இடுகைகள்

2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வீரச்சுதந்திரப் பெண்கள்

படம்
அடக்குமுறைகள் தாண்டி ஆதிக்கவெறிகள் தகர்த்து வீறுகொண்டு எழுந்தோம் ஆண்களைச் சாடவில்லை ஆதிக்கவெறி எமக்கில்லை பாரதிகண்ட  புதுமைப்பெண்கள் நாங்கள் 

சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா

படம்
வெள்ளையராட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த நம் மக்கள் வீறுகொண்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வீறுகொண்ட பாடல்களை பாடினர் பல கவிஞர்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகள். பாடல்களின் வலிமையை உணர்ந்தவர்கள் அவர்கள்! எழுச்சிப் பாடல்களைக் கேட்ட மக்களும் தங்கள் பங்கை உணர்ந்து செயல்பட்டனர். சுதந்திரம் பெற்றோம், காலப்போக்கில் அதன் மகத்துவத்தை மறந்தும்போனோம். கொடிபிடித்துச் சென்று அடிவாங்கிய குமரனுக்கு அல்லவா அந்த வலி தெரியும்? இன்னும் அவருடன் சென்றவர்களுக்கும் பார்த்தவர்களுக்கும் தெரிந்திருக்கும். அவர்கள் மறைந்த பின்னர், சுதந்திரம் என்ன, அதன் பெருமை என்ன, சுதந்திரம் பெறுவதற்கு எத்தனை தியாகங்கள் செய்யப்பட்டன என்று எல்லாம் தெரியாமல் ஒரு சமூகம் வளர்ந்துகொண்டிருக்கிறது. கண்ணியம் இன்றி பேசவும், எழுதவும் மற்றவரைக் குறிப்பாகப் பெண்களை இழிவு படுத்துவதைச் சுதந்திரம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றன சில இழிபதர்கள்!

யாசகம் - கவிதைமணியில்

படம்
இரவலரும் புரவலரும் இருந்தனர் மன்னராட்சியில் கொடை வள்ளலாய் இருந்தனர் மன்னர்களும் கேட்க நன்றாகத் தானிருக்கிறது

வடிநிலத்தில் விமான நிலையம்!

படம்
மழை பெய்தால் ஓடும் நீரில் கப்பல் விட்டுவிளையாடுவோம். நீரில் கப்பல்...இல்ல இல்ல மன்னிச்சுக்கோங்க...விமானம் விடலாம் என்பது சத்தியமா எனக்குத் தெரியாது!!! நீர் நிலைகளை அழித்து வீடுகளும் தொழிற்பேட்டைகளும் கட்டப்பட்டது என்று பார்த்தால் ..சர்வ தேச விமான நிலையமே கட்டப்பட்டிருக்கு! முதலில் என் நண்பன் படங்களைப் பகிர்ந்து சொன்னபோது ... அதிர்ச்சியும் அல்லாத கோபமும் அல்லாத ஏதோ ஒரு உணர்வு ஏற்பட்டது!!  ground view in google maps aerial view in google maps

சிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா?

படம்
எல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. அதிலும் அண்ணனுக்கு வலிமை அதிகம். இப்பொழுது பெய்யும் மழைக்கும் எல் நினோ காரணமாய் இருக்கலாம்.

தினமணி கவிதைமணியில் - பேயென பெய்யும் மழை

படம்
தினமணி நாளிதழின் கவிதைமணியில் 'பேயென பெய்யும் மழை' என்ற தலைப்பில் வந்திருக்கும் என் கவிதை:

மதுர மதுரை

படம்
மதுரை! இனிய நினைவுகளுடன் உணர்வில் கலந்த மதுரமான ஊர். மதுரை பற்றிய நினைவுகள் என் சிறு வயதிலிருந்தே மனதில் பதிந்தவை. கொடைக்கானலில் இருந்து விடுமுறைக்கு பெரியம்மா வீட்டிற்கு வரும் மகிழ்ச்சி இன்னும் மனதில். அப்பொழுது பெரியம்மா வீட்டில் மின்விசிறிக்கு அடியில் படுத்துக்கொண்டு, அதன் நடுவே இருக்கும் கலைநயம் பொருந்திய கோப்பையைப் பயத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன், கழண்டு மேலே விழுந்துவிடுமோ என்று!

இனியும் ...

படம்
இனியும் இனியும்  என்றே கழிந்தது  ஒரு யுகம் இனி (என்பது) இப்பொழுது  ஆகட்டும்!

குன்று நோக்கத் தணியும் நோய்

படம்
இது வேறொன்றுமில்லை தாயே, மந்திரவாதி வேண்டாம். தெய்வத்தால் என்று நினைத்துப் பலிகொடுத்ததால் புலால் நாற்றமெடுக்கும் கல்லின் மீது ஏறி நின்று அவருடைய அழகிய மலையைப் பார்த்தாலே போதும். image:thanks google

கடலுக்கோர் கடிதம்

படம்
அன்பு கடலுக்கு, வணக்கம்!        உன்னருகே இல்லாவிட்டாலும் உன்னால் பயன் பெரும் உன்னருமை போற்றும் ஒரு மகள் எழுதும் மடல். உன் நீர் போக்கு காற்றும் மழையும் நீரும் உணவும் வெப்பமும் குளுமையும் என்று எங்கள் வாழ்வில் எல்லாம் தருகிறது. அதற்காக உனக்கு உன் அடியாழம் வரையிலுமான நன்றிகள்!

செயல்முரண், சாமானியன்

படம்
தாகம் தாகம் என்று குழந்தைகள்  ஏங்கி வாட உள்ளம் பதைத்தவள் அங்கும் இங்கும் சேர்த்து முகிலினில் பாங்காய்க் கொண்டு வந்தாள் தணித்திட!

கடவுளைக் கண்டேன் (3)

படம்
 கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் சொன்னாரோ இல்லையோ அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு கனவு காண்கிறார்கள். ஆனால் இங்கு ஒருவர், அதுதாங்க பெரிய மீசைக்காரர், கில்லர்ஜி , அதையே போட்டியாக்கிவிட்டார், கடவுளைக் கண்டேன் (1) . சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இது போட்டிதானே? பத்து பேரை மற்றவருக்கு முன் நாம் பிடிக்க வேண்டுமே! இதில் என் அன்புச் சகோதரி கீதா இரண்டாம் பத்தைப் பிடித்துவிட்டார்கள், கடவுளைக் கண்டேன் (2). ஆசையே அலை போலே, நாமெல்லாம் அதன் மேலே... ஒன்றா....ரெண்டா..ஆசைகள்! ...

கசங்கினால் தானே

படம்
பயிரைக் கொடுத்துப் பழமும் தானியம் கொடுத்துக் காய்கறியும் பண்டமாற்றி வாழ்ந்தனர் பகிர்ந்து

படைவீரர் நாள் Veterans Day

படம்
இன்று, நவம்பர் 11ஆம் நாள், Veterans Day! தேசப்பாதுகாப்பிற்காகத் தங்களை அர்ப்பணித்த வீரர்களை நினைவுகூர்ந்து நம் நன்றியைத் தெரிவிக்கக் கொண்டாடப்படுவது.  முதலாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாக ஜூன் 28, 1919 இல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு ஏழு மாதங்களுக்கு முன்னர் நவம்பர் 11 ஆம் நாள் பதினோறாவது மணிநேரத்தில் கூட்டுப் படைகளுக்கும் ஜெர்மன் படைகளுக்கும் இடையே தற்காலிக போர்நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.

கொள்ளிக் கண்கள்

படம்
வானம் குமுறித் தன் சினத்தைக் கொட்டிக்கொண்டிருந்த திங்கள் கிழமை மாலை. தேவாலயத்தில் நடக்கும் வாராந்திர மறைக்கல்வி வகுப்புக்குச் செல்லவேண்டும். பிள்ளைகள் மட்டும் என்றால் கூட விடுமுறை எடுத்திருக்கலாம். ஆனால் அங்கு நான் மூன்றாம் வகுப்பு ஆசிரியை. ஆமாம், நம்பித்தான் ஆகவேண்டும், நானும் ஒரு ஆசிரியை. சரி, நான் சொல்ல வரும் விசயம் வேறு. வகுப்பு முடிந்து பிள்ளைகளை அவரவர் பெற்றோர் அழைத்துச்சென்ற பின் அங்கிருந்து கிளம்பும்பொழுது இரவு மணி ஏழு ஐம்பது. வானத்தின் சினத்தால் துயருற்ற பூமி தன் எதிர்ப்பைக் காட்டக் கரும்போர்வை போர்த்திக்கொண்டிருந்தது.

உதைத்திருந்தாலும்

படம்
image:thanks google, click to go to site நேற்று வரை உதை உதை என்று உதைத்திருந்தாலும்

வேராடா மரங்கள்

படம்
மழைக்கும் காற்றுக்கும் வலுப்போர் உலுக்கி உதிர்க்கும் இலைகளை நனைத்தோடும் நீரோட்டம் மேலாடினாலும் வேராடா மரங்கள் இருபடைக்கும்  தேவை இன்றும் என்றும் என்றென்றும்

தட்டி விடாமலிருந்திருந்தால்

படம்
படம்: நன்றி இணையம் அடுத்த அறைவரை  அரிசி மணிகளாய்ச் சிதறியக்   கோப்பை சிதறி யிருக்கலாம் தேங்காய்ச் சில்லாய்

அடுத்த அடி என்ன?

படம்
வலைப்பதிவர் திருவிழா இனிதே முடிந்தது. ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் முன்வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நாம் செய்ய வேண்டியது என்ன?

கண் மறையா மணிக் குன்று

படம்
இருண்ட மழைமேகம் மறைக்காமல் எப்பொழுதும் கண் முன் தெரிகிறதே அவருடைய நீலமணி போன்ற குன்றுகள். நீ என்னடாவென்றால் மறந்திரு என்று எளிதாகச் சொல்கிறாய்.

இனிதே நிறைவுற்ற வலைப்பதிவர் விழா 2015

படம்
"உங்களைக் கீழே தள்ளுவது முடியாத விசயம் என்றாகும் வரை மேலே, மேலே உயர்ந்து கொண்டே இருங்கள்" - நைஜீரிய எழுத்தாளர் மைக்கேல் பஸ்ஸி ஜான்சன். நன்றியுடன் திரு.தமிழ் இளங்கோ ஐயாவின் தளத்திலிருந்து வலைப்பதிவர்த் திருவிழா இனிதே நடந்து முடிந்தது. வர இயலவில்லை எனினும் இணைய உதவியுடன் இணைய முடிந்தது.

வலைப்பதிவர் திருவிழா நேரடி ஒளிபரப்பு

வலைப்பதிவர்  திருவிழா நேரடி ஒளிபரப்பைக் கண்டுகளியுங்கள் https://www.youtube.com/watch?v=qNmGS8kniK4 விழாக்குழுவினருக்கும் UK infotech நிறுவனத்திற்கும் மனம் நிறைந்த நன்றி.

சங்கமம் என்பிள்ளைகள் என்றாள்

படம்
கவியெழுத அமர்ந்தேன்    கன்னியவள் வரவில்லை  தளைசேர்க்கத்  தவித்தேன்    தமிழன்னை வரவில்லை

லட்சம் பதிவுகள் கண்ணோடு

படம்
பதிவர் யாவருக்கும் நண்பர் பதிவில் தவறாது இவர்கருத்து வலைச்சித்தர் தொழில்நுட்ப வித்தகர் வலையுலகம் வியக்கும் உழைப்பாளி பணிகளில் சுழன்று கொண்டே பாட்டும் எழுதியிருக்கிறார்  அருமை அவர் அனுமதிப்பார் என்றே அகமகிழ்ந்துப் பகிர்கிறேன் ரசியுங்கள்

மழைக்காடுகள் காக்கும் அலைபேசிகள்

படம்
              அலைபேசி! தொழில்நுட்ப வளர்ச்சியின் செல்லக் குழந்தை. தொலைவில் உள்ளவர்களுடன் பேசுவதற்கு என்ற உபயோகத்தைத் தாண்டி, குறுஞ்செய்தி அனுப்புவது, படங்கள் அனுப்புவது என்று முன்னேறி இன்று உலகை நம் கையில் கொண்டுவரும் அலைபேசி, தொலையும் மழைக்காடுகளையும் காக்கப் பயன்படுவது மகிழ்வான விசயம். அதுவும் ஒரு இளைஞரின் ஆக்கபூர்வ சிந்தனையாலும் உழைப்பாலும் கண்டுபிடிக்கப்பட்டது என்பது கூடுதல் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருகிறது.

முன்துடைப்பான்

படம்
படம்: நன்றி இணையம் என்னைப் பாதுகாக்கத் துடிக்கிறது வண்டி முன்துடைப்பான் பெருமழை

புயலை ஆற்று

படம்
மழையென  மகிழவா? அழிவென வருந்தவா?  பிழையது எமதுதான் வழியெதும் உரைத்திடு வழக்கைநீ செவிமடு பிழையதுப் பொறுத்திடு 

வருக வருக வருகவே

படம்
இணைந்தோம் பதிவர் வலையிலே  இணையம் தமிழால் நிறையவே பெருகச்  சிநேகம் குழுவிலே வருக வருக வருகவே

மனிதம் வாழ்தல் பண்பாடென்றால்

படம்
பிறரை மதித்தல்  பண்பாடென்றால்     பெரிதும் தேவை இன்றைக்கு பயங்கர வாதம் ஒழிந்திடவே      பாரினில் பண்பாடு மிகத்தேவை

அலையும் நுரையும் கடலல்ல

படம்
   சுற்றுலா என்று மலைப்பிரதேசத்திற்கும் கடற்கரைக்கும் செல்கிறோம். பசுமையைப் பார்த்து பரவசமாகிறோம். அலைகளைப் பார்த்து ஆர்ப்பரிக்கிறோம். ஆனால் இவ்விடங்கள் சில ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நாம் யோசிப்பதில்லை. நம் தாத்தா பாட்டன் காலத்திலும் அதற்கு முன்னும் எப்படி இருந்திருக்கும்? வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால்

இளையோர் நீர்தாம் நம்பிக்கை

படம்
தம்பி தங்காய் கேட்டிடுவாய்       தரணி நிலையைப் பார்த்திடுவாய் இம்மண் வறட்சித் தடுத்திடுவாய்         இன்றே செயலில் இறங்கிடுவாய்   தும்பக் கொடுமை எதிர்த்திடுவாய்        துள்ளி எழுந்தே அழித்திடுவாய்  நம்பி அழைத்தோம் உனைத்தானே       நாளை உலகம் நீர்தாமே

கணினி முதல் மேகப் பயன்பாட்டியல் வரை

படம்
தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள் தோன்றிய காலத்தில் (1855) இருந்த தமிழின் நிலைக்கும் அவர்கள் மறைந்த காலத்தில் (1942) தமிழ் உயர்ந்துநின்ற நிலைக்கும் எவ்வளவோ வேற்றுமை உண்டு என்று கி.வா.ஜகநாதன் அவர்கள் திரு.உ.வே.சா. அவர்களின் வாழ்க்கை வரலாறான ‘என் சரித்திரம்’ நூலின் முன்னுரையில் சொல்லியிருப்பார். தமிழ்த் தாத்தா தோன்றிய காலத்தில் புலவர்களுக்கும் பெயரளவில் மட்டுமே தெரிந்திருந்த சங்க இலக்கியங்கள் பின்னர் தமிழ்த்தாத்தா மறைந்ததற்குப் பின்னான காலத்தில் பள்ளிக்கூடங்களிலும் கற்றுக்கொடுக்கப் படுகின்றன என்று சொல்லியிருப்பார்.

வேண்டாவும் வேண்டும் - பெண் சமத்துவம்

படம்
நிமிர்ந்த நல்ல நடையும் நேர்கொண்ட பார்வையும் வரையும் கலையில் அதிஅற்புதத் திறமையும் கொண்ட அந்தப் பெண்ணிடம், “ரொம்ப அழகா வரைஞ்சுருக்க, உன் பேரென்ன?” என்று கேட்டேன். அவள் பதில் என்னைச் சில நொடிகள் திகைக்க வைத்தது. அந்த சில நொடிகளில் என் மூளையில் ஏற்பட்ட எண்ணப் பிரளயமோ   மிகப்பெரிது.

பூமியும் பூக்குதிங்கே சோலையாக

படம்
படம்: நன்றி இணையம் பண்பாடு பண்பாடு பண்ணிசைத்து நீபாடு பண்பெல்லாம் சொல்லியேப் பண்ணிசைத்து நீபாடு நம்மினம் நம்மொழி நம்பெருமை என்றுபாடு இம்மண்ணின் பெருமை போற்றிநீ  பண்பாடு

எட்டுப்பட்டி கிராமம் எங்கிலும் போஸ்டர் ஒட்டியாச்சே

படம்
படம்: இணையத்திலிருந்து கண்ணம்மா, விழாவுக்கு இன்னும் ஒரு மாசம்கூட இல்லை. சொல்றவங்களுக்கெல்லாம் சொல்லியாச்சுல்ல? சொல்லியாச்சு தங்கம்மா, நம்மகுடும்பத்துல எல்லோருமே கூவி கூவி சொல்லிட்டு இருக்கோமே... ஆமாமா! எட்டுப்பட்டி கிராமம் எங்கிலும் போஸ்டர் ஒட்டியாச்சே!

கட்டுக்குள் வருமாக் கரிமக் கால்தடம்?

படம்
மனிதனின் , விலங்குகளின் , பறவைகளின் , செடிகொடிகளின் - பூமியின் வாழ்வாதாரம் சுற்றுச்சூழல். நாம் பார்க்கும் , உணரும் , சுவாசிக்கும் , கேட்கும் , நுகரும் அனைத்துமே நம் சுற்றுச்சூழல் தான். உண்ணும் உணவு , குடிக்கும் நீர் , சுவாசிக்கும் காற்று என்று அனைத்தும் சுற்றுச்சூழலிருந்தே அனைத்து உயிர்களுக்கும் கிடைக்கின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச் சூழலுக்கு நாம் என்ன செய்கிறோம் , நம் செயல்களால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது பற்றிய விழிப்புணர்வு நமக்குக் கண்டிப்பாக வேண்டும்.

கட்டுரை எழுதப் போறேன், காசு வாங்க போறேன்

படம்
இதனால் நம் அன்புத் தமிழ் வலைப்பதிவர்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால்... திருமயக்கோட்டை நாட்டுக்காரங்க , அதாகப் பட்டது புதுக்கோட்டைப் பதிவர்கள், பதிவர் திருவிழாவிற்கு நம்மை எல்லாம் அழைத்திருக்கிறார்கள். இது நாம் அறிந்ததே! இப்போ நம்ம வலைத்தளத் தமிழ் திறமையைச் சோதிக்கப் போட்டி வைக்கிறாங்களாம். கட்டுரையாம், கவிதையாம்...பரிசு..ஒன்றல்ல! இரண்டல்ல! ஐம்பதாயிரம்! ஐம்பதாயிரம்! யாருக்கோ இல்லை, நமக்கே நமக்குத் தான்.

தமிழ் வலைப்பதிவர் கையேடு - குறிப்பு அனுப்பிட்டீங்களா?

படம்
   வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா 2015 வரும் அக்டோபர் 11 ஆம் நாள் புதுக்கோட்டையில் ! விழா ஏற்பாடுகள் ஒருபுறம் அங்கு செல்வதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் என்று வலையுலகம் களைகட்டியுள்ளது. வெளிநாட்டில் இருப்பதாலோ அல்லது வேறு காரணங்களாலோ செல்லமுடியாதவர்களும்  தமிழ் வலைப்பதிவர் கையேட்டில் இடம்பெறலாம்.

போகுமிடம் களைகட்டுது

படம்
ஊரெல்லாம் ஒரே பேச்சு ஊர் ஊராய்க்  குழு சேருது ஒன்னாச் சேந்தும் போகலாம் தனியாப் போயும் சேந்துக்கலாம்

கண்சிமிட்டல் பார்

படம்
மழையில்உன் கண்பார்த்து மோனித் திருக்க விழைகையில் என்குரல் கேளென்றும் என்முகம் பாரென்றும் மின்னி முழங்கின  மேகங்கள் பார்க்கவில்லைப்  பாவையும் எண்ணமெலாம் நீநிறைக்க

கடலெல்லாம் தண்ணீர் தான்

படம்
ஆறும் குளமும் இல்லையென்றால் யாரும் வாழ முடியாது கடலெல்லாம் தண்ணீர் தான் எடுத்துக் குடிக்க முடியாது

நீலமலர்க் கண்கள்

படம்
  அவர் நாட்டு நீலநிற மலை கண்களில் இருந்து மறையும் போதெல்லாம் இவள் கண்கள் நீரால் நிறையும். அக்குறையை நீக்கி வைத்துவிட்டீர்கள்.

முயல் - சிறுவர் பாடல்

படம்
முயல் பஞ்சுப் பந்து முயலொன்று தாவித்தாவி வருகுது காதைப் புடைத்துக் கேட்குது  பளபளக்கும் கண்ணாலே

மூளையின் கதை - பாகம் 5

படம்
அன்று விடுமுறை, தாமதமாக எழுந்து உணவருந்திவிட்டுத்  தொலைக்காட்சியில் ஒன்றினான் நம்முள் ஒருவன்..அதுதான் அவன் பெயர்! மீண்டும் உணவருந்தி ஒரு குட்டித் தூக்கம் போட்டபின் எங்கேயாவது வெளியேப் போகலாம் என்று கிளம்பிச் சென்றவன் வண்ணத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தக் காட்சியகத்தைப் பார்த்தான். கண்ணாடிக் சுவர்களுக்குள் பல வண்ணக் கார்கள். ஆஹா, போய்ப் பார்க்கலாம் என்று உள்ளே சென்றான். "மே ஐ ஹெல்ப் யூ?" என்று வந்த விற்பனைப் பிரதிநிதியிடம் விசாரித்துக் கொண்டேப்  பல கார்களையும் தொட்டும் உட்கார்ந்தும் பார்த்தான். இரண்டு வண்டிகளை ஓட்டியும் பார்த்து இறுதியில் சிவந்த நிறத்தில் எச்சரிக்கை செய்த காரை வாங்கப் பதிவு செய்து முன்பணம் கட்டிவிட்டு வந்தான். அவனுக்குக் கார் தேவையும் இல்லை, அதற்குத் தேவையான பணமும் இல்லை. பிறகு ஏன் நம்முள் ஒருவன் காரை  வாங்கினான்?

முகத்திரண்டு புண்ணுடையார் யார்?

படம்
சுதந்திர தினத்தன்று 'ப்ரீடம் மேலா' (freedom mela) என்று கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர், இங்கிருக்கும் இந்திய நண்பர்கள். ஆஹா! பிள்ளைகள் நம் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதில் பங்கேற்கட்டும் என்று ஆர்வமுடன் பதிவு செய்து, குடும்பத்துடன் சென்றோம். ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூங்காவிற்கு ஒரு மைல் தூரத்திலேயே அவ்வளவு போக்குவரத்து நெரிசல். சற்றுத் தள்ளியிருந்த வணிக வளாகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு நடந்தோம். பூங்காவிற்குள் நுழையும் இடத்தில் வரிசையாக இந்திய மற்றும் அமெரிக்க நாட்டுக் கொடிகள்! பிள்ளைகள் ஆர்வமுடன் சல்யூட் செய்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். இது வரைக்கும் நல்லாப் போச்சு..பிறகு? வாங்க, காண்பிக்கிறேன்.

விதையின்றிக் காடா

படம்
கொடியேற்றி மிட்டாய் கொடுப்பார் குழந்தாய் மடிந்தவர் கோடி மனதில் இருத்து உயிர்நீத்த அந்த உயர்ந்தோர் உணர்வை  உயிரினில் நீயும் நிரப்பு