500ஆவது பதிவு பன்னாட்டுக் கவியரங்குடன்
தேன் மதுரத் தமிழில் 500ஆவது பதிவு!
சென்ற வாரம்தான் யதார்த்தமாகப் பார்த்துவிட்டேன் ஐந்நூற்றைத் தொட இன்னும் இரண்டு பதிவுகள் என்று! என்ன எழுதலாம் என்ற யோசனையும் எழுந்தது! கவிதையா? கட்டுரையா? சங்க இலக்கியமா? புதுக்கவிதையா? மரபுக்கவிதையா? இதுவா? அதுவா? இப்படியா? அப்படியா? என்று!! அலுவலகப் பணிகளும் குழந்தைகள் பள்ளிக் கடமைகளும் பெருக இதனை பின்னடுப்பில் வைத்துவிட்டேன். நான் விட்டாலும் கவிதை விடாது என்பது போல வந்தது கவியரங்கம் கைகொடுத்து!!
ஒன்றா.. இரண்டா.. கவிதைகள்?
12 நாடுகளிலிருந்து வரும் 16 கவிஞர்களின் கவிதைகளுடன் அரங்கேறுகிறது
  திருவாரூர் திரு. வி. க. அரசு கலைக்கல்லூரி நடத்தும் 
பன்னாட்டுக் கவியரங்கம் அண்ணன் திரு.முத்துநிலவன் தலைமையில்!
என்னுடன் அன்புச் சகோதரிகள்/உறவுகள்  கீதாவும் மைதிலியும்!
இவர்களுடன் சகோதரி பெண்ணியம் செல்வக்குமாரியும் சகோ மீரா செல்வகுமாரும் வலைத்தள நண்பர் யாழ்பாவாணனும்!

கவியரங்கத் தலைப்பு:
நான் நடத்தும் பாடத்தை, ஏன் மறந்தாய் மனிதா?
என்னுடைய உபதலைப்பு காடு!
என் மனதிற்கு மிகவும் இணக்கமான இயற்கையும் கவிதையும் இனிமையாய் இணைந்து, இதோ என் ஐநூறாவது பதிவு!
தொடர்ந்து இணைந்தும் ஊக்குவித்தும் வரும் இனிய நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த அன்பின் நன்றிகள்!
கவியரங்க அழைப்பிதழ் இங்கே, இணைவதற்கு வேண்டிய தகவல்களுடன்!
இணைய வழியில் இணையுங்கள் நண்பர்களே!
இது நம் திருவிழா!
நன்றி!

விருப்பமுள்ள ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் இணைவதற்கு ஓர் இணைப்பு இது.. பயன்படுத்திப் பயன்பெறலாம்! நன்றி!

இணைய மேடை இங்கிதங்கள்

படம்: நன்றி இணையம்

இணையவழி இணைப்புகளில் (Zoom) இணையும் பொழுது நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

நூல்கள் எனும் நுட்ப ஒளி

படம்: நன்றி இணையம் 

கண்டதும் காதல் காணாமல் காதல்

கடிதத்தில் காதல் கணினியில் காதல்

என்னென்னவோ சொல்கிறார்கள்

என் காதல் துளிர்த்ததெப்போது எப்படி?

உலகக் கவியரங்கம் கவிமாலை சிங்கப்பூர்

அலுவல் கழுத்தை நெரிக்கையிலே 
அயர்ச்சி நீக்கும் இளங்காற்றாய் 
அழைப்பொன்று வந்ததுவே 
கவியரங்க மேடை காட்டி 
கவியொன்று பாடச் சொல்லி 

Dr. Muthulakshmi Reddy | மரு.முத்துலட்சுமி ரெட்டிஅட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தில் மகளிர் வாரக் கொண்டாட்டத்தில் (தகவல் பதிவு), சமூகத்தில் தடம் பதித்தத் தாரகை மரு.முத்துலட்சுமி ரெட்டி அவர்களைப் பற்றி நான் பகிர்ந்து கொண்டதன் காணொலி.

என்னுடன் இன்னும் நான்கு தோழியர் பகிர்ந்து கொண்ட முழு நிகழ்ச்சியையும் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் முகநூல் பக்கத்தில் பார்க்கலாம்.

பண்டிகைகள் சிறக்கப் போதிய பணம் வேண்டும்தானே?

நிறையட்டும்!தீபாவளி கொண்டாடும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்! வாழ்வில் இன்பமும் ஒளியும் அனைத்து நலமும் நிறைந்து வாழ வாழ்த்...