இடுகைகள்

2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அருள் தாருமே

கடவுளை நினைத்து நான் எழுதியது ...in March 2007 பல்லவி: அருள் தாருமே  அருள் தாருமே உம்வழி நடந்திட அருள் தாருமே அருள் தாருமே அருள் தாருமே உம்முடன் நடக்க அருள் தாருமே 1. பள்ளமோ முள்ளோ என்று பயந்திடாமல் காடோ மேடோ  என்று கலங்கிடாமல் உம்வழி நடந்திட  உறுதி கொண்டு உம்முடன் நடக்க அருள் தாருமே 2. இருளோ ஒளியோ என்று நினையாமல் திருப்பம் வருமோ என்று அஞ்சிடாமல் என்னை முழுவதும் உம்மிடம் கொடுத்து  உம்முடன் நடக்க அருள் தாருமே 

என்னோடினைந்த இறைவா

2007 மார்ச்சில் எழுதியது ... பல்லவி: என்னோடு இணைந்த  இறைவா நன்றி என்னுள்ளம் எழுந்தத்   தலைவா நன்றி 1. காலையில் தோன்றும் கதிரவனாய்     மாலையில் வீசும் தென்றலாய்    இரவில் ஒளிரும் விண்மீனாய்    என்னோடினைந்த இறைவா நன்றி 2. சுவாசத்தில் கலந்த காற்றாய்     என்னுள் ஓடும் உதிரமாய்     என்னுள் துடிக்கும் இதயமாய்     என்னோடினைந்த இறைவா நன்றி

ஆறுவது சினம்

ஒரு அழகான ஊரில் அழகான ஒரு வீடு இருந்தது. அவ்வீட்டில் அன்பு என்று ஒரு பையனும் அவனுடைய தங்கை அனிதாவும் தங்கள் பெற்றோருடன் வசித்து வந்தனர். அன்புக்கு எட்டு வயது. அனிதாவுக்கு நான்கு வயது.  ஒரு நாள் பள்ளி விட்டு வந்தபின்னர் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு பொம்மை  காரை வைத்து விளையாடிக் கொண்டிருந்த அன்பு வேறு ஏதோ எடுக்க உள்ளே சென்றான். அப்பொழுது ஆசையாக அவனுடைய காரை எடுத்த அனிதா அதை தெரியாமல் உடைத்துவிட்டாள். உள்ளிருந்து வந்த அன்பு உடைந்த காரைப் பார்த்தவுடன் கோபம் கொண்டான். "ஏன் என் கார உடைச்ச?" என்று கத்திகொண்டே வந்தவன் கீழே இருந்த அனிதாவின் பொம்மையை தூக்கி எறிந்தான். அது ஒரு மண்ணில் செய்த தஞ்சாவூர் பொம்மை. அழகான அந்த பொம்மை உடைந்து சிதறியது. தஞ்சாவூர் சென்ற பொழுது அவர்கள் அப்பா வாங்கிவந்தது. உடனே அனிதா அழ ஆரம்பித்தாள். பொம்மை உடைந்தவுடன் அன்புக்கு பாவமாக இருந்தது. தான் கோபப்படாமல் இருந்திருக்கலாம் என்று வருந்தினான். கோபத்தை அடக்கியிருந்தால் அழகான பொம்மை உடைந்திருக்காதே என்று நினைத்தான். அவ்வைப்பாட்டி கோபம் அடக்கப்படவேண்டும் என்பதற்குதான்   "ஆறுவது சினம்" என்று ச

ரம்மியமான அந்திப் பொழுது

விண்ணைத் தொட்டு பிடித்துவிடவே உயரும் மரங்கள்  பிடித்துப் பாரென்றே பஞ்சாய்ப் பறக்கும் வெண்முகில்கள்  இவ்விளையாட்டை கண்டுகளிக்க கருநீல போர்வையை  முக்கால்வாசி விலக்கிப் பார்க்கும் வளர்மதி  என்னே ஒரு ரம்மியமான அந்திப் பொழுது

அறம் செய்ய விரும்பு

ஆலன் பள்ளியிலிருந்து ஒரு நாள் மகிழ்வுலா ஏற்பாடு செய்திருந்தனர். ஆலன் மிகுந்த மகிழ்ச்சியுடன் தயாரானான். அம்மா செய்து கொடுத்த ஆலூப் பராத்தா, வாழைப்பழம் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் கிளம்பி விட்டான். அவர்கள் சென்றது ஒரு பூங்கா. பல வண்ண மலர்களையும் செடி கொடிகளையும் பார்த்துக் களித்தனர். செடிகளை மயில், யானை போலவெல்லாம் வடிவாய் வெட்டி அழகு செய்திருந்தனர். அதைப் பார்த்து வியந்து மகிழ்ந்தனர் குழந்தைகள். பிறகு சாப்பிடும் நேரம் வந்தபொழுது ஆசிரியர் குழந்தைகளை புல்வெளியில் வட்டமாக அமரச்செய்தார். ஆலனும் அமர்ந்து தன்னுடைய சாப்பாட்டை எடுத்தான். அப்பொழுது அருகிலிருந்த மரத்தின் பின்னிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனைப் பார்த்தான். அவன் பசியோடு அனைவரது சாப்பாட்டையும் பார்த்துக் கொண்டிருந்தான். ஆலன் ஆசிரியரிடம் சென்று, "அறம் செய்ய விரும்புன்னு படித்தோமே, அவனை கூப்பிடட்டுமா?" என்று கேட்டான். ஆசிரியரும் பெருமையுடன் அனுமதி கொடுத்தார். ஆலன் அந்தச் சிறுவனை அழைத்தான்.  பயந்து கொண்டே வந்த அந்த சிறுவனையும் அமரச் செய்து பாதி பராத்தாவும், பாதி பழமும் கொடுத்தான். பள்ளியில் புரியாமலிருந்த சில பிள்