துளிர் விடும் விதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துளிர் விடும் விதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

துளிர் விடும் விதைகள் - திரு.தமிழ் இளங்கோ ஐயாவின் பார்வையில்

எனது எண்ணங்கள் என்ற வலைப்பூவில் எழுதிவரும் திரு.தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் என்னுடைய 'துளிர் விடும் விதைகள்' நூலைப் படித்து தன் தளத்தில் அறிமுகம் செய்துள்ளார். தனக்குப் பிடித்த கவிதைகளைச் சொல்லி, அருமையானதொரு எம்.ஜி.ஆர். பாடலையும் இணைத்துப் பகிர்ந்திருக்கிறார்..

சகோதரர் கில்லர்ஜி பார்வையில் துளிர் விடும் விதைகள்

"ஆழ்கடலின் அமைதிக்குள் நீந்துவது போன்ற உணர்வு நான் மீண்டும் சுயநினைவு பெற்று மேல்நோக்கி வர நீண்ட நேரங்களானது

முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் பார்வையில் என் நூல்

சோழ நாட்டில் பௌத்தம் என்ற வலைப்பூவில் எழுதிவரும் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் என் துளிர் விடும் விதைகள் நூலினைப் பற்றி விமர்சனம் எழுதியுள்ளார்கள்.

"துளிர் விடும் விதைகள் என்று தலைப்பு அமைந்துள்ள போதிலும் கவிதையில் காணலாகும் கருத்துக்கள் பல விருட்சங்களாகக் காணப்படுகின்றன."

தலைப்பு ...தலைப்பூ - சகோ.ராம் கணேஷ் பார்வையில்

கதம்பத்தமிழ் என்ற வலைப்பூ துவங்கியிருக்கும் நண்பர் ராம் கணேஷ் அவர்கள் என் துளிர் விடும் விதைகள் நூலைப் படித்துப் புதுமையாய்த்  தன் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கு என் உளமார்ந்த நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் இணைப்பை இங்கேப் பகிர்கிறேன்.

புதியதாய் தளம் துவங்கியிருக்கும் அவரை ஊக்குவிக்கவும் கேட்டுக்கொள்கிறேன் நட்புகளே! :))

கூந்தலில் பூ இருந்தாலும் அழகு, இல்லாவிட்டாலும் தலையே அழகு என்று சொல்கிறார் சகோ ராம் கணேஷ்.  படிக்க இணைப்பைப் பாருங்கள்.

இப்பொழுது இணைப்பு தலைப்பு..தலைப்பூ.

துளிர் விடும் விதைகளை வாழ்த்தும் தென்றல்

பாக்களின் ராணி தென்றல் 
   பார்க்கவே கொடுத்தேன் என்நூல் 
பூக்களால் மாலை கோர்த்து 
   பூரிக்கவே வாழ்த்தி னாளே
ஆக்கவே வாழ்த்தும் நட்பே  
   ஆனந்தமாய் சொல்வேன் நன்றி

உளமெலாம் இன்பம் பூக்க 
   உன்கவி பாடி விட்டாய் 
களஞ்சிய நிறைபொன் ஈடோ 
    களிக்கிறேன் உன்பா கண்டு 
அளவிலா நன்றி யதனை 
    அன்புடன் ஏற்பாய்த் தோழி!

தோழி தென்றல் சசிகலாவிற்கு உளமார்ந்த நன்றியுடன், அவருடைய பாமாலை இணைப்பை இங்கே பகிர்கிறேன், 

கவிஞர் இரா.இரவி விமர்சனம்

கவிமலர் என்ற இணையதளத்தில் தன் கவிதைகளைப் பதிந்திருக்கும் கவிஞர் இரா.இரவி அவர்கள் என் கவிதைத் தொகுப்பைப் படித்து விமர்சனம் அனுப்பியுள்ளார். அவருடைய தள முகவரியின் இணைப்பு. கவிதைச் சாரல், ஹைக்கூ கவிதைகள் உட்பட 13 கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர் இவர். அவர் தளத்திலும் விமர்சனம் வெளியிட்டுள்ளார். அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து அவருடைய விமர்சனத்தை இங்கு பதிகிறேன்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நூலாசிரியர் கவிஞர் வி. கிரேஸ் பிரதிபா அவர்கள் “தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து படிக்காதவர், தமிழ பாடத்தை (ஆங்கிலவழி) பள்ளியோடு விட்டு, கணினியில் முதுகலைப்பட்டம் பெற்றவர்” என்று அணிந்துரையில் கவிஞர் நா. முத்துநிலவன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.  ஆம், தமிழ் படித்தவர்களை விட தமிழ் படிக்காதவர்களே தமிழுக்கு அதிகப் பங்களிப்பு செய்து வருகின்றனர்.  கணினி படித்தவரின் தமிழ்ப்பற்று வியக்கும் வண்ணம் உள்ளது. 

துளிர் விடும் விதைகள் - கீதமஞ்சரியின் பார்வையில்

அன்புத்தோழி கீதமஞ்சரி அவர் தன் தளத்தில் என் கவிதைத் தொகுப்பைப் பற்றி எழுதியுள்ளார்கள். அப்பதிவைப் பார்த்து மகிழ்ந்து உள்ளம் நிறை மகிழ்ச்சியுடன் இங்கே பகிர்கிறேன். தோழியின் தளத்தில் பதிவைப் படிக்க இந்த இணைப்பைச் சொடுக்குங்கள்.


தோழி கீதமஞ்சரி கீதமஞ்சரி என்ற வலைத்தளத்தில் கவிதைகள், கட்டுரைகள், தான் வாழும் ஆஸ்திரேலிய நாட்டில் வாழும் அரிய விலங்கினங்கள், கதைகள் என்று பல்சுவையாக எழுதுவதோடு, அதீதம், வல்லமை போன்ற இணைய இதழ்களிலும் கலக்குபவர். அவர் என் கவிதைத் தொகுப்பைப் படித்து அன்புடன் பதிவிட்டிருப்பது எனக்கு அளப்பரிய மகிழ்ச்சி தருகிறது. நன்றி கீதமஞ்சரி.

தினமணியில் 'துளிர் விடும் விதைகள்' பற்றி..

தினமணி எடிட்டர் கலாரசிகன் அவர்கள், இன்று தினமணியில் என் கவிதைத் தொகுப்பைப் பற்றி எழுதியிருப்பதை .....தினமணி ஆசிரியருக்கு நன்றியுடன் இங்கு  பகிர்கிறேன்.

"நூல் மதிப்புரைக்கு வி. கிரேஸ் பிரதிபா எழுதிய "துளிர் விடும் விதைகள்' என்கிற கவிதைத் தொகுப்பு வந்திருந்தது. அதற்கு முன்னுரை எழுதியிருக்கும் புதுக்கோட்டை நா. முத்துநிலவன், 1965-ஆம் ஆண்டிலிருந்து இந்திய அளவில் இலக்கியத்திற்காகத் தரப்படும் உயர்ந்த விருதான "ஞான பீடம்' விருதை, 1965, 1980, 1984, 1995, 2007 என 5 முறை மலையாளமும், 1970, 1988, 2012 என மூன்று முறை தெலுங்கும், 1967, 1973, 1977, 1983, 1990, 1994, 1998, 2010 என எட்டு முறை கன்னடமும் பெற்றிருக்க, தமிழ் இதுவரை இரண்டு தடவைதான் பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தது மனதை வருத்தியது.
அவர் குறிப்பிடுவதுபோல, தமிழில் பெயர்கள் வைத்துக் கொள்வதிலும், தமிழினம் பற்றி வாய் கிழியப் பேசுவதிலும் காட்டும் ஆர்வத்தை, நாம் மொழி வளர்ச்சியில் காட்டுவதில்லை. தமிழில் இருக்கும் அளவுக்கு மொழிக் கலப்பும், ஆங்கில மோகமும் பிற மொழியினரிடம் இல்லை. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இருக்கும் மொழிப்பற்று நமக்கு இருக்கிறதா என்பதுகூட சந்தேகம்தான்.
2009-இல் வலைப் பக்கத்தைத் தொடங்கி ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கி, 2012 முதல் தமிழில் தொடர்ந்து எழுதி வரும் கிரேஸ் பிரதிபாவின் மொழிப்பற்றும், சமுதாய நோக்கும் பாராட்டுக்குரியவை. புத்தகத்தின் அட்டையை வடிவமைத்திருப்பது அவருடைய கணவர் ஆல்பர்ட் வினோத் என்று குறிப்பிடுகிறார். முகப்பே கவித்துவமாக இருக்கிறது.   
"கையெழுத்தை...' என்றொரு நாலுவரிக் கவிதை. பகிர்ந்து கொள்கிறேன், படியுங்கள்.
அஞ்சல் ஆவணம்
அனைத்தும் கணினியில்
தொலைத்து விட்டேனே
கையெழுத்தை!"
திரு.முத்துநிலவன் அண்ணாவின் பகிர்வுக்கு, இந்த இணைப்பைப் பார்க்கவும்.
தினமணி இணைய இதழ் இணைப்பிற்கு:
http://www.dinamani.com/…/%E0%AE%87%E0%A…/article2514962.ece

'துளிர் விடும் விதைகள்' நூல் வெளியீட்டு நிகழ்ச்சி

மதுரை பதிவர் சந்திப்பில் என் முதல் கவிதைத்தொகுப்பு 'துளிர் விடும் விதைகள்' வெளியிடப்பட்டது பெரும் மகிழ்ச்சி.  பல பதிவர்களையும் நேரில் பார்த்துப் பேசியது என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.

இப்பொழுது நூல் வெளியீடு பற்றி....



என் தந்தை திரு.வின்சென்ட்  வெளியிட திரு.முத்துநிலவன் அண்ணா பெற்றுக்கொண்டார். கஸ்தூரிரங்கன் அண்ணாவும் எங்கள் குடும்பநண்பரான திரு.ஓ.முத்து அவர்களும் வாழ்த்திப்பேசினார்கள்.

என் தந்தை பேசும்பொழுது 'ஊரார் மெச்சி உனைப் புகழ்ந்தால் மெய்சிலிர்க்குதடி' என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்பத்  தன் மெய்சிலிர்ப்பதை எனக்குச் சொல்லி இப்போதைய என் கவிதைகள் மெல்லிய அலைகள் போல் இருப்பதாகவும், வயது முதிர முதிர அனுபவம் பெருக பெருக சமுதாயச் சீர்திருத்தத்திற்கான ஆழமான கருத்துக்களையுடைய கவிதைகளை நான் எழுதவேண்டும் என்று சொல்லி வாழ்த்தினார்கள்.


அடுத்துப் பேசிய முத்துநிலவன் அண்ணா அவர்கள், நற்றிணைக் காதலியின் இன்றைய கவிதைகள் என்ற தலைப்பில் என் நூலிற்கு முன்னுரை தந்திருக்கிறார்கள். நற்றிணைப் பாடலில் தலைவி தலைவனிடம் ஒரு மரத்தின் கீழ், "இந்த மரத்தின் கீழ் என்னைத் தொடாதே, ஏனென்றால் இந்த மரம் என் சகோதரி, என்னையும் இந்த மரத்தையும் ஒன்றாகத் தான் என் தாய் வளர்த்தார்கள்'. அதுபோல இயற்கையை ஆராதிக்கும் பழந்தமிழை எடுத்துக்கொண்டு, சங்க இலக்கியத்தை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருவதைப் பாராட்டினார்கள். அதோடு இன்றையச் சமுதாயத்திற்கு ஏற்ற கவிதைகளை என் நூலில் கொடுத்திருப்பதாகச் சொல்லி வாழ்த்தினார்கள்.


வாழ்த்திப்பேசிய கஸ்தூரிரங்கன் அண்ணா அவர்கள், "நல்ல கவிதை என்பது ஆகச் சிறந்த வார்த்தைகளை ஆகச்சிறந்த வரிசையில் அடுக்குவது என்பார் ஆங்கிலக் பெருங்கவி சாமுவேல் டைலர் கோல்ரிட்ஜ். தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் கிரேஸ் பிரதீபா கட்டிய வானவில் தோரணம் துளிர் விடும் விதைகள். கவிஞர் குளிர்களி என ஐஸ்க்ரீமை சொல்கிறபொழுதும் சூரியனை அனலி என்று செல்லமாய் சினுங்குகிறபோழுதும், கணிப்பொறி வைரசை நச்சு நிரல் என்கிற பொழுதும் தமிழ் இன்னும் பிழைத்துக் கிடக்கும் என்கிற நம்பிக்கை நமக்கு துளிர் விடுகிறது." என்று பாராட்டி இன்னும் சில கவிதைகளையும் சுட்டிக்காட்டி வாழ்த்தினார்கள். அவருடைய வாழ்த்துரை இந்த இணைப்பில்.




அடுத்து அப்பாவின் நண்பரும் எங்கள் குடும்பநண்பருமான திரு.ஓ.முத்து அவர்கள். இலக்கிய ஆர்வமும் வாசிக்கும் ஆர்வமும் கொண்ட முத்து மாமா வீட்டிற்கு வரும்போதெல்லாம் சுவையான உரையாடல்கள் இருக்கும். பல நூல்களை மேற்கோள் காட்டியும் பேசுவார்கள். நான் பிறந்ததிலிருந்து என்னைப் பார்த்து என் ஒவ்வொரு வளர்ச்சியிலும் மகிழும் அவர்கள் என் நூல் வெளியீட்டில் பேசியது எனக்கு மிக்க மகிழ்ச்சி.  அவர்கள் பேசும்பொழுது, 'இது ஆரம்பம் தான், ஆலமரம் போல இன்னும் பல விழுதுகள் விட்டு பல கவிதைத்தொகுப்புகள் வரும்' என்று வாழ்த்தித் தொழிற்சங்கத் தலைவரும் முற்போக்குவாதியுமான என் தந்தையின் வளர்ப்பும் தாக்கமும் என் கவிதைகளில் இருப்பதாகச் சொன்னார்கள். தன்னை கவர்ந்த கவிதைகளைச் சொல்லி கவிதைவானில் பிரதிபா ஒளிர்வார், எண்ணற்ற புத்தகங்களைத் தருவார் என்றும் வாழ்த்தினார்கள்.



என் கணவரும் குழந்தைகளும் அன்பு நண்பர்களும் வந்திருக்க என் நூல் வெளியீடு! பல குழப்பங்களுக்கிடையே இனிதே நிறைவேறிய கனவு. அக்டோபர் பதினெட்டாம் தேதியே அமெரிக்கா செல்வதாக இருந்த நிலையில், குழப்பத்திற்கிடையே என் புத்தக வேலையைத் துவங்கினேன். பதிவர் சந்திப்பன்று இருக்க மாட்டேன் என்று நண்பர்களிடம் எல்லாம் சொல்லிவிட்டேன். ஆனாலும் என் கணவர் பயணத்தை இரு வாரங்கள் தள்ளிப்போட்டு நூலை வெளியிட்டுவிட்டு  வரும் மகிழ்ச்சியை அளித்தார். செப்டம்பர் 23ஆம் தேதி முதல் வாராவாரம் பயணங்கள். அதற்கிடையே எப்படியோ என் நூல் வடிவம் பெற்று இனிதாய் வெளியிடப்பட்டுவிட்டது. பயணம் ஓயாமல் பதிவர் சந்திப்பு முடிந்து இரவோடிரவாக பெங்களூரு சென்று இதோ அட்லாண்டாவும் வந்துவிட்டேன். சென்ற ஞாயிறு தான் பதிவர் சந்திப்பா என்று வியப்பாக இருக்கிறது!! 

வீடு தேடி ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்பதிவை இடுகிறேன். இன்னும் எழுத ஆசை இருந்தாலும் இத்தோடு முடிக்கின்றேன்...

பதிவர் சந்திப்பைப் பற்றி மற்றொரு பதிவு இடுவேன். 

மழைக் காதலியே ... வருக! - கவிஞர் ஆர்.நீலாவின் மதிப்புரை

நூல் வெளியீடு அன்று கவிஞர் நீலா அவர்கள் ஒரு புத்தகம் கொடு என்று கேட்டார்கள். அப்பொழுது கையில் இல்லாததால் சென்று எடுத்து வந்து கொடுத்தேன். இடையில் பேசிய நண்பர்களின் உரையாடலில் சிறிது நேரம் கழித்தேக் கொடுத்தேன். ஆனால் கவிஞர் ஆர்.நீலா அவர்களோ உடனடியாகப் படித்துவிட்டு அங்கேயே மதிப்புரையும் எழுதிக் கொண்டுவந்து தந்தார்கள். அவர்களின் அன்பில் நெகிழ்ந்து விட்டேன். அவர்களுக்கு மனம்நிறை நன்றியைச் சமர்ப்பித்து அவர் எழுதிக் கொடுத்ததை இங்கே தட்டச்சுகிறேன்.
 


-----------------------------------------------------------------------------------------------------------------------
               புழுக்கமான உச்சிவெயில் நேரத்தில் ஒரு வேப்பமரக்காற்று வீசினால் சட்டென்று ஒரு புத்துணர்வு தோன்றுமே...அப்படித்தான் இருந்தது 'துளிர் விடும் விதைகள்' கவிதைத் தொகுப்பைப் படித்ததும். அவரது கவிதைத் தொகுப்பைப் போலவே அவரும் ஒரு ஐந்தரை அடி அருவிதான்...!
               வாழ்க்கையின் அவசரகதியில் நாம் தவறவிடும் அற்புத கணங்களை தன் கவிதையில் குட்டி குட்டியாய்ப் பதிவு செய்திருக்கிறார் சகோதரி கிரேஸ் பிரதிபா. கூடவே சூழல் விழிப்புணர்வை பாலில் கலந்த தேன் போல உறுத்தாமல் இயல்பாகத் தருவதிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

துளிர் விடும் விதைகள் - மலர்தரு கஸ்தூரி அண்ணாவின் வாழ்த்துரை

கவிஞர் கிரேஸ் பிரதீபாவின் துளிர் விடும் விதைகள் கவிதைத் தொகுப்பை வாழ்த்தும் முகத்து இங்கே உங்கள் முன்னே நான். 

நல்ல கவிதை என்பது ஆகச் சிறந்த வார்த்தைகளை ஆகச்சிறந்த வரிசையில் அடுக்குவது என்பார் ஆங்கிலக் பெருங்கவி சாமுவேல் டைலர் கோல்ரிட்ஜ். தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் கிரேஸ் பிரதீபா கட்டிய வானவில் தோரணம் துளிர் விடும் விதைகள். 

மொழியை நேசிப்போர் வியந்து ரசிக்கும் வார்த்தை பயன்பாடு இந்நூலெங்கும் விரவி ஜாமுன் ஜீராவாய் இனிக்கிறது.  

வலைப்பதிவர் திருவிழாவில் நூல் வெளியீடு


இதோ வந்துவிட்டது வலைப்பதிவர் திருவிழா. ஏற்கெனவே அறிந்தவரை எல்லாம் கண்டு மகிழவும், அறியாதவரை அறிந்துகொள்ளவும் பதிவர்கள் கூடும் இனிய திருவிழா. இத்திருவிழாவில் எனது முதல் கவிதைத்தொகுப்பு வெளியிடுவதை எண்ணி மனம் மகிழ்கிறேன். என்னுடைய நூல் வெளியீடு நிகழ்ச்சி நிரல் வருமாறு:

தலைமை : கவிஞர் திரு.நா.முத்துநிலவன் (தமிழாசிரியர், த.மு.எ.ச. மாநிலத்துணைத்தலைவர்)
இவரின் வலைப்பக்கம் http://valarumkavithai.blogspot.in/.

வெளியிட்டு வாழ்த்துபவர்: திரு.வின்சென்ட் (கோட்டப் பொறியாளர் - ஓய்வு, பி.எஸ்.என்.எல்., மதுரை, என் அன்புத் தந்தை)

பெற்றுக்கொண்டு வாழ்த்துபவர்: கவிஞர் திரு.நா.முத்துநிலவன் (தமிழாசிரியர், த.மு.எ.ச. மாநிலத்தலைவர்)

வாழ்த்துரை:
திரு.கஸ்தூரிரங்கன் (ஆசிரியர்)
இவரின் வலைப்பக்கம் http://www.malartharu.org/

திரு.ஓ.முத்து (துணைக் கோட்டப்பொறியாளர் - ஓய்வு, பி.எஸ்.என்.எல்., மதுரை)


ஏற்புரை: வி.கிரேஸ் பிரதிபா (வலைத்தளம் தேன் மதுரத்தமிழ்)

என் நூல் வெளியீட்டைச் சிறப்பிக்கும் இவர்களுக்கும் இதற்குத் தளம் அமைத்துக் கொடுத்தப்  பதிவர்த்  திருவிழா நிர்வாகக்குழுவின் சீனா ஐயா, தனபாலன் அண்ணா, பிரகாஷ், மதுரை சரவணன் சகோ மற்றும் அனைத்துப் பதிவுலக நண்பர்களுக்கும் என் மனங்கனிந்த நன்றிகள்.

அன்புடன்,
கிரேஸ் 

துளிர் விடும் விதைகள் - அணிந்துரை - எம்.ஏ.சுசிலா

திருமதி.எம்,ஏ.சுசிலா (http://www.masusila.com/) அவர்கள் பாத்திமா கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர்(ஓய்வு). எழுத்தாளராகத் தன் பணியைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார். நான் பாத்திமா கல்லூரியில் இயற்பியல் படித்தபொழுது எனக்கு நேரிடையாகப் பாடம் எடுக்காவிட்டாலும், அவரை நன்கு அறிவேன். அட்லாண்டாவில் இருக்கும்பொழுது வலைத்தளம் மூலமாகவே மீண்டும் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டேன். என் கவிதைத் தொகுப்பு வெளியிடப்போகிறேன் என்று கூறி அணிந்துரை கேட்டபொழுது மகிழ்வுடன் ஒப்புகொண்டார். அவருக்கு என் உளமார்ந்த நன்றி. அவர் வழங்கிய அணிந்துரையை  இங்கே பகிர்கிறேன்.

துளிர் விடும் விதைகள் - லவ் குரு முகவுரை

என் நண்பர் ஸ்ரீனி வழியாக அறிமுகமானவர் திரு.ராஜவேல். சென்னை ரேடியோ சிட்டி பண்பலையில் ரேடியோ ஜாக்கியாகப்(லவ்குரு) பணிபுரியும் அவர் தன் வேலை நெருக்கடிகளுக்கிடையிலும் என் கவிதைகளைப் படித்து உள்வாங்கி முகவுரை வழங்கியிருக்கிறார். திரைப்படத் துறையில் உதவி வசனகர்த்தாவாகவும்(கேடி பில்லா கில்லாடி ரங்கா, கப்பல்...) தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதுடன் அவர் வழங்கிய முகவுரையை இங்கே பகிர்கிறேன்.

“நற்றிணைக் காதலி“யின் இன்றைய கவிதைகள்! – நா.முத்துநிலவன் - முன்னுரை

என் கவிதைத் தொகுப்பான 'துளிர் விடும் விதைகள்' வடிவம் பெற்று அச்சுக்குச் செல்ல பெரிதும் உதவிய திரு.முத்துநிலவன் அண்ணா அன்புடன் முன்னுரையும் வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு என் மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அவர் வழங்கிய முன்னுரையை இங்கே பகிர்கிறேன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 “கன்னடமும், களிதெலுங்கும், கவின்மலையாளமும்“ தமிழிலிருந்து கிளைத்தெழுந்த மொழிகள் என மனோண்மணீயம் பெ.சுந்தரனார் பாடுகிறார். மொழிநூல் வல்லுநர்களும் அவ்வாறே சொல்கிறார்கள். ஆனால் அதனால் தமிழுக்கென்ன பெருமை என்று எனக்குத் தெரியவில்லை. “உலகின் மிக அதிக வயதானவர் என் தாத்தா” என்று சொல்வதில் பேரனுக்கு உள்ள பெருமையன்றி, பேரனின் இன்றைய நிலை என்ன? என்பதல்லவா முக்கியம்?

பெரும் விடுதலை - கொக்கரக்கோ இதழில்

கொக்கரக்கோ மார்ச் இதழில், பெண் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண் வாழ்வு குறித்த என் கவிதை. வெளியிட்டிருக்கும் ஆசிரியர் குழுவிற்கு நெஞ்சார்ந...