உலகத் தாய்மொழி நாள் பா - சங்கத் தமிழே தாயே

தமிழன்னை படம்: நன்றி இணையம்

தமிழே தாயே தாய்மொழியே தவமே
அமிழ்தே அன்னாய் பைந்தமிழே
அறிவே ஆன்றோர் அறமொழியே
செறிவே என்றும் என்னுயிரே
உலகில் எங்கு வாழ்ந்தாலும்
சொல்லில் நீயே ஊறிடுவாய்
உற்றார் தூர உறைந்தாலும்
சுற்றம் சேரத் தூண்டிடுவாய்   
எங்கும் தமிழர் சேர்ந்திடவே
சங்கத் தமிழே சங்கமிப்பாய் தாயே


15 கருத்துகள்:



  1. தமிழ் உங்களிடம் கொஞ்சி விளையாடுகிறது அருமை சகோ

    பதிலளிநீக்கு
  2. அருமை சகோ தொடர்ந்து பொழியட்டும் தமிழ் மழை...

    பதிலளிநீக்கு
  3. ஆஹா..அருமை..இனிமை தமிழ்போலக் கவிதையும் ..வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
  4. ஆஹா... சிறப்பான கவிதை.

    தாய்மொழி நாளில் சரியான கவிதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

'பேதையல்ல பெண் மேதை' - மகளிர் நாள் சிறப்புக் கவியரங்கம்

  சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் - சுவீடன் இலண்டன் தமிழ் வானொலி மற்றும் உலகப் பெண் கவிஞர் பேரவை இணைந்து வழங்கும் "பேதையல்ல பெண் மேதை" ...