அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்


அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்

அங்கும் இங்கும் வன்முறை
அமைதிக்குப் பல தடை
பொய்யும் புரட்டும் ஒருபுறம்
பகட்டும் பாசாங்கும் மறுபுறம்
சிறார் மேல் கொடுமை
முதியோர் மேலும் அடக்கொடுமை
மங்கைக்குப் பல தொல்லை
வரதட்சனை ஒழிந்தாவிட்டது?
வன்கொடுமையோ தாண்டவமாடுகிறது
மனிதம் மண்ணாய்ப் போக
புனிதம் பஞ்சாய்ப் பறக்க
அப்பப்பா முடியவில்லை
பாரதி பொந்திடை வைத்தது
வெந்து தணிந்ததில் இருந்தே
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
காடில்லாமல் தேடித்தேடி
மனப்பொந்துகளில் வைக்கிறேன்
மைகொண்டெழுதியது போக
காற்றலையில் எழுதிவைக்கிறேன்
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
அறம்சார் வாழ்விற்கு
அங்கும் இங்கும் வைத்தேன்
வெந்துதணியட்டும் இன்னல்
- கிரேஸ் பிரதிபா

கனடாவில் திரு. வேந்தன் பேரின்பன் அவர்களால் இயக்கப்படும்  யுகம் வானொலியில் ஞாயிறுதோறும் இரவு ஒன்பதரை மணிக்கு 'காற்றிடைப் பாவெளி' நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்.  மே 3ஆம் நாள் அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு நான் எழுதிய கவிதை.
www.yugamradio.com

6 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...