உலகத் தாய்மொழி நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகத் தாய்மொழி நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உலகத் தாய்மொழி நாள் பா - சங்கத் தமிழே தாயே

தமிழன்னை படம்: நன்றி இணையம்

தமிழே தாயே தாய்மொழியே தவமே
அமிழ்தே அன்னாய் பைந்தமிழே
அறிவே ஆன்றோர் அறமொழியே
செறிவே என்றும் என்னுயிரே
உலகில் எங்கு வாழ்ந்தாலும்
சொல்லில் நீயே ஊறிடுவாய்
உற்றார் தூர உறைந்தாலும்
சுற்றம் சேரத் தூண்டிடுவாய்   
எங்கும் தமிழர் சேர்ந்திடவே
சங்கத் தமிழே சங்கமிப்பாய் தாயே


கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.