கைவினை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கைவினை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெண்டைக்காய் கைக்குட்டை - கைவினை


வெண்டைக்காய் சத்து மிகுந்ததாம்
வெண் முத்துடைப் பெட்டியாம்
பச்சை நிறமாம்
பெண்விரல் ஒத்ததாம்
கணக்கு நன்றாய் வருமாம்
காண்பீர் நண்பரே
கைக்குட்டை வந்ததே எனக்கு



என் ஐந்து வயது மகனுடன் செய்தது..அவன் கால்பங்கு செய்துவிட்டு ஓடிவிட்டான்..மீதியை நான் முடித்தேன். பாப்ரிக் பெயிண்ட் பயன்படுத்தினேன். 24 மணிநேரம் காயவிட்டபின் பின்புறம் அயர்ன் செய்ய வேண்டும்.
பள்ளிக்குக் கொண்டுசெல்கிறானாம், ஓரம் அடிக்கவேண்டும்.

இன்னும் சில காகிதத்தில்.....
வெங்காய அச்சுப்படம்


வெங்காயம் மற்றும் விரல் அச்சுப்படம்

கிறிஸ்துமஸ் காலம் - கைவினை

இதையும் அதையும் துடைத்து
இதையும் அதையும் குறித்து

பச்சை மரத்தில் தொங்கவிட
பதமாய் வீட்டில் ஆபரணம் செய்து

பனி வேண்டும் இங்கே என்று
பனித் துளிகள் செய்தோம் காகிதத்தில்


முன்னாடியே செய்வது எது
முதல்நாள் செய்வது எது

நானாகச் செய்வது எது
நான் பெற்றவர்  செய்வது எது

குடில் வைப்பது எங்கே
குழந்தைகள் விளையாடுவது எங்கே

இதைச் செய்து விட்டோமே
இன்னும் எதைச் செய்யலாம்

இப்படிப் பல திட்டங்கள்
இப்படிப் பல கிளர்ச்சிகள்

இனிதாக வருகிறது அருகில் ஒரு தினம்
இன்பம் தரும் கிறிஸ்து பிறப்பு தினம்



கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.