இணைய மேடை இங்கிதங்கள்

படம்: நன்றி இணையம்

இணையவழி இணைப்புகளில் (Zoom) இணையும் பொழுது நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:
ஒளி:
1. நீங்கள் அமரும் இடத்தைத் தேர்வு செய்யும் பொழுது உங்கள் முன்னாலிருந்து முகத்திற்கு ஒளி கிடைக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
2. உங்கள் பின்புறம் இருந்து ஒளி வருமேயானால் உங்கள் முகம் இருட்டடித்துவிடும்.
3. கணினியிலோ அலைபேசியிலோ கேமராவைப் பார்க்கும்பொழுது, கேமரா உங்கள் கண் அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். அப்பொழுது தான் நீங்கள் கேமராவைப் பார்த்து பேசும் பொழுது பார்வையாளர்களை நேராகப் பார்ப்பது போல் இருக்கும்.
4. எண் 3இல் சொல்லியுள்ள அமைப்பிற்கு ஏற்றவாறு உங்கள் கணினிக்கோ அலைபேசிக்கோ உயரம் கூட்டிக் கொள்ளுங்கள். புத்தகங்களைக் கூட அடித்தளமாகப் பயன்படுத்தலாம்.
5. உங்களைச் சுற்றி அதிக வெற்றிடம் இல்லாமல் இருக்குமாறு கணினி அல்லது அலைபேசியின் தொலைவைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
6. கேமராவில் இருந்து அதிக தொலைவிலோ மிக நெருக்கத்திலோ இருக்க வேண்டாம்.
7. தலைக்குமேல் சிறிது இடைவெளி இருக்கட்டும். நெஞ்சுவரை தெரியுமாறு அமர்ந்து கொள்ளலாம்.
8. எழுதியதைப் பார்த்து வாசித்தாலும் அவ்வப்பொழுது கேமராவை நேராகப் பார்க்கவும்.
9. கணினியில் வேர்ட் கோப்பாக வைத்தும் பார்த்து வாசிக்கலாம்.
10. நிகழ்ச்சி நேரலையில் இருக்கும்பொழுது உங்களுக்குப் பின்னால் யாரும் நடக்காமல் இருக்கப் பார்த்துக் கொள்ளவும்.

                                                                       படம்: நன்றி இணையம்

ஒலி:
1. கணினி என்றால் ஹெட்போன் உபயோகிக்காமல் பேசலாம். கணினியில் ஹெட்போன் உபயோகிக்கும் பொழுது இரைச்சல் வரலாம்.
2. அலைபேசியில் ஹெட்போன் பயன்படுத்தலாம். ஆனால் பேசும் பொழுது மைக்கை அதிகம் ஆட்டக் கூடாது.
3. மற்றவர்கள் பேசும் பொழுது உங்கள் மைக்கை அணைத்து வைக்கவும். அதாவது muteஇல் இருக்கவும்.
4. நீங்கள் பேசும்போது மறக்காமல் unmute செய்து பேசவும்.
5. வீட்டிற்கு வெளியிலோ மொட்டை மாடியிலோ இருந்து நீங்கள் பங்கு பெற்றால் இரைச்சல் வர வாய்ப்பிருக்கிறது. அதனால் வீட்டிற்குள் ஓர் அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
6. நிகழ்ச்சி நேரலையில் இருக்கும்பொழுது உங்களுக்கு அருகில் யாரும் பேசாமல் ஒலி எழுப்பாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
7. உங்கள் அருகிருப்பவரிடம் பேசினால் மைக் அணைக்கப்பட்டுள்ளதா என்று உறுதிசெய்துவிட்டுப் பேசவும்.
8. உங்கள் அலைபேசியை அமைதியாக ஆற்றுப்படுத்தி வைக்கவும். (Silent mode).
9. அலைபேசி மூலமாக நிகழ்வில் பங்கெடுத்தால் Airplane Mode இல் வைக்கவும். நிகழ்வு நடக்கும்பொழுது அழைப்பு மணியடிக்காமல் இருக்கும். முக்கியமான இந்தக் குறிப்பை கருத்துரையில் நினைவுபடுத்திய திரு.முத்துநிலவன் அண்ணாவிற்கு நன்றி.
10. மற்றவர் பேசுவதைச் செவிமடுத்துக் கேட்பதும் முக்கியம் என்று சொன்ன திண்டுக்கல் தனபாலன் அண்ணாவிற்கு நன்றி.
படம்: நன்றி இணையம்

ஸ்க்ரீன் ஷேர் :
1. நீங்கள் உங்கள் கணினித் திரையைப் பகிர்ந்து கோப்புகளைக் குறிப்பிட்டுக் காட்டிப் பேசினால், திரை பகிரப்படுகிறதா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.
2. பேசி முடித்தவுடன் பகிர்வை stop share சொடுக்கி நிறுத்தவும்.

பொது:
1. பொதுவெளிக்குத் தகுந்த உடைகள்.
2. இணைய இடையூறு ஏற்பட்டால், வெளியேறி மீண்டும் உள்வரவும்.

எனக்குத் தெரிந்தவற்றைப் பகிர்ந்துள்ளேன். நண்பர்கள் ஏதேனும் சேர்க்க/திருத்த  வேண்டுமென்று நினைத்தால் கருத்துரையில் கூறவும். நன்றி!

16 கருத்துகள்:

  1. இணையக் கருத்தரங்கு, கவியரங்குகள் களைகட்டி வரும் இந்தக் காலத்திற்கேற்ற பதிவு! அனேகமாக நமது நண்பர்கள் எல்லாம் வலையொளிப் பக்கம் போகிறார்கள். முன்பு முகநூல் உலா! இந்தக் கரோனாக் காலத்தில் வலையொளி விழா! அல்லது ஜூம் விழா! என்று சொல்லும் அளவுக்கு.. நீங்கள் சொன்னது உண்மைதான். பேசும் பலர் இதைக் கவனிப்பதே இல்லை! அறிந்தும் அறியாமலும். அப்புறம் முக்கியமான ஒன்று, செல்பேசி வழி இணைவோர் ஏர்மோடுக்கு மாற்றாமல் விட்டால் இடையிடையே மணியடித்துக் கொண்டே இருக்கும் அது என் அனுபவத்தில் கற்ற பாடம்! நன்றிம்மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா, இந்தக் கரோனாக் காலத்தில் இணையம் பயமுறுத்தினாலும் நேர்மறையாக இப்படி விழாக்களும்! aeroplane mode மறந்து விட்டேன்..நன்றி அண்ணா. மேலே சேர்த்து விடுகிறேன், முக்கியமானது. நன்றி அண்ணா

      நீக்கு
  2. கச்சிதமான வழி காட்டல்
    தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  3. இன்றைக்கு பலருக்கும் பயன்தரும் தகவல்கள்...

    அனைத்தையுமே சொல்லி விட்டீர்கள்... இருந்தாலும் அனைவரின் பேச்சை கேட்பதும் முக்கியம்... சிலவற்றில் சொல்லப்படும் நல்ல பல விசயங்களை கேட்பதோடு, அதை முடிந்தால் செயல்படுத்த முயல வேண்டும்... தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் தானே வரும்... ஹிஹி...

    கவிஞர் வாலியின் வரிகளில் :-

    கிளி போல பேசு... இளங்குயில் போல பாடு....
    மலர் போல சிரித்து, நீ குறள் போல வாழு

    நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா! ஆமாம் அண்ணா, அனைவரின் பேச்சைக் கேட்கவும் வேண்டும். மிக முக்கியம்!
      ஹாஹா ஆமாம் தலைக்குப் பின் ஒளிவட்டம் வேண்டும்தானே :)
      அருமையான வாழ்த்து வரிகள் அண்ணா. மிக்க நன்றி

      நீக்கு
  4. மிகத் துல்லியமான செய்திகள்..இணையத்தில் பயணிக்கும் பயணிகளின் கனிவான கவனத்திற்கு..

    பதிலளிநீக்கு
  5. மிகவும் பயனுள்ள தகவல்கள். கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று அதுவும் பணி தொடர்பான மீட்டிங்க் என்றால் மிக மிக முக்கியம்.

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு
  6. இன்றைய காலகட்த்திற்கு ஏற்ற பயனுள்ளத் தகவல்கள்
    நன்றி சகோதரி

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...