நான் ஏன் கசப்பான கீரைகள் சாப்பிடவேண்டும்? எதற்காக நினைவில் வைத்திருக்க வேண்டும்? என்றோ நடந்ததை ஏன் ஆண்டு தோறும் பேசவேண்டும்? இப்படி எண்ணற்றக் கேள்விகள் ஹானாவின் உள்ளத்தில் குமுறின. வாதிட்டு அழுது அரற்றினாலும் தாயின் கட்டளைக்கிணங்கி தாத்தா வீட்டுக்குச் செல்கிறாள். தாத்தா வில், பாட்டி பெல், வில்லின் தங்கை, ஆன்ட் ஈவா, தம்பி ஆரோன் எல்லோரும் இருக்கிறார்கள். தாத்தா வில் தொலைக்காட்சியில் பழைய காட்சிகளை ஓடவிட்டு திட்டிக் கொண்டிருந்தார். ஏன் பார்க்க வேண்டும்? ஏன் திட்ட வேண்டும்? ஹானாவிற்கு எரிச்சலாக இருந்தது.