மகள்


மகள் என்றே இம்மண்ணில் பிறந்த மாணிக்கங்கள் அனைவருக்கும் இக்கவிதை அர்ப்பணம்.

பொன்னே மணியே எனில்முகிழ்த்த என்தாயே
அன்னையென் றென்னை உயர்த்திய பாவாய்
இளந்தளிர் தாரகையே பைந்தமிழ்க் கிள்ளாய்
வளவனின் வாளெனக் கூர்மதி பெற்றவளே
கொற்கையின் முத்தாய் ஒளிர்பவளே ஓவியமே
நூற்பயன் கற்று நிறைந்த மகளேகேள்
அல்லதும் நல்லதும் இவ்வுல கெங்குமுண்டு
பல்விதப் பாதைகள் பாவை உனக்குண்டு
அன்னம்போல் தேர்ந்தெடு கண்ணியமாய் வாழ்ந்திடு
அன்பால் அறத்தால் உலகினை வெல்வாய்
உடன்வரும் தாயிவள் வாழ்த்து!


அமெரிக்கத் தமிழ் வானொலியில் வாசித்தக் கவிதை..நன்றி 

நிகழ்ச்சியின் யூட்யூப் இணைப்பு

18 கருத்துகள்:

  1. கவிதை அருமை சகோ வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. அழகிய தமிழ் 'மகளின்' கவிதை அருமை.....

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. எப்பொழுதும் நினைவில் தான் அண்ணா. பணி தொடங்கியதால் தடுமாற்றம்..மீண்டும் தொடர்ந்தோட விரும்பி முயல்கிறேன். உங்கள் அனைவரின் வாழ்த்துகளோடு! நன்றி அண்ணா.

      நீக்கு
  4. மருமகளை மகளாய் பெற்ற தேவதையின் வாழ்த்து!!!!

    பதிலளிநீக்கு
  5. அருமை. உங்கள் குரலில் கேட்கையில் இன்னும் மிகச் சிறப்பு. வாசிக்கையில், உங்களின் குரல் என் எண்ணத்தில் ஓடுகிறது. இந்நிகழ்ச்சி குறித்து அறியத் தந்து, நல்வாய்ப்பினை உருவாக்கித் தந்த தங்களுக்கு நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் நிறைந்த நன்றி, தமிழ். மகிழ்ச்சியும் அன்பும்.
      நீங்கள் இதற்குத் தகுந்தவர் தோழி. உங்களுக்குச் சொன்னது என் மகிழ்வு.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...