சாதனைப் பெண்கள் - மகளிர் வாரம்


அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் மகளிர் வாரக் கொண்டாட்டம், மே 3 முதல் மே 10 வரை!
'தமிழே! அமுதே!' குழுவினர் வாரம் தோறும் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு வாசித்த நூல்களைப் பகிர்ந்து வருகின்றோம். மார்ச் 15 ஆம் நாள் தொடங்கிய இந்நிகழ்ச்சியின் முதல் இரண்டு வாரங்களில் நான் உட்பட நான்குபேர் கொண்ட குழு  ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சிகள் பற்றி பகிர்ந்து கொண்டோம். முதல் வாரம் பல்வழி  இணைப்பில் ஒலி மட்டுமே! இரண்டாவது வாரம் பதினைந்தே நிமிட அறிவிப்பில் வலையொலி இணைப்பில் பகிர்ந்துகொண்டோம்.

வாராவாரம் மெருகேறி இதோ ஒன்பதாவது வாரம், மே 9ஆம் நாள்!

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் மகளிர் வாரக் கொண்டாட்டம், மே 3 முதல் மே 10 வரை! நாள்தோறும் வலையொலி இணைப்பில் கலந்துகொண்டு கொண்டாடி மகிழ்ந்தோம். அதன் தொடர்ச்சியாக நூல் பகிர்வு நிகழ்ச்சியான 'தமிழே! அமுதே!' நிகழ்ச்சியிலும் பெண்களைக் கொண்டாடுகிறோம். சாதனை படைத்த, தடம் பதித்த பெண்களின் வாழ்வைக் கொண்டாடும் முயற்சி.

தமிழே! அமுதே! 
மே 9, சனிக்கிழமை இரவு 8.30 (EDT)
இந்திய நேரம்  மே 10 காலை 6

நிகழ்ச்சிக்கான விளம்பரக் கானொலியின் இணைப்பு.


6 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

யாழிசை இல்லறம் - ஐங்குறுநூறு 402

  ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. தலைவனும் தலைவியும் திருமணம...