சொந்தச் சீப்பு - கி. ராஜநாராயணன்

 

திரு.கி. ராஜநாராயணன் (கி ரா) அவர்களுடையப் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் புதுக்கோட்டை வீதி கலை இலக்கியக் களம் நடத்திய நிகழ்வில் கி.ராஅவர்களுடைய 'சொந்தச் சீப்பு' என்ற கதையைப் பகிர்ந்தேன். எனக்கு மிகவும் மகிழ்வான நிகழ்வில் மேலும் இனிமையூட்டினார் கி ராஅவர்கள் தன்னுடைய வருகையினால். 

 

சொந்தச் சீப்பு என்னுடைய யூட்யூப் தளத்தில்!


நண்பர்கள் பார்த்து உங்கள் கருத்துகளைப் பதிவிட வேண்டுகிறேன். நன்றி.


8 கருத்துகள்:

  1. கதையைப் படித்தீர்களா?  பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஸ்ரீராம், கதையைச் சொல்லி என்னுடையப் புரிதலைச் சொன்னேன்.

      நீக்கு
  2. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா!! திருக்குறளைக் கரைத்துக் குடித்தவர் அண்ணா, நீங்கள்.

      நீக்கு
  3. கதையினைப் படிக்கத் தூண்டும் விமர்சனம்
    அருமை
    வாழ்த்துகள் சகோதரி

    பதிலளிநீக்கு
  4. நல்லா கதையை விவரிச்சு சொல்றீங்க கிரேஸ். கீ ரா சந்தோசப்படுவார், இந்த காணொளியைக் கண்டால். ஆனால் என் மதிப்பீடு படி கதை சுமார்தான் கிரேஸ். இருந்தாலும் அந்தக் காலத்துக் கதை என்பதால் அந்த காலகட்டத்திற்கு போய் பார்க்க வேண்டும்னு நினைக்கிறேன். அப்படி நான் போகவில்லை. :)

    நான் சிறு வயதில் நெறையா காமிக்ஸ் கதைகள் (தமிழாக்கம்) செய்தது கலக்சன் வைத்திருப்பேன். என்னைவிட நல்லா படிப்பவர்கள் அறிவாளிகள், நாகரீகம் நிறைந்த நண்பர்கள் (அவங்ககூட பழகுவதே பெருமையா இருக்கும்) எல்லாம் என்னிடம் பல காமிக்ஸ் புத்தகங்களை "borrow" பண்ணினார்கள். நானும் நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு கேட்டதெல்லாம் கொடுத்தேன். ஆனால் கொடுத்த புத்தகங்கள் பல திரும்பியே வரவில்லை. மறதி எல்லாம் இல்லை. தரச் சொல்லி கேட்ட பிறகும். அவங்க கலக்சன்ல இவைகளையும் சேர்த்து வைத்துக் கொண்டார்கள்! :) அவர்கள் தரம் அப்படி! :)

    அம்மா (என் தாயார்) என்ன செய்வாங்கனா, ஏதாவது கடையில் பலசரக்கு வாங்கி வரும்போது தவறுதலாக பலசரக்குக் காரன் 1 ரூபாய்க்கு பதிலா 10 ரூபாய் கொடுத்துவிட்டால், உடனே அதைப் போய் திருப்பி கொடுத்துவிட்டு வரச் சொல்லுவாங்க. பாவம் அவருக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்? னு சொல்லி உடனே அனுப்பி வைப்பார்கள். உடனே போய் மார்க்கட்டுக்கு நடந்து விளக்கி அவரிடம் திருப்பி கொடுத்துவிட்டு வருவேன். அதுபோல் அம்மா என்னை வளர்த்து கெடுத்துவிட்டதால், நல்லாப் படிக்கும் நணர்கள் தரம் இப்படியெல்லாம் இருக்கும்னு கற்பனை பண்ணியதுகூட இல்லை. நம்மைப் போல் பலரையும் எண்ணுவது மனித இயல்புனு நினைக்கிறேன். ஆனால் உலகில் பலரும் பலவிதம் என்பதை உணர்வது கசப்பான சில அனுபவங்கள் அனுபவித்த பிறகே! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வருண். நலம் தானே? உங்களுக்குப் பிடிக்கவில்லையா? விடுதி வாழ்க்கையை நினைத்துப் பார்த்தாலும் சிரிப்பாக வந்தது. நான் சில காலம் விடுதியில் தங்கியிருந்த பொழுது அனைவரும் சுத்தம் பார்ப்போம். துணி அலச பக்கெட் பகிர்ந்து கொண்டாலும் கழுவிக் கொடுப்போம். ஜன்னல் கம்பியெல்லாம் துடைத்து வைப்போம்..இந்தக் கதையில் வித்தியாசமாக இருந்தது எனக்கு.
      அச்சோ! உங்க கலெக்சனை தங்கள் கலெக்சனாக்கிக் கொண்டார்களா!! அவர்கள் சமத்தாம்!! அப்படி நினைத்திருப்பார்கள்!! இந்தக் கணக்குப்படி பார்த்தால் நாமெல்லாம் மக்குதான் போல.. :)
      அம்மாவுக்கு என் மரியாதை முதலில்! எப்படி நல்ல விசயங்களைப் பதிய வைத்திருக்கிறார்கள்!
      நல்லாப் (புடம்போட்டு)படிக்கிறதுக்கும் நெறிகளுக்கும் சம்பந்தமில்லை போங்க. படிப்புக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை என்று தானே இருக்கிறது..உலகம் முழுவதும் ஒலிக்குதே! :) படிப்பு என்பதன் அர்த்தத்தையே மாற்றி வைத்திருக்கிறார்கள்!
      வாழ்க்கையைப் படித்தால் நலமே! நீங்க சொல்றது சரிதான், நம்மைப் போல மற்றவரையும் எண்ணி அடிபட்டு பின்னர் புரிந்துகொள்வது, எனக்கும் அனுபவமுண்டு!
      கருத்தோடு அனுபவங்களைப் பகிர்ந்ததற்கும் நன்றி வருண்.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...