இவளுமானதும்


அன்றோர் நேரம்
பொன்வானில் மேகங்களைப் பார்த்திருக்க
எண்ணச் சிறகை இரவல் பெற்று
கண்விட்டகன்றன

அன்னையர் நாள் - இவளின்றி நானா?


வாழ்வில் ஒவ்வொரு வெற்றியிலும் மகிழ்வின் தருணங்களிலும் என் தந்தையை நினைத்து அவரைப் பற்றி சிலாகித்துப் போற்றிய நான் ஒருபோதும் என் தாயைப் பற்றி, அவர் செய்த தியாகங்கள், அவருடைய நிபந்தனை இல்லாத எல்லையில்லாத அன்பினை, வீட்டிற்கு வரும் நண்பர்கள் உறவினர்கள் அனைவரையும் அரவணைத்துக் குடும்பத்தை நடத்தியப் பாங்கையும் பற்றிப் பேசியதில்லை.

மகளிர் வாரம் முதல் நாள் - ஆசிரியர்களுக்கு

Image may contain: text


அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் மகளிர் வாரம் என்று கொண்டாடுகிறது. ஆண்டுதோறும் மே மாதத்தில் ஒரு நாள் கொண்டாடப்பட்ட மகளிர் நாள் இந்த ஆண்டு ஒரு வாரமாக இணையவழியில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் ஆசிரியர்களுக்கு அர்ப்பணம். இணைய இணைப்பில் நாற்பது பேருக்கும் மேலாக இணைந்து ஒன்றரை மணித்துளிகள் சிரிப்பும் விளையாட்டும் கவிதையும் என்று கலகலத்தது.

சின்றெல்லாவும் சைக்கிளில் பறந்த வினோதனும்

படம்: நன்றி இணையம் 
இளவரசிகள் என்றாலே இனிமை தான். எங்கோ என்றோ அரண்மனையில் வாழ்ந்தவர்கள் மட்டுமா இளவரசிகள்? நம் வீடுகளில் மழலை பேசி, சிரிப்பொலியால் சிந்தை மயக்கும் மகள்கள் அனைவரும் இளவரசிகளே!

பண்டிகைகள் சிறக்கப் போதிய பணம் வேண்டும்தானே?

நிறையட்டும்!தீபாவளி கொண்டாடும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்! வாழ்வில் இன்பமும் ஒளியும் அனைத்து நலமும் நிறைந்து வாழ வாழ்த்...