500ஆவது பதிவு பன்னாட்டுக் கவியரங்குடன்




தேன் மதுரத் தமிழில் 500ஆவது பதிவு!
சென்ற வாரம்தான் யதார்த்தமாகப் பார்த்துவிட்டேன் ஐந்நூற்றைத் தொட இன்னும் இரண்டு பதிவுகள் என்று! என்ன எழுதலாம் என்ற யோசனையும் எழுந்தது! கவிதையா? கட்டுரையா? சங்க இலக்கியமா? புதுக்கவிதையா? மரபுக்கவிதையா? இதுவா? அதுவா? இப்படியா? அப்படியா? என்று!! அலுவலகப் பணிகளும் குழந்தைகள் பள்ளிக் கடமைகளும் பெருக இதனை பின்னடுப்பில் வைத்துவிட்டேன். நான் விட்டாலும் கவிதை விடாது என்பது போல வந்தது கவியரங்கம் கைகொடுத்து!!
ஒன்றா.. இரண்டா.. கவிதைகள்?
12 நாடுகளிலிருந்து வரும் 16 கவிஞர்களின் கவிதைகளுடன் அரங்கேறுகிறது
  திருவாரூர் திரு. வி. க. அரசு கலைக்கல்லூரி நடத்தும் 
பன்னாட்டுக் கவியரங்கம் அண்ணன் திரு.முத்துநிலவன் தலைமையில்!
என்னுடன் அன்புச் சகோதரிகள்/உறவுகள்  கீதாவும் மைதிலியும்!
இவர்களுடன் சகோதரி பெண்ணியம் செல்வக்குமாரியும் சகோ மீரா செல்வகுமாரும் வலைத்தள நண்பர் யாழ்பாவாணனும்!

கவியரங்கத் தலைப்பு:
நான் நடத்தும் பாடத்தை, ஏன் மறந்தாய் மனிதா?
என்னுடைய உபதலைப்பு காடு!
என் மனதிற்கு மிகவும் இணக்கமான இயற்கையும் கவிதையும் இனிமையாய் இணைந்து, இதோ என் ஐநூறாவது பதிவு!
தொடர்ந்து இணைந்தும் ஊக்குவித்தும் வரும் இனிய நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த அன்பின் நன்றிகள்!
கவியரங்க அழைப்பிதழ் இங்கே, இணைவதற்கு வேண்டிய தகவல்களுடன்!
இணைய வழியில் இணையுங்கள் நண்பர்களே!
இது நம் திருவிழா!
நன்றி!

விருப்பமுள்ள ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் இணைவதற்கு ஓர் இணைப்பு இது.. பயன்படுத்திப் பயன்பெறலாம்! நன்றி!

16 கருத்துகள்:

  1. 500-வது பதிவிற்கு வாழ்த்துகள்...

    திருவிழா ரசிக்க காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடன் வந்து வாழ்த்திய அன்பிற்கு நன்றி அண்ணா. உங்களைப் போன்ற நண்பர்களால் தான் வளர்கிறேன். மனமார்ந்த நன்றி அண்ணா.

      நீக்கு
  2. மனம் நிறைந்த வாழ்த்துகள்.. நிகழ்ச்சி சிறக்கும் என்ற கீற்றுன் ஒளி இன்னும் வளர்கிறது.அய்யா முத்து நிலவன் கவியரங்கம் குறித்த முன்னேற்பாடுகளில் கொள்ளும் கவனம் அலாதியாயிருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ. உண்மை, நிலவன் அண்ணா மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு வழிநடத்துகிறார்.
      கவியரங்கில் சந்திப்போம் :-)

      நீக்கு
  3. 500 வது பதிவிற்கு வாழ்த்துகள்

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இனிய நல்வாழ்த்துகள் தோழி. மென்மேலும் உங்கள் தமிழ்ப் பணி சிறக்கட்டும். இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா

    பதிலளிநீக்கு
  6. ஐநூறாவது பதிவுற்கு வாழ்த்துகள் சகோதரி

    பதிலளிநீக்கு
  7. 500 ஆவது பதிவைக் கடந்தாச்சு என்பது இலகுவான பயணமல்ல.
    பயன் மிக்க, தரம் மிக்க பதிவுகளாகவே
    தங்கள் பதிவுகளைப் படித்திருக்கிறேன்.
    தொடர்ந்தும் தேன்மதுரத் தமிழில்
    ஆயிரக்கணக்கில்
    ஆயிரமாயிரம் பதிவுகளைப் பகிர்ந்து
    தமிழ் மொழிக்கு வலுவூட்ட வாழ்த்துகள்!

    முத்துநிலவன் ஐயா தலைமையில்
    கவியரங்கம் வெற்றி பெறும் - அங்கே
    எல்லோரது பங்களிப்பும் - அவருக்கு
    வலுச்சேர்க்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆழ்ந்த பாராட்டிற்கும் வாழ்த்துகளுக்கும் சிரம்தாழ்ந்த நன்றி ஐயா.

      கவியரங்கம் வெற்றியடைய வாழ்த்தியதற்கும் மனமார்ந்த நன்றிகள். ஆமாம், இணைந்து வெற்றி பெறுவோம் அண்ணனின் தலைமையில், கவியரங்கில் சந்திப்போம், உங்களுக்கும் வாழ்த்துகள்!

      நீக்கு
  8. 500-ஆவது பதிவு - மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடரட்டும் தங்கள் வலைப்பயணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் நிறைந்த நன்றிகள் அண்ணா, தொடர் ஊக்கத்திற்கும் வாழ்த்திற்கும்.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...