முந்நூறாவது பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முந்நூறாவது பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தோழியே தமிழே

தோழியே தமிழே கேளு,   
   தோட்டமே செய்தாய் பாரு! 
வாழிய தமிழே கேளு,
   வானமாய் விரிதல் பாரு! 
ஆழியே போலும் ஆசை 
   ஆட்கொளத் திறந்த பூவே! 
வாழிய எனவே உன்னால் 
   வாசனைப் பொழிதல் பாரு! 
2012 ஜுலையில்  துவங்கிய இந்த வலைப்பூவின் முந்நூறாவது பதிவு இது!
(அதற்கு முந்தைய தேதிகளில் இருக்கும் பதிவுகள் என் ஆங்கிலத் தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டவை.)


என் தளம் வந்து கருத்துரையிட்டு ஊக்குவித்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!







பிற்சேர்க்கை:
'முன்னூறாவது பதிவு' என்று தட்டச்சு செய்தவுடன், பார்க்கும்பொழுதே ஏதோ சரியாக இல்லையோ என்று தோன்றியது..இருந்தாலும் ரொம்ப யோசிக்காமல் விட்டுவிட்டேன்..
"முன்னூறு என்பது தவறு முந்நூறு (மூன்று x நூறு என்பது அப்படித்தான் வரும்) “முன்னூறு தந்தேன் “என்றால், “முன்பொருமுறை தந்த நூறு“ என்று பொருளாகும்." என்று முத்துநிலவன் அண்ணா அன்புடன் தெளிவு படுத்திவிட்டார்கள்...அதன்படி என் பதிவில் மாற்றம் செய்துவிட்டேன். இங்கேயும் சொன்னால், படிக்கும் அனைவருக்கும் தெரியுமே என்று சேர்க்கிறேன். முத்துநிலவன் அண்ணாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்! (மேலே உள்ள படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்துவிடுங்கள் :) )

படங்கள்:நன்றி கூகிள் 

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.