோள்கொடுத்த எதனையும் மறக்காது நன்றி பாராட்டும்! இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த தமிழர் காதலோடுஇயற்கையும் போற்றினர்.

ஐங்குறுநூறு 35 - நார் உரி ஆம்பல் மென்கால்


 தவறொன்றும் நிகழாதது போல வாயில் வேண்டி தூது வருபவரைக் கண்டால் சினம் வருகிறது தோழி. என்னைப் பார்த்தாலே புரியவில்லையா? அவர் செயலால் நான் முன்பிருந்த களையிழந்து வாடி நிற்பது?

ஐங்குறுநூறு 34 - புழைக்கால் ஆம்பல்

ஏனடி தோழி? நான் சொல்லாவிட்டாலும் என் வருத்தம் என் கண்களில் தெரிகிறதே. கேடுகெட்ட அவர் செயலினால் நான் கொண்டிருக்கும் சினத்தை அறிவாய் அல்லவா?

Image:thanks Google

ஐங்குறுநூறு 210 - குன்று நோக்கத் தணியும் நோய்

இது வேறொன்றுமில்லை தாயே, மந்திரவாதி வேண்டாம். தெய்வத்தால் என்று நினைத்துப் பலிகொடுத்ததால் புலால் நாற்றமெடுக்கும் கல்லின் மீது ஏறி நின்று அவருடைய அழகிய மலையைப் பார்த்தாலே போதும்.

image:thanks google

ஐங்குறுநூறு 209 - கண் மறையா மணிக் குன்று

இருண்ட மழைமேகம் மறைக்காமல் எப்பொழுதும் கண் முன் தெரிகிறதே அவருடைய நீலமணி போன்ற குன்றுகள். நீ என்னடாவென்றால் மறந்திரு என்று எளிதாகச் சொல்கிறாய்.



ஐங்குறுநூறு 208 - நீலமலர்க் கண்கள்

அவர் நாட்டு நீலநிற மலை கண்களில் இருந்து மறையும் போதெல்லாம் இவள் கண்கள் நீரால் நிறையும். அக்குறையை நீக்கி வைத்துவிட்டீர்கள்.

ஐங்குறுநூறு 33 - குளக்கரையில் போட்டியிருக்க இங்கு ஏன்?

நன்றி: இணையம்
 உன்னைப் பார்க்க வேண்டும் என்று வந்திருக்கிறாரடி  உன் புருஷன்.

இதக் கேளுடி, நீ நல்லாருப்ப.. அந்தக் குளக்கரையில் மருத மரம் ஓங்கி உயர்ந்து வளர்ந்துருக்கில்ல, அது பரந்து விரிந்து குளக்கரை எங்கும் பூக்களைச் சொரிந்திருக்கிரதடி. அங்க, இவரோடக்  குளிர்ந்த மாலை அணிந்த அகலமான நெஞ்சைத் தெப்பமாகத் தானே கொள்ளவேண்டும் என்று  தலைக்குத் தலை  போட்டிப் போட்டுப் பெண்கள் வருகிறார்களாம்.

ஐங்குறுநூறு 206 - காவல் காரனாய் இருந்த உன்னை...

கொட்டும் மழையும் வழுக்கலானப் பாதையும் தடுக்குமோ கண்ணே, உனை நான் காண? மலையைக் காக்கும் காவலன் நான், கள்வனாய் வந்தேன் உனைக் காண...

ஐங்குறுநூறு 31 - கடன் அல்ல என்று சொல்வானோ?

'ஜாடை பேசுவது' என்பது ஒருவரிடம் நேராக ஒன்றைச் சொல்லாமல் அருகிருப்பவரிடம் சொல்வது போல் சொல்வது. நாம் அனைவரும் செய்வதுதானே? 
அன்றைக்கு அப்படிச் சொல்லிவிட்டு இன்று அதைக் கடைபிடிக்கத் தேவையில்லை என்று சொல்வது? அட, இதுவும் நம்ம செய்வதுதானே? அதாங்க, புத்தாண்டுத் தீர்மானம் ! மருத மரக் காற்றில் பறக்கும் தீர்மானங்களும் ஜாடைப் பேச்சுகளும்...

ஐங்குறுநூறு 30 - இவள் அழகை இழப்பது ஏன்?

மண்ணாலான நண்டு வளையைப் பாருங்கள், நெல் மலர்களால் அது நிறைந்ததைப் போல தேடிய செல்வத்தால் இல்லத்தை நிறைக்க விரைந்து வருவான் அவன். இவள் ஏன் தன்னுடைய மிகுதியான அழகை இழக்கிறாள்? வேம்பு பூத்ததைப் பாருங்கள், மணம் முடிக்கவே வேண்டியதைச் செய்யுங்கள்.

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.