2020இல் வாசித்த நூல்கள்

 

வாசித்ததைப் பதிவு செய்து வைக்கவும் பின்னொரு நாள் பார்த்து மகிழவும், குறிப்பாக, அடுத்த ஆண்டு இன்னும் அதிகமாக வாசிக்க உந்துதலாகவும் இப்பதிவு! நண்பர்களும் எத்தனை நூல்கள் வாசித்தீர்கள் என்று சொன்னால் ஒருவருக்கொருவர் உந்துதலாக இருக்கும். வாசிப்போம்! வாழ்வோம்!

2020இல் வாசித்த நூல்கள் :

1. Mrs.விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் - விசு

2. வேள்பாரி - சு.வெங்கடேசன்

3. ஆதிச்சநல்லூர் -கீழடி மன்மூடிய மகத்தான நாகரிகம் - அமுதன் 

4. வேலுநாச்சியார் நாவலில் பெண்ணியச் சிந்தனைகள் - மு.கீதா

5. நெகிழி நெய்யும் உலகு  - பெண்ணியம் செல்வகுமாரி (நாம் அணிந்துரையும் கொடுத்தேன் என்பது கூடுதல் மகிழ்வு)

6. முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே (மீள் வாசிப்பு)

7. பெண் ஏன் அடிமையானாள்? தந்தை பெரியார்

8. காமத்துப்பாலும் ஹைக்கூவும் -  பெண்ணியம் செல்வகுமாரி 

(நூல் வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியது மகிழ்வு)

9. அணிலாடும் முன்றில் - நா.முத்துக்குமார் 

10. தடம் பதித்த தாரகைகள் - பேரா. ஆவுடையம்மாள் தயாளன்

11. முட்டைவாசிகள் - அப்துல் ரகுமான்

12. மிடறு - முருகதாஸ்

13. கி.ரா. சிறுகதைகள்

14. ஓரிரவில் ஒரு ரயிலில் (கிண்டில்) - வெங்கட் நாகராஜ் 

15. ராணி மங்கம்மாள் - நா. பார்த்தசாரதி

16. ஆறாம் திணை - மரு. கு.சிவராமன் ( மீள் வாசிப்பு)

17. காதல் வரம் - கிருஷ்ண வரதராஜன் (இன்று தான் முடித்தேன்)


 ஆங்கிலம்:

1. It Worked For Me : In Life and Leadership - Colin Powell

2. The Devil's Arithmetic - Jane Yolen

3. My side of the mountain - Jean Craighead George

4. A single swallow - Zhang Ling; Translated by Shelly Bryant2020இல் வாசிக்கத் தொடங்கி இன்னும் முடிக்காத நூல்கள்:

1. Thinking, Fast and Slow - Daniel Kahneman  

2. திருக்குறள் கட்டுரைகள் - கி. ஆ. பெ. விசுவநாதம்


மூன்றின் கீழும் ஒன்றிரண்டு விட்டுப் போயிருக்கலாம்.


16 கருத்துகள்:

 1. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

  கி. ஆ. பெ. விசுவநாதம் கட்டுரைகள் அசர வைக்கும்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அண்ணா. புத்தாண்டு வாழ்த்துகள்.

   ஆமாம் அண்ணா, உங்கள் பதிவைப் பார்த்தபொழுதும் இதைப் பற்றியக் கட்டுரை நினைவு வந்தது.

   நீக்கு


 2. வணக்கம்
  கடந்த ஆண்டு படித்த நூல்களைப் பட்டியல் இட்டு காட்டியுள்ளீர்கள் வாசிப்பு ஒரு மனிதனை பூரணப்படுத்தும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ரூபன்.
   நன்றி, உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

   நீக்கு
 3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

   நீக்கு
 4. மென்மேலும் வாசிப்பனுபவம் பெற வாழ்த்துகள்.

  இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஸ்ரீராம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

   நீக்கு
 5. Wow.. I am honored to see my book on top of the list. வரிசையில் மட்டும் அல்லாமல் தரத்திலும் தானே.. :)

  எத்தனை நூல்கள். 2021 ன்றில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று சொல்லி கொண்டு, இந்த ஆண்டும் என் புத்தகத்தோடு ஆரம்பிக்க வேண்டும் என்றால் சொல்லுங்கள், புதியதொன்று தயார்.

  Happy New Year to you and your family.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் நூலின் தரத்திற்கு ஒரு குறையுமில்லை, நன்றாக இருந்தது. சென்ற ஆண்டு முதலில் படித்த நூல் உங்களுடையது. நான் பட்டியலிட்டிருப்பது தர வரிசையில் இல்லை என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். :)
   ஆகா! அடுத்த நூல் தயாரா? வாழ்த்துகள் விசு. கலக்குங்க. Happy New Year to you and your family.

   நீக்கு
 6. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  இத்தனை புத்தகங்கள் நீங்கள் படித்திருப்பதை அறியும்போது மகிழ்வாக இருக்கிறது! வாழ்த்துக்கள்! புத்தகங்கள் போல உற்ற நட்பு வேறெதுவுமில்லை! வருடங்கள் முழுவதும் ஏதேனும் ஆங்கிலமோ அல்லது தமிழோ படித்துக்கொண்டுதானிருப்பேன். வாசிப்பது தான் எனக்கு உணவு. அயல்நாட்டில் இருப்பதால் புதிய புத்தகங்கள் வாங்க வழியில்லை. என் வீட்டிலிருந்து எடுத்து வந்த புத்தகங்களைத்தான் படித்துக்கொண்டிருக்கிறேன். சமீபத்தில் ' ஏழாம் சுவை [கு.சிவராமன் ] புத்தகம் முடித்தேன்.
  நேற்று கல்கியின் ' வேங்கயின் மைந்தன் ' நாவலை முடித்தேன்.[திருத்தப்பட்ட பதிப்பு ]
  இப்போது JAMES HADLEY CHASE-ன் ஐ "COME EASY-GO EASY" வாசித்துக்கொண்டிருக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ம்மா. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
   நீங்களும் வாசிப்பை நேசிப்பது மகிழ்ச்சி. ஆமாம், அயல்நாட்டில் நூல்கள் வாங்க முடியவில்லை. நானும் கொண்டு வந்ததை மட்டுமே வாசித்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது கொஞ்சம் கிண்டிலில். ஆனால் அச்சு நூல்கள் தான் பிடிக்கின்றன. நீங்கள் சொல்லியிருக்கும் மூன்றும் நான் படித்ததில்லை. குறித்துக்கொள்கிறேன். மிக்க நன்றிம்மா.

   நீக்கு
 7. ' வேங்கையின் மைந்தனை' எழுதியது கல்கி என்று கவனக்குறைவால் எழுதி விட்டேன் கிரேஸ்! அதை எழுதியது அகிலன். இந்த நாவல் கல்கி பத்திரிகையில் தொடராக வெளி வந்தபோது கதாநாயகி இறந்து போவதாக அகிலன் எழுதியிருப்பார். ஏராளமான வாசகர்களின் எதிர்ப்பினாலும் கோபத்தினாலும் அது பதிப்பாக வெளி வந்த போது கதாநாயகி உயிர் பிழைத்து விட்டதாக முடிவை மாற்றி எழுதி விட்டார். எனக்குத் தெரிந்து தமிழ் நாவலக்ள் வரலாற்றிலேயே இப்படி நடந்தது இது தான் முதல் தடவை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ, பரவாயில்லைமா.
   அட, அப்படியா!! நூல்களைப் பகிர்ந்து அவற்றைப் பற்றிய சுவாரசியமான தகவலும் தந்துவிட்டீர்கள். நன்றி மா..நூலைப் படித்து எதுபொருத்தம் என்று பார்க்க ஆவல் கூடிவிட்டது :-) நன்றிம்மா

   நீக்கு
 8. என் நூல்கள் இரண்டும் படித்து உரையாற்றியமைக்கும்..நன்றிம்மா..இன்னும் நிறைய நூல்கள் படிக்க..வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

யாழிசை இல்லறம் - ஐங்குறுநூறு 402

  ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. தலைவனும் தலைவியும் திருமணம...