பெண்களுக்கு ஏற்படும் உளவியல் பிரச்சனைகளும் தீர்வுகளும் - மனநல ஆலோசகருடன்

 

அன்புத்தோழி, நிகழ்காலம் வலைத்தளத்தின் வலைப்பதிவர், மனமகிழ் மைன்ட் கேர் நிறுவனர், எழில் அவர்களின் மன நலம் குறித்த விளக்கமும் அறிவுரைகளும்!

'நங்கை கூறும் நவீனங்கள்' எனும் தலைப்பில் பெண்களுக்கான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வருகிறேன். இந்நிகழ்ச்சி தமிழ் அமெரிக்கத் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படுகிறது. 

இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மனநலம் குறித்துப் பேசலாம் என்று தோழி எழிலிடம் கேட்டவுடன் சரியென்று ஒத்துக்கொண்டார். மனம் நிறைந்த நன்றிகள், எழிலுக்கு! அருமையாக மனநலம் குறித்த அறிவியல்பூர்வமான தகவல்களையும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் தீர்வுக்கான வழிமுறைகளையும் தெளிவாகப் பகிர்ந்துகொண்டார். காணொலியைப் பார்த்து உங்கள் கருத்துகளைப் பகிருங்கள். 

நன்றி!

பெருமைக்குரிய பெண்கள் நேர்காணல் மற்றும் என் கவிதை - வல்லினச்சிறகுகள்

 

வல்லினச் சிறகுகள் இதழில் வெளிவந்திருக்கும் என்னுடைய கவிதையும் உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி திருமிகு.பிரபா ஸ்ரீதேவன் அவர்களுடனான என்னுடைய நேர்காணலும். 

பட்டிமன்றம்- பெண்களுக்கான முக்கியத்துவம் கிடைத்துள்ளதா

 


வலைத்தமிழ் இணையதளம் மற்றும் தொலைக்காட்சி அட்லாண்டாவின் யாவரும் கேளிர் குழுவுடன் இணைந்து நடத்திய பட்டிமன்றம்.

பெண்கள் முன்னேற்றமும்  இன்னும் வளரவேண்டியதும் - கலந்துரையாடல் 


பெண்கள் வளர்ச்சி அடைந்துவிட்டனரா? இன்னும் என்னென்ன வழிகளில் துறைகளில் வளர வேண்டும்? ஆக்கப் பூர்வமான ஒரு கலந்துரையாடல்!

அனைத்துலக மகளிர் நாள் 2021 - அறைகூவலிடத்தெரிவுசெய்

 

மார்ச் 8 - அனைத்துலக மகளிர் நாள். அனைத்துலக மகளிர் நாள் என்றவொரு அமைப்பு இருக்கிறது, (International Women's Day). இந்த அமைப்பினர் ஆண்டுதோறும் மகளிர் நாளின் மையக்கருத்தாக ஒன்றை அறிவிப்பார்கள. பாலினச் சரிசமநிலைக்கு நாம் எப்படிப் பங்களிக்கலாம் என்று பல்வேறு வழிமுறைகளைச் சொல்லி ஒவ்வொருவரையும் பொறுப்புடன் செயல்பட ஊக்குவிப்பதே இதன் நோக்கம். 

கனவின் இசைக்குறிப்பு - மைதிலி கஸ்தூரிரங்கன்

பிப்ரவரி 2, 2024. 'கனவின் இசைக்குறிப்பு' கவித்துவமான தலைப்பு தன்னில் நிறுத்திப் பல மணித்துளிகளை இசைக்கிறது. இசைத்தட்டை கவனமாகத் திர...