மழை


உறங்கிக் கிடந்தவளைத் தட்டி எழுப்பினாய்
          உற்சாகம் பெருகவே                                    
சிறகு விரித்திடவே வானம் துலக்கினாய்    
          சிலிர்ப்பித்தாய் உயிர்க்கவே                    
திறந்த முகிலினின்று கொட்டும்  அழகினில்
          திகட்டாமல் மயக்கினாய்                  
பறந்த நினைவுகளில் பாடல் கருவென        
            பட்டென்று வந்திறங்கினாய்




கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.