அன்னையர் நாள் - இவளின்றி நானா?


வாழ்வில் ஒவ்வொரு வெற்றியிலும் மகிழ்வின் தருணங்களிலும் என் தந்தையை நினைத்து அவரைப் பற்றி சிலாகித்துப் போற்றிய நான் ஒருபோதும் என் தாயைப் பற்றி, அவர் செய்த தியாகங்கள், அவருடைய நிபந்தனை இல்லாத எல்லையில்லாத அன்பினை, வீட்டிற்கு வரும் நண்பர்கள் உறவினர்கள் அனைவரையும் அரவணைத்துக் குடும்பத்தை நடத்தியப் பாங்கையும் பற்றிப் பேசியதில்லை.
அறிந்தவர்கள் அறியாதவர்கள் என்று யார் எந்நேரத்தில் வீட்டிற்கு வந்தாலும் உணவருந்தாமல் சென்றதில்லை. என் குழந்தையை அம்மா பார்த்துக்கொள்வார் என்று எவ்வித கவலையும் இன்றி , மறுசிந்தனையின்றி பணிக்குச் செல்ல முடிந்தது, உறங்க முடிந்தது. இன்னும் எவ்வளவோ! அன்பின் உருவமாகிய என் அன்னையின் அன்பும் தியாகமும் இல்லாமல் நானும் இல்லை, என்னைச் சார்ந்த எதுவுமில்லை. என் வெற்றியும் இல்லை. நன்றி அம்மா, உள்ளத்தின் ஆழத்திலிருந்து உன்னை நேசிக்கிறேன். என் தாயின் மகளாய், அனைத்துப் பெண்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

I've always , at every achievement , thought of my dad and all the efforts he took raising us , four girls. But the backbone to all of that, all the silent sacrifices and unconditional love of my mom has been taken for granted. And I regret and feel ashamed that this is the first time I talk about her in my writings. Without her and her unconditional love and sacrifice, nothing of what I am would exist! Thank you amma and love you from the depth of my heart. Happy Mother's Day to all the wonderful women out there! 

17 கருத்துகள்:

 1. அம்மாவிற்கு மாற்று என்று இந்த உலகத்தில் ஏதுமில்லை

  பதிலளிநீக்கு
 2. இணையில்லாத உறவு அன்னை மட்டும்தானே

  பதிலளிநீக்கு
 3. இனிய அன்னையர் தினவாழ்த்துகள் சகோ

  பதிலளிநீக்கு
 4. சும்மாவா சொன்னார்கள் தொட்டிலை ஆட்டும் கை அது தொல் உலகை ஆட்டும் கை என

  பதிலளிநீக்கு
 5. உண்மை தான் மா....அம்மாவான பின்னர் தான் அம்மாவின் அருமை தெரிந்தது.வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், எனக்கும் கீதா. நன்றி.
   உங்களுக்கும் அன்னையர் நாள் வாழ்த்துகள்

   நீக்கு
 6. அம்மா - என்ன சொன்னாலும் அம்மாவின் அன்பை, அவரது இடைவிடா உழைப்பை, தம் மக்களுக்காகவே உழைக்கும், சிந்திக்கும் சிறப்பை முழுமையாக நம்மால் சொல்லி விட முடிவதில்லை.

  அனைத்து அன்னையர்க்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. அம்மாவையும் அக்காவையும் ஒருசேர பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சி.அம்மா என்பவர் உறவு அல்ல உணர்வு. நமக்கு நினைவிருக்கும்வரை அவர் நினைவு இருக்கும்.அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. True Grace, We always were made by our Moms to see the sacrifice of our dad not theirs and I realize the same, I too have never openly appreciated my Amma. Your post is for most of us too. .

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

யாழிசை இல்லறம் - ஐங்குறுநூறு 402

  ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. தலைவனும் தலைவியும் திருமணம...