அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை தோறும் இணையவழி நிகழும் 'தமிழே அமுதே' நிகழ்ச்சியில் நான் அன்பு அண்ணன் கவிஞர் திரு.நா.முத்துநிலவன் அவர்களின் 'முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே' எனும் நூலை அறிமுகம் செய்தேன். பெரும் வரவேற்பைப் பெற்றது இந்நூல். இந்நூலினைப் படிக்க வேண்டும் என்று பலரும் என்னிடம் கேட்டபடியுள்ளனர்.