யாழிசை இல்லறம் - ஐங்குறுநூறு 402

 


ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. தலைவனும் தலைவியும் திருமணம் புரிந்து  இல்லறம் நடத்துவதைப் பாடும் பாடல்கள். தலைவனும் தலைவியும் இல்லத்தில் காதலோடு இன்புற்றிருந்து வாழ்வதும் முல்லைத்திணையின் 'இருத்தலும் இருத்தல் நிமித்தமும்' என்ற உரிப்பொருளுக்குப் பொருந்தும் என்பார் திரு.பொ.வே.சோமசுந்தரனார். 

சாயாவனம், சா.கந்தசாமி - நூலறிமுகம்

 சாயாவனம் நூல் அறிமுகம் 



நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

காணொளியைப் பார்த்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். நன்றி .

என்ன மரமது சொல்வாய் - ஐங்குறுநூறு 201


"என்னவன் அணிந்தான் தழைகளை
எனக்கும் கொடுத்தான் ஆடையாய்;
அவன்மலைச் சாரல் வளர்ந்திடும் மரம்
என்ன மரமது தோழி, சொல்வாய்!"
இப்பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு, இந்த இணைப்பில் சொடுக்கவும், What tree is it my friend.

'பெண் ஏன் அடிமையானாள்?' நூல் திறனாய்வு

 


பெண் ஏன் அடிமையானாள்? - தந்தை பெரியார் 

நூல் திறனாய்வு  - வி. கிரேஸ் பிரதிபா 

தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி கடந்த ஆண்டு (2020) நடத்தப்பட்ட 'பெண் ஏன் அடிமையானாள்?' நூல் திறனாய்வுப்போட்டியில் நான்காம் பரிசு பெற்ற என் கட்டுரை.

பாரதி கண்ட தேசியம் - கருத்தரங்க உரை


 

வலைத்தமிழ் தொலைக்காட்சி, Masters Academy of Speech and Training (MAST), Singapore,மற்றும் ACE International, Singapore இணைந்து நடத்திய மறைந்தாலும் வாழும் பாரதி பன்னாட்டு நூற்றாண்டு நினைவஞ்சலி!

 'பாரதி தமிழுக்குத் தஞ்சம் அவன் பன்முகப் பார்வை எவரையும் விஞ்சும்' பன்னாட்டுக் கருத்தரங்கம்!

 இரண்டாம் நாளான செப்டம்பர் திங்கள் 12ஆம் நாள் என்னுடைய உரை, 'பாரதி கண்ட தேசியம்' எனும் தலைப்பில்!

 

என்னுயிர் தொட்டுவரும் - 1

Image:Thanks to Internet

 

ஒரு வாளி நிறையக் கற்களை 

உருட்டிவிட்டதைப் போல 

யப்பாஆ! இவ்வளவு நேரமா! 

எதன் மீது விழுகிறதோ என்றோர் பதட்டம்! 

பெருத்த கட்டியத்துடன் 

விண்ணிலிருந்து துள்ளிவரும் நீர்த்துளிகள்! 

அவற்றிற்கு வழிகாட்டவோ மின்னல் விளக்குகள்!

பெருமைக்குரிய பெண்கள் - வல்லினச் சிறகுகள்

 


வல்லினச் சிறகுகள் ஏப்ரல் 2021 இதழில் வெளிவந்திருக்கும் என்னுடைய கவிதையும் 'பெருமைக்குரிய பெண்கள்' பகுதியில் நான் காணும் நேர்காணலும் மகிழ்வு தரும்இன்னும் இரண்டு செய்திகளும்!

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - உரோமைத் தமிழ்ச் சங்கத்தில் என் சிறப்புரை

 


'தமிழ் என் தாய் தந்த அமுதம்' மற்றும் உரோமைத் தமிழ்ச் சங்கம் இணைந்து 'வாங்க கொண்டலாம்' என்ற நிகழ்ச்சியைத் திங்கள் தோறும் நடத்துகின்றனர். அதில் ஏப்ரல் திங்களில் பாரதிதாசன் அவர்களைக் கொண்டாடிச் சிறப்பித்தனர். அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக என்னை அழைத்திருந்தனர்.

அனிகம் நீயே!

தனிமை தடுக்கும் நட்பே திகட்டா தேனமுதே
கனிவே மொழியாய் யாவும் உணர்த்தும் நுவல்வோனே
அனித அறிவை அன்பாய்ப் புகட்டும் அன்னையே
அனிலம் அகற்றி அகிலம் வெல்லும் ஆயுதமே
நனிதவ அணியே நூலெனும் கொடையே
அனிசமும் எந்தன் அனிகம் நீயே!

- கிரேஸ் பிரதிபா
 

அனிதம் - கணக்கற்றது; அனிலம் - அச்சம்; அனிசம் - எப்பொழுதும்; அனிகம் - சிவிகை, சேனை;

பெண்களுக்கு ஏற்படும் உளவியல் பிரச்சனைகளும் தீர்வுகளும் - மனநல ஆலோசகருடன்

 

அன்புத்தோழி, நிகழ்காலம் வலைத்தளத்தின் வலைப்பதிவர், மனமகிழ் மைன்ட் கேர் நிறுவனர், எழில் அவர்களின் மன நலம் குறித்த விளக்கமும் அறிவுரைகளும்!

'நங்கை கூறும் நவீனங்கள்' எனும் தலைப்பில் பெண்களுக்கான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வருகிறேன். இந்நிகழ்ச்சி தமிழ் அமெரிக்கத் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படுகிறது. 

இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மனநலம் குறித்துப் பேசலாம் என்று தோழி எழிலிடம் கேட்டவுடன் சரியென்று ஒத்துக்கொண்டார். மனம் நிறைந்த நன்றிகள், எழிலுக்கு! அருமையாக மனநலம் குறித்த அறிவியல்பூர்வமான தகவல்களையும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் தீர்வுக்கான வழிமுறைகளையும் தெளிவாகப் பகிர்ந்துகொண்டார். காணொலியைப் பார்த்து உங்கள் கருத்துகளைப் பகிருங்கள். 

நன்றி!

பெருமைக்குரிய பெண்கள் நேர்காணல் மற்றும் என் கவிதை - வல்லினச்சிறகுகள்

 

வல்லினச் சிறகுகள் இதழில் வெளிவந்திருக்கும் என்னுடைய கவிதையும் உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி திருமிகு.பிரபா ஸ்ரீதேவன் அவர்களுடனான என்னுடைய நேர்காணலும். 

பட்டிமன்றம்- பெண்களுக்கான முக்கியத்துவம் கிடைத்துள்ளதா

 


வலைத்தமிழ் இணையதளம் மற்றும் தொலைக்காட்சி அட்லாண்டாவின் யாவரும் கேளிர் குழுவுடன் இணைந்து நடத்திய பட்டிமன்றம்.

பெண்கள் முன்னேற்றமும்  இன்னும் வளரவேண்டியதும் - கலந்துரையாடல் 


பெண்கள் வளர்ச்சி அடைந்துவிட்டனரா? இன்னும் என்னென்ன வழிகளில் துறைகளில் வளர வேண்டும்? ஆக்கப் பூர்வமான ஒரு கலந்துரையாடல்!

அனைத்துலக மகளிர் நாள் 2021 - அறைகூவலிடத்தெரிவுசெய்

 

மார்ச் 8 - அனைத்துலக மகளிர் நாள். அனைத்துலக மகளிர் நாள் என்றவொரு அமைப்பு இருக்கிறது, (International Women's Day). இந்த அமைப்பினர் ஆண்டுதோறும் மகளிர் நாளின் மையக்கருத்தாக ஒன்றை அறிவிப்பார்கள. பாலினச் சரிசமநிலைக்கு நாம் எப்படிப் பங்களிக்கலாம் என்று பல்வேறு வழிமுறைகளைச் சொல்லி ஒவ்வொருவரையும் பொறுப்புடன் செயல்பட ஊக்குவிப்பதே இதன் நோக்கம்.