நான் மட்டும் மாறியிருக்கிறேன்


சடசடத்துப் பெய்யும் மழையும்
பட்பட்டென்று மறையும் குமிழும்
காற்றிலாடும் மரங்களும்
அவற்றில் ஆடும் இலைகளும்
சிறு பள்ளத்திலும் தேங்கு நீரும்
பெரும் ஓசையுடன் இடியும் மின்னலும்
மாறவில்லை
நான் மட்டும் மாறியிருக்கிறேன்
தாய்வீட்டுப் பலகணியையும்
என்வீட்டுச் சாளரத்தையும்
காலம்தாண்டி இணைக்கும் மழையே நீ வாழ்க

மழைக் கவிதையுடன், என் வளையொளித் தளத்தில் நான் பகிர்ந்திருக்கும் புதிய காணொலியின் இணைப்பு, கணினியின் முன்னோடிப் பெண்கள். தளம் பிடித்திருந்தால் இணைந்து கொள்ளுங்கள். நன்றி.


இதனை முன்பு என் வலைத்தளத்தில் 2016 மகளிர் நாளன்றுப்  பகிர்ந்திருந்தேன்.

12 கருத்துகள்:

  1. சிறப்பு வாழ்த்துக்கள் மா

    பதிலளிநீக்கு
  2. தென்றலோடு குளுமைப் படுத்தியது வரிகள்...

    பதிலளிநீக்கு
  3. நன்றாக இருக்கிறது கவிதை.

    வாழ்த்துகள். தளம் சென்று காண்கிறோம்

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. சிறப்பு
    தொடருங்கள்
    தொடருகிறேன்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...