தேன்மதுரத் தமிழோசை - யூட்யூப் மற்றும் டிக்டாக்


எப்போதாவது ஒரு கதை, ஒரு நூல் வாசிப்பு, கைவினை என்று குடும்பம் மற்றும் நட்பு வட்டத்தில் பகிர்ந்ததோடு மறைந்திருந்தது தேன்மதுரத் தமிழின் யூட்யூப் தளம். பல வகைகளில் பயன்படுத்தவேண்டும் விரிவுபடுத்த வேண்டும் என்று ஆசை இருந்தாலும் செய்யவில்லை. நேரம் காரணமா? சோம்பேறித்தனம் காரணமா தெரியவில்லை. இதுவே தான் ஆங்கிலத் தளத்துக்கும். Jack of many trades master of none (can't say all) என்பதைப் போல என்று வைத்துக் கொள்ளலாம்.
ஆனாலும் வாழ்வு இனிமையானதே! பல இடங்களில் பல கோணங்களில் செயல்பாடுகள் நடந்து கொண்டேதான் இருந்தன. அனைத்திற்கும் அடிப்படை அன்பு. கடவுள் எனக்குத் தரும் அன்பை நான் மற்றவருக்குத் தர வேண்டும் என்பதே. 
சரி, இன்றைக்கு வருவோம். சமீபத்தில் வீட்டிலேயே இருப்பதால் சிறகு இன்னும் கொஞ்சம் விரிந்தது, விரிகிறது.


கதை ஒன்றைப் பல நண்பர்களுடன் வாட்ஸ் அப்பில் பகிர பெருத்த வரவேற்பு. நிறையப் பகிர வேண்டும் என்று அன்புக் கட்டளைகள் வேறு. தயக்கம் எல்லாம் கரைந்தோட, மனதின் ஆசைகள் மேலோங்க வெளிப்பட்டுவிட்டது தேன்மதுரத் தமிழின் யூட்யூப் இணைப்பு .  நண்பர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் சொல்லிகொடுத்துக் காணொலிகள் அனுப்பியிருக்கிறேன். அதுபோலவும் பதிவேற்றலாம் என்று எண்ணம். 

டிக்டாக் அதிகப்படியான இளைஞர்கள் உலவும் இடம், அங்கு திருக்குறள் சொல்லு என்று என் இணையர் பல மாதங்களாகச் சொல்லிக் கொண்டிருந்தார். இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிட்டு அலுவலகம் ஓடிக்கொண்டிருந்தேன். இப்போது தமிழ்ச் சங்க வாசிப்பு குழு,  கதை சொல்லும் குழு என்று அதிகமாக ஈடுபாடு. அத்தோடு எனக்குப் பக்கபலமாய் இருக்கும் கணவரின் விருப்பத்தையும் நிறைவேற்றிவிடலாமே என்று டிக்டாக் திருக்குறள் @thaenmaduratamil , இணைப்பு.

தமிழ் பேசாதவர்களுக்காக ஆங்கிலத்தில் அர்த்தத்துடன். அலுவலகத்தில் சில அமெரிக்க நண்பர்களிடம் முன்பு அறிமுகப் படுத்தியிருக்கிறேன். அவர்களுக்கும் பயன்படுமே என்று எண்ணம். திருக்குறள் பதிவுகளை யூட்யூபிலும் ஏற்றுகிறேன்.

நண்பர்கள் இரு தளங்களிலும் பார்த்து உங்கள் ஆதரவைத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

9 கருத்துகள்:

  1. திருக்குறள் என்றால் முதல் ரசிகன் அடியேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருக்குறள் என்றாலே நீங்கள் நினைவில் வருவீர்கள் அண்ணா :-).
      நான் தவறாக ஏதும் பொருள் கூறி பதிவிட்டால் சுட்டிக்காட்டுங்கள்.

      நீக்கு
  2. அருமையான முயற்சி..

    அகர முதல எழுத்தை..

    பார்த்தேன் கேட்டேன் ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி விசு. கானொலியில் திருவள்ளுவர் படம் முழுமையாக இருக்கிறது. ஆனால் ப்ரோபைல் படத்தில் அந்த வட்டத்தில் முழுமையாக வைக்க இயலவில்லை. வேறு படம் ஏதாவது முயற்சித்துப் பார்க்கிறேன்.

      நீக்கு
  3. போற்றுதலுக்கு உரிய முயற்சி தொடருங்கள்
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. க்ரேஸ் வாழ்த்துகள்! நல்ல பணி

    வீடியோ வேலை செய்யவில்லையே. காணொலி இங்கு இல்லை எரர் என்று வருகிறதே..சப்ஸ்க்ரைபும் செய்திருக்கிறேன். நீங்கள் இங்கு பகிர்ந்திருக்கும் சுட்டி வழியேதான் சென்றென்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கீதா. நீங்கள் சப்ஸ்கிரைப் செய்திருப்பது தெரிகிறது. காணொலிகளும் இருக்கின்றனவே கீதா.. அதான் பார்த்து விட்டு கருத்திடலாமென்று தாமதித்தேன்.. மீண்டும் முயற்சித்துப் பார்க்கிறீர்களா? நன்றி கீதா

      நீக்கு
  5. மனம் நிறைந்த வாழ்த்துகள் கிரேஸ். தொடரட்டும் தங்கள் சிறப்பான முயற்சிகள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...