அட்சயப் பாத்திரம்


சமைத்துக் கட்டி அனுப்பிவிட்டு
துலக்கித் தொட்டித் துடைத்துவிட்டு
பெருக்கிக் கூட்டித் துடைத்துவிட்டு
அசதி என்று ஒரு தேநீர் குடித்தால்....
பளிங்குத் தொட்டியில் மீண்டும்
துலங்க ஒரு கோப்பை!!

பின் குறிப்பு:
இக்கவிதை லேசான மனநிலையிலேயே எழுதப்பட்டது..வருத்தமோ எரிச்சலோ இல்லை :) வாழ்க்கை என்றால் உணவு வேண்டும், உணவு என்றால் பாத்திரம் கழுவவும் வேண்டும் :)))

பெண்மையை நான் மதிக்கிறேன்






எனக்குப் பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் முத்துநிலவன் அண்ணா, சிறந்த இரு கவிதைகளைப் பகிர்ந்து மற்றவரும் வலைப்பின்னலாகத் தொடரலாம் என்று சொல்லியிருந்தார். பெண்மையை மதித்து மற்றவரையும் மதிக்கத் தூண்டும் அண்ணாவிற்கு என் அன்பான வணக்கங்கள். என் அன்புத்தோழி மைதிலி பெண்மையை நான் மதிக்கிறேன் என்ற தலைப்பில் அண்ணா தொடங்கிவைத்தத் தொடர்பதிவைத் தொடர்ந்தார். மைதிலிக்கும் என் அன்பு வாழ்த்துகள்!
அண்ணாவின் பதிவைப் பார்த்ததிலிருந்தே எனக்கும் தொடர வேண்டும் என்று ஆசை. ஆனால் வலைச்சரப்பணி, மேலும் பிள்ளைகளின் பள்ளியில் இந்தவாரம் பார்த்தா இத்தனை கூட்டங்கள்!! இதெற்கெல்லாம் மேலாக என் கணவர் ஊரில் இல்லை, அதனால் பிள்ளைகளைப் பள்ளியில் விடுவதில் தொடங்கி அவர் செய்யும் பணிகளையும் நானே செய்ய வேண்டியதாகப் போயிற்று. (எல்லாம் அவர்தானே செய்கிறார் என்று யாரும் கிண்டல் அடிக்கக் கூடாது, ஆமாம் சொல்லிட்டேன். :) ) பள்ளியில் ஆறு, ஏழு  வயது குழந்தைகள் "Ms.Grace, you are awesome" என்று சொன்னபொழுது எத்துனை மகிழ்ச்சி!!  இதையெல்லாம்  ஏன் சொல்கிறேன் என்றால், 'நடத்திக் காட்டுவேன்' என்று நடத்திக் காட்டிட்டேன்ல? :))
பெண்மையை நான் மதிக்கிறேன் என்று சொல்லும்பொழுது நான் மதிக்கும் ஒரு பெண் என் நினைவில் வந்தார். பெண்மையை மதித்து, குழந்தைகளை மதித்து, வறியவரை மதித்து, மனிதத்தை மதித்து அவர் செய்யும் பணிகள் ஏராளம். அவர் சென்ற ஆண்டு மகளிர் தினத்தன்று ஒரு கவிதை எழுதியிருந்தார். என் இனிய தோழி, உங்களுள் பலரும்  அறிந்த எழில் தான் அவர். 'நடத்திக்காட்டும்' அருமையான பெண்மணியின், அருமையான கவிதையைப் பகிர்வதில் மகிழ்கிறேன். 

"அருமையான மனுசிங்கதான்
ஆனாலும் அவளைக் காமத்துடன் தான்
உற்று நோக்க முடிகிறது எனும்
பதர்கள் இருக்கும் வரை......

........
.......சுயத்தை இழக்காத
எதுவும் தான் மகிழ்வு 
எனும் உள்ளுணர்வு
பெண்களிடம் தோன்றும் வரை......"
முழுக்கவிதையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்

"ஒரு நாள் மட்டும் வாழ்த்துச் சொல்லி , பரிசுகள் வழங்கி, வெளியில் உணவருந்துவதில் முடிவதில்லை மகளிர் நாள்... மீதமுள்ள 364 நாட்களிலும் பெண்ணை சக உயிராய் நினைத்து ,இணைத்து, இணைந்து வாழ்வதில் இருக்கிறது...." - சரிதானே?


இதே தலைப்பில் நீங்களும் உங்களுக்குப் பிடித்த கவிதைகளைப் பகிருமாறு வேண்டுகிறேன்.

உலக மகளிர் நாள் வரலாறு

உலக மகளிர் தினத்தின் இந்த வருட மையக்கருத்து 'நடத்திக்காட்டு ' (Make it happen)! தேவையானவை எவையோ, நடத்திக் காட்டுவோம்!


1908இல் நியூயார்க்கில் 15000 பெண்கள் ,சரியான சம்பளம், குறைந்த வேலை நேரம் மற்றும் வாக்குரிமை கேட்டு ஊர்வலம் நடத்தினர். பின்னர் சோசியலிஸ்ட் பார்ட்டி ஆப் அமெரிக்கா 1909இல் நேஷனல் வுமன்ஸ் டேயாக (National women's day)பெப்ரவரி 28ஆம் நாளை அறிவித்தனர். 1913 வரை பெப்ரவரி கடைசி ஞாயிறு நேஷனல் வுமன்ஸ் டேயாகக் கொண்டாடப்பட்டது. இதற்கிடையே 1910இல்  வேலைபார்க்கும் பெண்களின் இரண்டாவது உலக மாநாடு கோப்பென்ஹேகனில் (Copenhagen) நடைபெற்றது. அதில் கிளாரா ஜெட்கின் என்பவர், சோசியலிஸ்ட் டெமோக்ரடிக் பார்ட்டியின் மகளிர் தலைவியாக இருந்தவர், உலக பெண்கள் நாள் கொண்டாட வேண்டும் என்று முன்வைத்தார். தங்கள் உரிமைகளுக்காக உலகம் முழுவதிலும் உள்ள பெண்கள் ஒரே நாளில் இதைக் கொண்டாட வேண்டும் எனபதே அவர் நோக்கம். பதினேழு நாடுகளில் இருந்து வந்திருந்த சுமார் நூறு பெண்கள் கிளாராவின் கருத்தை ஆதரித்து ஒருமனதாக  'உலக மகளிர் தினம்' கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர். இவர்களில், பின்லாந்து பார்லிமெண்டிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்த முதல் மூன்று பெண்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்மானத்தைத் தொடர்ந்து 1911 மார்ச் 19ஆம் தேதியன்று 'உலக மகளிர் தினம்'  முதன்முதலாக ஆஸ்ட்ரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் ஸ்விட்சர்லாந்தில் கொண்டாடப்பட்டது. வாக்குரிமை, பணியுரிமை, பொதுப்பணித் துறைகளில் இடம், பாலியல் பாரபட்சத்தை நிறுத்த என்று பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஒரு வாரம் கழிந்து மார்ச் 25ஆம் தேதி நியூயார்க்கில் 'ட்ரைஆங்கிள்' தீ விபத்து என்று அறியப்படும்  ட்ரைஆங்கிள் ஷர்ட்வைஸ்ட் தொழிற்சாலை யில் ஏற்பட்ட தீவிபத்து (Triangle Shirtwaist Factory fire) 140 பெண்களைப்  பலிகொண்டது. இதன் பின்னர், வேலையிடப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் சட்டம் இயற்றுதல் என்று அடுத்த வருடங்களில் தீர்மானங்கள் முன்வைக்கப் பட்டன.


முதல் உலகப்போர் துவங்கும் முன்னர் அமைதியை வலியுறுத்தி,ரஷ்ய மகளிர் பெப்ரவரி 1913, கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று அவர்களின் முதல் உலக பெண்கள் தினத்தைக் கொண்டாடினர். அதன் பின்னர் ஏற்பட்ட கலந்துரையாடல்களுக்குப் பின் உலக மகளிர் நாள் மார்ச் 8ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அப்பொழுதிலிருந்து அதுவே கடைபிடிக்கப் படுகிறது. 1914இல் ஐரோப்பாவின் பல இடங்களிலும் போருக்கு எதிராகப் பெண்கள் ஊர்வலம் நடத்தி, பெண்கள் ஒற்றுமையைக் காட்டினர்.
1917இல் இரண்டு மில்லியனிற்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் போரில் உயிர் துறந்திருந்தனர். அந்த ஆண்டு பெப்ரவரித் திங்கள் கடைசி ஞாயிறன்று பெண்கள் 'பிரட் and பீஸ்' (bread and peace) என்ற போராட்டத்தைத் துவக்கினர். நான்கு நாட்கள் தொடர்ந்த போராட்டத்தின் முடிவில் ஜார் அரசு நீக்கப்பட்டு, பதவிக்கு வந்த தற்காலிக அரசு பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது. பெண்களின் மன உறுதிக்கும் ஒற்றுமைக்கும் கிடைத்த பரிசு! பெண்கள் இணைந்து போராடினால் எந்த அரசையும் நிலை குலையச் செய்ய முடியும்.  பெண்களின் போராட்டம் துவங்கியது அப்பொழுது ரஷ்யாவில் பின்பற்றப்பட்ட ஜூலியன் காலெண்டரில் பெப்ரவரி 23ஆம் நாள், அது தற்போதைய கிரகோரியன் காலெண்டரில் மார்ச் 8.
சோசியலிஸ்ட் இயக்கத்தால் துவங்கப்பட்ட உலக மகளிர் நாள் பின்னர் உலகளாவிய கவனம் பெற்று வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் அனைத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாட்டுச் சபையும் வருடாந்திர மாநாடுகள் நடத்தி உலக மகளிரின் உரிமைகளையும் சமூக, அரசியல் பொருளாதாரப் பங்கேற்பையும் வலியுறுத்தி வருகிறது. ஐக்கிய நாட்டுச் சபை 1975 ஆம் ஆண்டை உலக மகளிர் ஆண்டாக அறிவித்தது. மகளிர் இயக்கங்களும் அரசுகளும் மகளிர் தினத்தன்று பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து பெண்கள் முன்னேற்றத்தைக் கொண்டாடியும் வாழ்வின் அனைத்துத் தரப்பிலும் கிடைக்கவேண்டிய சமஉரிமைகள் கிடைப்பதற்கான விழிப்புணர்வை நினைவுபடுத்தியும் வருகின்றன.
இந்த நூற்றாண்டில் ஆப்கானிஸ்தான், அர்மேனியா, பெலாரஸ், கம்போடியா, கியூபா, கசகிஸ்தான், ஜியார்ஜியா, லாவ்ஸ், மங்கோலியா, எரித்ரியா, ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உகாண்டா, உக்ரைன், உஸ்பெகிஸ்தான், வியெட்னாம், சாம்பியா போன்ற நாடுகளில் மகளிர் நாள் அரசு விடுமுறையாகவும், நேபால், சீனா, மடகாஸ்கர் போன்ற நாடுகளில் பெண்களுக்கான அரசு விடுமுறையாகவும் அனுசரிக்கப்படுகிறது. ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்களை மரியாதை செய்யும் விதமாகப் பரிசுகள் கொடுத்தும் கொண்டாடுகின்றனர். 
உலக மகளிர் தினத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் சமூக வலைத்தளங்களில் சில hashtags பயன்படுத்த இன்டர்நேஷனல் வுமன்ஸ் டே அமைப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.



#MakeItHappen
 #womensday
 #IWD2015
 #internationalwomensday
 #PaintItPurple


பர்பிள் வண்ணம் நீதி மற்றும் தன்மானத்தைக் குறிக்கும் வண்ணம் என்பதால் மகளிர் சமத்துவத்தைப் பிரதிபலிக்க வுமன்ஸ் சோசியலிஸ்ட் and பொலிடிகல் யூனியன்  1908இல் இந்த வண்ணத்தைத் தேர்ந்தெடுத்தது. மேலும் பச்சை மற்றும் வெள்ளை நிறங்களும் மகளிர் உரிமைக்குக் குரல் கொடுத்தப் பெண்களின் நிலையைக் குறித்தது. இந்த  வண்ணங்களில் பேனர்கள், கொடிகள், அடையாள அட்டைகள்  பெண்களின் கூட்டொருமையைக் காட்டப் பயன்படுத்தப்பட்டன.
நன்றி:இன்டர்நேஷனல் வுமன்ஸ் டே அமைப்பு 

சீரிய வழி செய்வோம்


"பெண்கள் விழித்துக் கொண்டால் 
   பெருமலையும் நகருமாம் 
 விழித்தோர் இணைந்தும் விட்டால் 
   இழி பதர்கள்  எம்மாத்திரம்?
விழித்துக் கொண்டோம்,
இணைந்தும் விடுவோம் 
சீரிய வழி செய்வோம் 
கூரிய அறிவுடையோர்  நாம்!"

இந்த வாரம் வலைச்சரத்தில் நான், மூன்றாவது முறை ஆசிரியராய்!

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...