செங்குருதி ஞாயிறு
முந்தையப் பதிவுகளின் இணைப்புகள்
1.செல்மா
2.மாரியன்
3.ஜிம்மி லீ ஜாக்சன்
4. ஜான் லூயிஸ்
எட்மன்ட் பெட்டஸ் பாலத்தின் மேற்பகுதியை அடைந்த ஜான் லூயிசும் வில்லியம்சும் திடிரென்று நின்றனர். அங்கே பாலமிறங்கும் இடத்தில் நீலவானம் இறங்கி வந்திருக்கிறதோ என்று ஐயுறும் வகையில் ஒரு தோற்றம்! ஆம்! நீலத் தலைக்கவசமும் நீலச் சீருடையும் அணிந்த அலபாமா மாநிலப் படையினர் நெடுஞ்சாலை 80இன் ஒரு புறமிருந்து மறுபுறம்வரைத் திரண்டிருந்தனர். அவர்களோடு இணைந்து நிறவெறிபிடித்த வெள்ளைப் பொதுமக்களும் எள்ளி நகையாடிக் கான்பெடரேட் (Confederate) கொடிகளை அசைத்துக்கொண்டு! செல்மாவின் செரிப் ஜிம் கிளார்க் நியமனம் செய்திருந்த வெள்ளைப் பிரதிநிதிகளும் தடிகளோடும் சாட்டைகளோடும் குழுமியிருந்தனர். முட்கம்பிகள் பொருத்தப்பட்ட ரப்பர் பைப்பைச் சுழற்றிக்காட்டியதாகவும் குறிப்புகள் சொல்கின்றன.
ஜான் லூயிஸ் - குடியுரிமைப் போராட்டம்
முந்தையப் பதிவுகளின் இணைப்புகள்
1.செல்மா
2.மாரியன்
3.ஜிம்மி லீ ஜாக்சன்
ஜிம்மி லீ ஜாக்சனின் மரணம் அதிர்வலைகளை ஏற்படுத்தி சம உரிமை வேண்டும் போராட்டம் மேலும் எழுச்சிபெறச் செய்தது. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் நிகழ்ந்த அநீதியைக் கண்டுக் குமுறினர், நிறம் கறுத்த எம்முயிர் துச்சமா என்று வெகுண்டு எழுந்தனர். குடியுரிமை பெற்று ஜிம்மியின் மனவிருப்பம் நிறைவேற்றுவோம் என்று வீறு கொண்டனர்.
ஜிம்மி லீ ஜாக்சன்
முந்தையப் பதிவுகளின் இணைப்புகள்
1.செல்மா
2.மாரியன்
விவியன் அவர்கள் சென்றவுடன், ஆல்பர்ட் டர்னர் அங்கிருந்த மக்களுடன் விடுதலைப் பாடல்களைப் பாடிக்கொண்டு சிறைச்சாலை வரை ஒரு ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்தார். மக்களும் பாடிக்கொண்டு அமைதியான முறையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அமைதியான போராட்டம் என்றாலும் இரவின் போர்வையில் மிகப்பெரிய கொடுமை அரங்கேறியது.
1.செல்மா
2.மாரியன்
விவியன் அவர்கள் சென்றவுடன், ஆல்பர்ட் டர்னர் அங்கிருந்த மக்களுடன் விடுதலைப் பாடல்களைப் பாடிக்கொண்டு சிறைச்சாலை வரை ஒரு ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்தார். மக்களும் பாடிக்கொண்டு அமைதியான முறையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அமைதியான போராட்டம் என்றாலும் இரவின் போர்வையில் மிகப்பெரிய கொடுமை அரங்கேறியது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
ஐங்குறுநூறு 24 - பாடியவர் ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவியிடம் சொன்னது “ தாய் சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு பிள்ளை த...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...
-
காதல் என்றால் தோழியோ தோழனோ இல்லாமல் எப்படி? இப்பொழுது மட்டும் இல்லை, சங்க காலத்தில் இருந்தே அப்படித்தான். ஒரு பெண் காதல் வயப்படுகிறாள். அவள...