படம்: நன்றி இணையம் |
கண்டதும் காதல் காணாமல் காதல்
கடிதத்தில் காதல் கணினியில் காதல்
என்னென்னவோ சொல்கிறார்கள்
என் காதல் துளிர்த்ததெப்போது எப்படி?
தென்றல் தமிழ் மீடியா 'நெருக்கடி நேரத்தில் நெஞ்சுக்கு நிம்மதி' என்ற தலைப்பில் கவியரங்கம் நடத்தினர். ஆன்மீகப் பெருவெளி, இசையெனும் இன்பவெளி, கவிதைத் தேன்துளி, இயற்கை எனும் இளையகன்னி, நூல்கள் எனும் நுட்ப ஒளி என்ற உபதலைப்புகளில் என் தலைப்பு 'நூல்கள் எனும் நுட்ப ஒளி'. வாய்ப்பளித்த திரு.மகாசுந்தர் அண்ணா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. கவியரங்கத்தைக் கீழுள்ள இணைப்பில் காணலாம்.
என்னுடைய கவிதை இதோ:
கண்டதும் காதல் காணாமல் காதல்
கடிதத்தில் காதல் கணினியில் காதல்
என்னென்னவோ சொல்கிறார்கள்
என் காதல் துளிர்த்ததெப்போது எப்படி?
கொடைக்கானல் குளிரில்
சுட்டெரிக்காத இதவெயிலில்
தோட்டத்தில் மெத்தையிட்டுத் தோதாய் வாசித்ததில்
ஆட்கொண்டதுவோ?
மதுரை வெயிலில் மொட்டைமாடியில்
மரத்தின் நிழலில் மனதில் படர்ந்ததுவோ?
ஆட்கொண்டாலும் ஆட்சி செய்வதில்லை
ஆட்சி செய்யவே அகம் தீட்டிடும்
ஆட்கொண்டாலும் ஆட்சி செய்வதில்லை
ஆட்சி செய்யவே அகம் தீட்டிடும்
தங்கத்துக்குச் சண்டை? போட்டதில்லை
நூலுக்கு நடக்கும் பாருங்கள்
நூல் நுகரும் முதல்நாசி எதுவென
நெருக்கடி நேரத்தில்
நான் வென்றால் நெஞ்சுக்கு நிம்மதி
பள்ளிப் பாடம் புரியாவிட்டால்
பக்கத்தைப் புரட்டலாம்
பள்ளிப் பாடம் இல்லாவிட்டாலும்
பக்கத்தைப் புரட்டலாம்
பக்கத்தில் பொழுதும் பக்கபலமாய் நூல்கள்
உறக்கம் தொலையும் இரவுகளில்
உற்ற துணையாய் உரையாடும்
உடல்நலம் குறையும் பொழுதுகளில்
உடனிருந்து உற்சாகம் ஊட்டும்
மளிகை வாங்கச் செல்லும் போதும்
உள்ளம் ஓடிடும் அருகாமைப் புத்தகக்கடை
துள்ளி நுழைந்து நுகர்ந்திடுவேன்
துளி நேரத் திறனூக்கி
வில்வண்டி ரயில்வண்டி
விமானம் விண்கலம்
பலவிதம்தான் போக்குவரத்து
பல்லாயிரம் திசையும் பழுதாகாப் பரவசம்
புத்தகம் அன்றி வேறேது?
இல்லத்தில் இருந்தபடியே
எல்லையற்றுச் செல்லலாம்
எல்லையில்லாப் பெருவெளியில்
கிள்ளையாய்ச் சிறகடிக்கலாம்
வேறொரு நாளில் வேறொரு நேரம்
வேறொருவர் பட்டறிவை
சூழல் வேண்டின் சரிநுட்பமாய் வழிகாட்டும்
நூல் எனும் நுட்ப ஒளி
புத்தகம் தரும் பலம் பெரிது
புத்தி தீட்டும் பேராயுதம் அது
பத்தும் செய்பவர் பயப்படும் ஆற்றலது
பற்ற வைத்திடப் பாய்வது அதனால்தானே
நெருக்கடி நேரத்தில் நெஞ்சுக்கு நிம்மதிதரும்
நூல் எனும் நுட்ப ஒளி
இருப்பு கண்டது நுட்ப வளியில்
நெருப்பிட நினைப்பவர் நெருக்கடி கண்டார்
விழிக்கு விருந்தாகச் சிற்சிறு எழுத்துகள்
விழிமூடிச் சிந்திக்க மெய்யாழ முத்துகள்
விரித்திட்டால் போதும் இனிமையாய்க் கற்பிக்கும்
வரிகளாய்ப் பேசும் வல்ல நல்லாசிரியர்
இசைக்கலைஞர் விஞ்ஞானி
ஆக்குபவர் ஆசிரியர்
மருத்துவர் பணியாளர்
எத்துறையினர்க்கு குழப்பம் எனினும்
அத்துறை நூல்கள் கைகொடுக்கும்
கொரோனா ஒழிக்க நெருக்கடி
சுரங்கத்தில் அறிஞர்
கொரோனா ஒழிக்க நெருக்கடி
சுரங்கத்தில் அறிஞர்
அறிவுச் சுரங்கமாம் நூல்கள்
பணியினை ஆவணம் செய்வோம்
பயன்படும் பிற்கால நெருக்கடி வரின்
பணிமுடித்து தளர்வதற்கும்
புத்தகம் இருக்கும்
அறிஞர் தலைவர் பலரும்
அறிவுறுத்திச் சென்றனர்
அறிவின் திறவுகோல் நூல்கள் என
அறிவுடையோர் சொல் செவிமடுத்தால் நெருக்கடி இல்லை
இசை கவிதை இயற்கை ஆன்மீகம்
விசையுறு உலகின் நசையனைத்தும்
திசை எட்டிருந்தும் சேர்க்கும் நூல்கள்
இசை கவிதை இயற்கை ஆன்மீகம்
விசையுறு உலகின் நசையனைத்தும்
திசை எட்டிருந்தும் சேர்க்கும் நூல்கள்
நூலகம் நுழைந்திட்டால் நேரம் மறந்திருப்பேன்
நூலுலகில் மகிழ்ந்திருப்பேன்
நூல்கள் கைசேரா நேரமோ
நெருக்கடி நெருக்கடி
நிம்மதியில்லாமல்
நோம் என்நெஞ்சம்
நெருக்கடி நேரத்தில் நெஞ்சுக்கு நிம்மதி
நூல்கள் எனும் நுட்ப ஒளி
// இசை கவிதை இயற்கை ஆன்மீகம்
பதிலளிநீக்குவிசையுறு உலகின் நசையனைத்தும்
திசை எட்டிருந்தும் சேர்க்கும் நூல்கள் //
ஆகா...! மிகவும் ரசித்தேன்...
மிக்க நன்றி அண்ணா. வரிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டியது மகிழ்வாக இருக்கிறது.
நீக்குஅட...! புதிய வார்ப்புரு...!
பதிலளிநீக்குஆமாம் அண்ணா :)
நீக்குசிறப்பான படைப்பு
பதிலளிநீக்குசிந்திக்கவைக்கிறியள்
நன்றி ஐயா
நீக்குசிறப்பான படைப்பு
பதிலளிநீக்குசிந்திக்கவைக்கிறியள்
கவிதை மிகவும் அருமை.
பதிலளிநீக்குபுதிய பக்கம் நன்றாக இருக்கிறது.
துளசிதரன்
கீதா
நன்றி கீதா.
நீக்குநல்லாயிருக்கா :) , summa for a change
அறிஞர் தலைவர் பலரும்
பதிலளிநீக்குஅறிவுறுத்திச் சென்றனர்
அறிவின் திறவுகோல் நூல்கள் என
அறிவுடையோர் சொல் செவிமடுத்தால் நெருக்கடி இல்லை //
நல்ல வரிகள். கிரேஸ். நூல்கள் நம் சிந்தனையை விரிவாக்கும் நிச்சயமாய்.
கீதா
ஆமாம் கீதா..மனமார்ந்த நன்றி
நீக்குசிறப்பான கவிதை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குநூல்கள் இருந்து விட்டால் போதும் நேரம் நல்ல விதமாகவே நகரும்!
நன்றி அண்ணா. ஆமாம், சரியாகச் சொன்னீர்கள்.
நீக்கு