இடுகைகள்

ஜனவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்த் திருநாளே

படம்
பொங்கலோ பொங்கல்

ஜனவரி 14, 1991

படம்
மனக்கடலின் ஆழத்திலிருந்து மேலெழுந்து ஒருவாரகாலமாக அலைக்கழித்துக் கொண்டிருக்கும் நினைவுகள். ஆழி தள்ளும் பலவிதக் கிளிஞ்சல்கள் போல உள்ளம்  நிறைக்கும் உணர்வுகள் தான் எத்தனை! ஏக்கம் சுரக்கும்  இந்நினைவலைகளை இதயத்துடிப்போடு விரல்வழிக் கொணர்ந்து எழுத்துகளில் கோர்த்துவிட்டால்  இதயம் இலேசாகுமோ என்னவோ என்றும் இருக்குமல்லவா?

புத்தாண்டு நினைவலைகள்

படம்
சத்தமின்றிச் சலிப்பின்றி சுழன்றுக் கொண்டிருக்கும் காலச்சக்கரத்தில் சமூகம் சார்ந்து, தனிமனிதன் சார்ந்து, இடம் சார்ந்து, மதம் சார்ந்து, பருவங்கள் சார்ந்து பல விழாக்கள், நிகழ்வுகள். உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு விழாவாக மகிழ்வாக ஆங்கிலப் புத்தாண்டு. புத்தாண்டுக்குத் தெரியுமோ மொழிகள் என்ற  கேள்வி எழுந்தாலும் ஒவ்வொரு மொழிக்கும் இனத்திற்கும் இடத்திற்கும் அவரவர் ஆண்டின் தொடக்கம் உண்டு, ஒரு புத்தாண்டு உண்டு. பரங்கியர் தயவால் ஆங்கிலம் உலகில் பரந்த இடத்தைப் பிடித்ததால் ஆங்கிலப் புத்தாண்டு உலகமுழுவதும்! சரி, கல்விக்கூடம் சேர விண்ணப்பிக்கும் குழந்தைபோல பிடரிசுற்றி காதைத் தொடப் பார்க்கிறேன். நேராக காதிற்கு, இல்லை, பதிவிற்கு வருகிறேன். புத்தாண்டு நாள் உலைகிண்டும் கரண்டிபோல என் ஆழ்மனம் வரைத் தொட்டுக் கிளறிவிட்டு சூரியனோடு மறைந்துவிட்டது. மனதின் நினைவுகளோ சுழன்று கொண்டேயிருக்கிறேது. மன உலையின் நினைவலைகளை இங்கே பரிமாறலாம் என்றே இப்பதிவு.