ஆலந்தூர் கோ. மோகனரங்கன் பன்னாட்டுக் கவியரங்கம்


 

முத்தமிழ்க் கவிஞர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல், அக்டோபர் 4ஆம் நாள், அவருடைய மகனார் முனைவர் திரு.பாட்டழகன் அவர்களால், பன்னாட்டுக் கவியரங்கம் நடத்திச் சிறப்பிக்கப்பட்டது. 'தமிழே எங்கள் தலைமை' என்ற முதன்மைத் தலைப்பில் சிறப்பாக நிகழ்ந்த  இக்கவியரங்கில் நான்கு அமர்வுகளில், 12 துணைத்தலைப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டக் கவிஞர்கள் உலகெங்குமிருந்து கவிதைகள்  வாசிக்க,  ஏறக்குறைய 8 மணிநேரம் நடந்து சாதனைக் கவியரங்கமாகவே அமைந்தது. 

நீதிபதி மூ. புகழேந்தி தொடங்கி வைக்க, கவியருவி சாரதா சந்தோஷ் அவர்களின் தலைமையில் இக்கவியரங்கம் நடைபெற்றது. ஜெனீவா கவிஞர் திருமிகு.அருந்தவராஜா முதல் அமர்விற்கும், வாஷின்டன் டி. சி. கவிஞர் திருமிகு.மகேந்திரன் பெரியசாமி இரண்டாம் அமர்விற்கும், சுவிஸ் கவிஞர் திருமிகு.சிவதர்சினிராகவன் மூன்றாம் அமர்விற்கும், மிக்சிகன் மாகாணக் கவிஞர் திருமிகு.ஆனந்தி சுப்பையா நான்காம் அமர்விற்கும் தலைமை தாங்கி அருமையாக நடத்தினர். 


 

முதலாம் அமர்வு துணைத் தலைப்புக்கள்:

1.மறைந்த முத்தமிழ்க் கவிஞர் மோகனரங்கன் அவர்கள் தமிழ்க்காற்றியப்பணி 

2. சங்க இலக்கியங்கள் 

3. தமிழ் இனம் 


 


 

இரண்டாம் அமர்வு துணைத் தலைப்புக்கள்:

1.தமிழ் வேந்தர்கள்

2. தமிழர் மரபு

3. தமிழ் வளர்ச்சி  

 

   


 

மூன்றாம் அமர்வு துணைத் தலைப்புக்கள்:

1. யுத்தம் செய்

2. நவீன தமிழ் இலக்கியங்கள்

3. புலம் பெயர்ந்த தமிழர்கள்

 

   


 

நான்காம் அமர்வு துணைத் தலைப்புக்கள்:

1. மோதிமிதித்து விடு பாப்பா

2. தாயின் மணிக்கொடி

3.நவீன தமிழ் யுகம்

 

 

 

உலகெங்குமிருந்து கவிஞர்கள் கவிபாடியது சிறப்பு என்றாலும் அதனினும் சிறப்பாகப் பல மாணவக் கண்மணிகள் இன்தமிழில் கவிபாடியது மேலும் சிறப்பாக மகிழ்வைத் தந்தது. 

இக்கவியரங்கில் முதல் அமர்வில் அன்புத்தோழிகள் மு.கீதா மற்றும் மைதிலி கஸ்தூரிரங்கன் அருமையான கவிதைகள் வாசித்தனர்.  இரண்டாம் அமர்வில் தமிழ் வளர்ச்சி என்ற துணைத்தலைப்பில் நான் ஆசிரியப்பா வாசித்தேன். அதன் காணொலி இணைப்பு இதோ: 

தமிழ் அமெரிக்கா வானொலி நேரலையாக ஒளிபரப்பிய நிகழ்ச்சியின் இணைப்பு கீழே. 1.42 மணியளவில் மு.கீதா, 2.15 இல் மைதிலி, 4.16 மணியளவில் நான்.

முத்தமிழ்க் கவிஞர் மோகனரங்கன் அவர்களைப் பற்றி 'தமிழ் அறிஞர்கள்  அறிவோம்' பகுதியில் தினமணியில் வந்த கட்டுரையின் இணைப்பு. அவரைப் பற்றி அறிந்துகொள்ளக் கண்டிப்பாக வாசியுங்கள்.

நன்றி!

-கிரேஸ் பிரதிபா 

3 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...