மதுர மதுரை


மதுரை! இனிய நினைவுகளுடன் உணர்வில் கலந்த மதுரமான ஊர். மதுரை பற்றிய நினைவுகள் என் சிறு வயதிலிருந்தே மனதில் பதிந்தவை. கொடைக்கானலில் இருந்து விடுமுறைக்கு பெரியம்மா வீட்டிற்கு வரும் மகிழ்ச்சி இன்னும் மனதில். அப்பொழுது பெரியம்மா வீட்டில் மின்விசிறிக்கு அடியில் படுத்துக்கொண்டு, அதன் நடுவே இருக்கும் கலைநயம் பொருந்திய கோப்பையைப் பயத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன், கழண்டு மேலே விழுந்துவிடுமோ என்று!

ஐங்குறுநூறு 210 - குன்று நோக்கத் தணியும் நோய்

இது வேறொன்றுமில்லை தாயே, மந்திரவாதி வேண்டாம். தெய்வத்தால் என்று நினைத்துப் பலிகொடுத்ததால் புலால் நாற்றமெடுக்கும் கல்லின் மீது ஏறி நின்று அவருடைய அழகிய மலையைப் பார்த்தாலே போதும்.

image:thanks google

கடலுக்கோர் கடிதம்

அன்பு கடலுக்கு,

வணக்கம்!
       உன்னருகே இல்லாவிட்டாலும் உன்னால் பயன் பெரும் உன்னருமை போற்றும் ஒரு மகள் எழுதும் மடல். உன் நீர் போக்கு காற்றும் மழையும் நீரும் உணவும் வெப்பமும் குளுமையும் என்று எங்கள் வாழ்வில் எல்லாம் தருகிறது. அதற்காக உனக்கு உன் அடியாழம் வரையிலுமான நன்றிகள்!

செயல்முரண், சாமானியன்



தாகம் தாகம் என்று குழந்தைகள் 
ஏங்கி வாட உள்ளம் பதைத்தவள்
அங்கும் இங்கும் சேர்த்து முகிலினில்
பாங்காய்க் கொண்டு வந்தாள் தணித்திட!

கடவுளைக் கண்டேன் (3)


 கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் சொன்னாரோ இல்லையோ அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு கனவு காண்கிறார்கள். ஆனால் இங்கு ஒருவர், அதுதாங்க பெரிய மீசைக்காரர், கில்லர்ஜி , அதையே போட்டியாக்கிவிட்டார், கடவுளைக் கண்டேன் (1). சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இது போட்டிதானே? பத்து பேரை மற்றவருக்கு முன் நாம் பிடிக்க வேண்டுமே! இதில் என் அன்புச் சகோதரி கீதா இரண்டாம் பத்தைப் பிடித்துவிட்டார்கள், கடவுளைக் கண்டேன் (2).

ஆசையே அலை போலே, நாமெல்லாம் அதன் மேலே...

ஒன்றா....ரெண்டா..ஆசைகள்! ...

கசங்கினால் தானே


பயிரைக் கொடுத்துப் பழமும்
தானியம் கொடுத்துக் காய்கறியும்
பண்டமாற்றி வாழ்ந்தனர் பகிர்ந்து

படைவீரர் நாள் Veterans Day

இன்று, நவம்பர் 11ஆம் நாள், Veterans Day! தேசப்பாதுகாப்பிற்காகத் தங்களை அர்ப்பணித்த வீரர்களை நினைவுகூர்ந்து நம் நன்றியைத் தெரிவிக்கக் கொண்டாடப்படுவது. 

முதலாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாக ஜூன் 28, 1919 இல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு ஏழு மாதங்களுக்கு முன்னர் நவம்பர் 11 ஆம் நாள் பதினோறாவது மணிநேரத்தில் கூட்டுப் படைகளுக்கும் ஜெர்மன் படைகளுக்கும் இடையே தற்காலிக போர்நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.

கொள்ளிக் கண்கள்


வானம் குமுறித் தன் சினத்தைக் கொட்டிக்கொண்டிருந்த திங்கள் கிழமை மாலை. தேவாலயத்தில் நடக்கும் வாராந்திர மறைக்கல்வி வகுப்புக்குச் செல்லவேண்டும். பிள்ளைகள் மட்டும் என்றால் கூட விடுமுறை எடுத்திருக்கலாம். ஆனால் அங்கு நான் மூன்றாம் வகுப்பு ஆசிரியை. ஆமாம், நம்பித்தான் ஆகவேண்டும், நானும் ஒரு ஆசிரியை. சரி, நான் சொல்ல வரும் விசயம் வேறு. வகுப்பு முடிந்து பிள்ளைகளை அவரவர் பெற்றோர் அழைத்துச்சென்ற பின் அங்கிருந்து கிளம்பும்பொழுது இரவு மணி ஏழு ஐம்பது.
வானத்தின் சினத்தால் துயருற்ற பூமி தன் எதிர்ப்பைக் காட்டக் கரும்போர்வை போர்த்திக்கொண்டிருந்தது.

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...