அட..நீங்கள் வேறு! Olympics memes
Image:Thanks Google |
படிபடி என்பார்
பச்சைக் குழந்தையைப்
பள்ளிசேர்க்கப் பாடாய்ப்படுவார்
பாடமென்றால்
கணிதமும் அறிவியலும் தான்
கணித மேதையோ
அறிவியல் மேதையோ
அதிகம் இல்லை
சல்லடை போட்டுத் தேடிடுவோம்
பாதகமில்லை!
பள்ளிதாண்டியும் வகுப்பு
அதிலும்
முன்னால் நிற்கும் படிப்பு
ஓடாதே...ஆடாதே..
கவனமாய்ப் படி என்பார்
ஒப்பித்து ஒப்பித்து
ஒப்பேத்தும் நிலையில் ...
திடீரென்று கூவுகிறார்
ஒலிம்பிக் ஒலிம்பிக்
தங்கம் இல்லையாம்..
பதக்கம் இல்லையாம்..
அட..நீங்கள்வேறு..
அதெல்லாம் வருத்திடுமா?
இந்த நகைச்சுவைத் திறமை
யாருக்கும் வராது!
சிரிப்பாய்ச் சிரிக்கிறார்
கண்ணாடி முன்னிருப்பது உணராமல்..
ஒலிம்பிக் ..
அங்குபோனவர் பட்ட பாடு
அப்பப்பா யாருக்குத் தெரியும்?
அதைத் தெரிந்து
அதற்குக் குரல் கொடுத்தால் ...
அட..நீங்கள் வேறு!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பொங்குக பொங்கல்
பொங்குக இனிய பொங்கல் பட்டினி மறைய பாரில் பொங்குக இனிய பொங்கல் போரினி அறுக மண்ணில் பொங்குக இனிய பொங்கல் படிப்பினில் அழுத்...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். "வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...