இடுகைகள்

ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காகிதக் கதவுகள்

படம்
 

குடியரசு நாள்

படம்
  குடியரசு நாள் இந்திய அரசியலமைப்பு செயலாக்கப்பட்ட நாள் சமதர்மம் சுதந்திரம் சகோதரத்துவம் குடியரசின் மூன்று தூண்களாம் மூன்றும் சமமாய் வலுவாய் நிற்பதே குடியரசின் வெற்றி குடிமக்களின் வாழ்க்கை உலகின் நீண்ட அரசியலமைப்பு உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் செயல்படுத்திப் போற்றிய  தலைவர்கள் இந்தியத் தாயின் தவத்திருப் புதல்வர்கள் தேசத்தின் அடிநாதமாய் தீங்கின் எதிர்ப்பு சக்தியாய் சீர்மிகு அரசியலமைப்பு ஏற்ற இறக்கங்களையும் சவால்களையும் வலுவாய்ச் சந்தித்து பாரில் இந்தியா ஓங்கவே செய்யும் அரச கம்பீரம்   வித்திட்ட இந்நாளைக் கொண்டாடுவோம் குடியரசின் முதுகெலும்பாம் அரசியலமைப்பு நாட்டின் முதுகெலும்பாம் உழவர்கள் இரண்டிற்கும் நன்றி இரண்டும் போற்றி உழுகுடிகளுக்கும் அவரைச் சார்ந்த மற்றனைத்துக் குடிகளுக்கும் இனிய குடியரசு நாள் வாழ்த்துகள்

தமிழ்ப்பாரம்பரியமும் தைத்திருநாளும் - கவிதைப்போட்டி - இரண்டாமிடம்

படம்
  அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கத்தின் தைத்திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகப் பல போட்டிகள் நடைபெற்றன. அதில் கவிதை எழுதி வாசிக்கும் போட்டியில் இரண்டாமிடம் எனக்கு.  கவிதையைக் கேட்டு உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.  நன்றி.

உழவனே உலகின் உயிர்நாடி

படம்
  தலைநகர் தமிழ் மன்றம்நடத்திய பன்னாட்டுக் கவியரங்கில் கவிதை வாசிக்கக் கிடைத்த வாய்ப்பிற்கு மன்றத்தின் தலைவர் திருமிகு.பாரதராஜா அவர்களுக்கு நன்றியுடன், இதோ, மூன்றாம் அமர்வில், கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி அவர்களின் தலைமையில் நான் வாசித்த என் கவிதை! தலைப்பு: உழவனே உலகின் உயிர்நாடி- கலித்துறைப் பாடல் ஒளிர்ந்திடும் நிலவே உலாவிடும் முகிலே   உரைத்திடுங்கள் குளிர்ந்திடும் கிளையே குலாவிடும் கிளியே   பகர்ந்திடுங்கள்   துளிர்விடும் உயிரில் தொடங்கிடும் முளையில் உயர்ந்ததெது   மிளிர்ந்திடும் கவியே மகிழ்வுடன் பகர்வோம் உணர்ந்திடுநீ  

விவேகானந்தர் பார்வையில் இளைஞர்கள்

படம்
  விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி வீரத்தமிழரசி வேலுநாச்சி இலக்கிய சமூக அமைப்பு புலனம் வழி நடத்திய  நான்கு சீர்கள் கொண்ட  பதினாறு அடிகளில் கவிதை பாடும் நிகழ்ச்சிக்கு நான் எழுதியது. தலைப்பு: விவேகானந்தர் பார்வையில் இளைஞர்கள்

பொங்கல் வாழ்த்து பா

படம்
 

அறச்சீற்றம் கொள் - பொங்கல் கவியரங்கக் கவிதை

படம்
  தமிழ் அமெரிக்கா மற்றும் ஆலந்தூர் கோ.மோகனரங்கன்தமிழியல் ஆய்வு மையம் நடத்திய பொங்கல் கவியரங்கில் நான் வாசித்தக் கவிதையும், அதன் வலையொளிப் பதிவும்! பார்த்து உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்.  இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்! மகிழ்வும், அன்பும், நலமும் வளமும் பொங்கட்டும்! பொங்கலோ பொங்கல்!