ஐங்குறுநூறு 31 - கடன் அல்ல என்று சொல்வானோ?

'ஜாடை பேசுவது' என்பது ஒருவரிடம் நேராக ஒன்றைச் சொல்லாமல் அருகிருப்பவரிடம் சொல்வது போல் சொல்வது. நாம் அனைவரும் செய்வதுதானே? 
அன்றைக்கு அப்படிச் சொல்லிவிட்டு இன்று அதைக் கடைபிடிக்கத் தேவையில்லை என்று சொல்வது? அட, இதுவும் நம்ம செய்வதுதானே? அதாங்க, புத்தாண்டுத் தீர்மானம் ! மருத மரக் காற்றில் பறக்கும் தீர்மானங்களும் ஜாடைப் பேச்சுகளும்...

வலைத்தள நட்பின் விருது

தஞ்சையம்பதி தளத்தில் எழுதிவரும் திரு.துரை செல்வராஜு ஐயா அவர்கள் 'versatile blogger' என்ற விருதை எனக்கு அளித்துள்ளார்கள். இது ஒரு தொடர் ஓட்டம் போல வலைத்தள நட்புகளை ஒருவரை ஒருவர் ஊக்கும்விக்கும் வகையில் அமைந்தது என்று எண்ணுகிறேன்.

குறும்பா - 1

இளமஞ்சள் வெயிலில் இரைதேடும் 
இயற்கையின் இன்னிசைப் பறவைகள்

இவள் ஏன் சிலையாய் நிற்கிறாள் என்று
இயம்புகின்றன  இலயித்த என்னைப் பார்த்து

------------------------------------------------------------------------------------------

படித்து முடித்து என்ன செய்யப் போற?
பிடிக்காத கேள்வி!
படித்து முடிப்பது எப்படி?
படிக்கப்  படிக்க ஊறும் கேணி!

------------------------------------------------------------------------------------------
காலாற நடந்தாலும்
காலாட் படையாய்ச் சீறினாலும்
காலம் காத்திருப்பதில்லை - யாருக்கும்!

------------------------------------------------------------------------------------------

பூத்தாலும் காய்க்காத மரம்

என் அப்பா சிறுபஞ்சமூலத்திலிருந்து ஒரு பாடலுக்கு விளக்கம் கொடுத்திருந்தார்கள். "தமிழில் விளக்கிவிட்டீர்களா? நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறேன்", என்று நினைத்து முயற்சி செய்தேன்..அதை முகநூலில் பகிர்ந்தவுடன், வலைத்தளத்தில் பகிர்ந்தால் என்ன என்று தோன்றியது.  அதனால் இதோ.. தமிழில் இருப்பது அப்பாவிடம் இருந்து எடுத்துக்கொண்டது, கீழே ஆங்கிலத்தில் இருப்பது மட்டும் என்னுடையது (இதுவும் அப்பாவிடம் இருந்துதானே வந்தது :) )...சரி, விடுங்கள் பாடலுக்குச் செல்வோம்.

சிறுபஞ்சமூலம்(22)

"பூத்தாலுங் காயா மரமுமுள நன்றறியார்
மூத்தாலு மூவார்நூ றேற்றாதார் - பாத்திப்
புதைத்தாலு நாறாத வித்துள பேதைக்
குரைத்தாலுஞ் செல்லா துணர்வு."


பூத்திருந்தனவாயினும், காய்க்காத மரங்களும் உண்டு, அதுபோல நன்மையறியாதவர் ஆண்டுகளால் முதிர்ந்தாலும் அறிவினால் முதிரார். அறிவு நூல்களைக் கற்றுத் தெளியாதவர் அத்தன்மையரேயாவர். பாத்தி கட்டிப் புதைத்தாலும் முளைக்காத வித்துமுண்டு, அது போல அறிவில்லாதவனுக்கு, நன்மையை எடுத்துக் கூறினாலும் அறிவு தோன்றாது;

பூத்தாலுங்காயா மரம்போன்றவர் ஆண்டு முதிர்ந்தும் அறிவு முதிராதவரும் நூல்களைக் கற்றுத் தெளியாதவரும் ஆவர். புதைத்தாலும் முளைக்காத விதையைப் போன்று அறிவிலானுக்கு எவ்வுரையாலும் அறிவுண்டாகாது.


"Some trees give not fruits, but bloom;
People ignorant of goodness and books 
Though aged, never get wise;
Some seeds sprout not
Though sown in garden-beds
Vain are lessons taught to a fool!"


அப்பா, அப்படியே அனைத்துப் பாடல்களுக்கும் விளக்கம் எழுதிக்கொடுங்கள், நான் இங்கே ஒட்டிவிடுகிறேன்.. ;-) நீங்கள் ப்ளாக் ஆரம்பிக்காவிட்டால் இப்படித்தான். :)

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...