கண்ணீரைக் கனலாக்கு கலங்கட்டும் கயமை
பெண்ணவள் உடைமையல்ல உயிரென்று உரைக்கட்டும்
எவர் ஆண்டால் என்ன பெண்களே அல்லலுற
இவர் அகம் திறக்காவிட்டால் பயனென்ன
பெண்ணைப் பொருளாக்கும் பேடிக்கூட்டம்
கண்ணீர் விடட்டும் கலங்காதே பெண்ணே
தண்ணீர் தண்ணீர் என்ற குரல்
தணலாய் எட்டுத் திக்கும் தகிக்கட்டும்
அதற்கும் நீர்வேண்டாம் அனல் கக்கட்டும்
இதற்கொரு நீதி வரும்வரை எரியட்டும்
அறம் அற்றுப் போன அகிலம் அழட்டும்
அரற்றாதே பெண்ணே உரம்கொள்
கண்ணீரைக் கனலாக்கு கலங்கட்டும் கயமை
பெண்ணவள் உடைமையல்ல உயிரென்று உரைக்கட்டும்
அதுவரை தகிக்கட்டும் தணல்
அருமை சகோ ரௌத்திரம் நன்று.
பதிலளிநீக்குநன்றி சகோ.
நீக்குகவிதை மிகவும் தகிக்கிறது.... ஆனால் மக்கல் இந்த பிரச்சனையை மறந்து அடுத்த பிரச்சனைகளுக்கு தாவிவிட்டார்கள். அவ்வளவுதான் நம் மக்கள்
பதிலளிநீக்குநன்றி சகோ.. ஆற்ற முடியவில்லை
நீக்குரௌத்திரம் பழகு...
பதிலளிநீக்குகலங்கடித்த நிகழ்வு.
ஆமாம் அண்ணா. பெண்களுக்கெதிரான வன்முறை, மனிதம் அற்றுப் போகும் நிலை கலங்கத்தான் அடிக்கிறது
நீக்குகொடூரமான நிகழ்வு...
பதிலளிநீக்குஆமாம் அண்ணா :-(
நீக்குமதுரைத் தமிழன் அவர்கள் சொல்வதை வழி மொழிந்தே ஆக வேண்டும்.
பதிலளிநீக்குவேதனை தான் அண்ணா
நீக்குதகிக்கும் வரிகள். கொடூரம். இப்படி ஒரு கொடூரம் அதுவும் இந்த நிலையில். தாங்கள்தான் திருந்தமாட்டோம் என்றால் நிர்பயா கேஸ் கண்டும் இன்னும் பயம் வர்லை பாருங்க நிர்பயா கேஸ் போல எல்லாரையும் தூக்குல போடணும் அப்படியாவது மாற்றம் வருமா? அது போல நீட்டி அடிப்பாங்களா?
பதிலளிநீக்குWhile India’s lockdown has been extended for two more weeks, crimes against women and children continue to rise in the country.
நிறைய நடந்துள்ளது....
கொடுமை பாருங்க
துளசிதரன், கீதா
ஓ சகோதரி/க்ரேஸ் மன்னிக்கவும்.. இது ஜெயஸ்ரீ சம்பவம் கொடூரமான சம்பவம். வேறு சில சம்பவங்களும் வாசித்ததால் இருவரும் வேறு ஒன்றை நினைத்துவிட்டோம். அதுவும் கொடூரமான ஒன்று. இது நேற்று இரவுதான் தெரிந்து கொண்டதால்...
பதிலளிநீக்குஇது ஒரு கொடூரம் என்றால் இன்னும் பல நடந்துள்ளது சகோதரி/க்ரேஸ். ஸாரி வேறு ஒன்றை நினைத்து இங்கு கருத்து சொன்னதற்கு..
துளசிதரன், கீதா
துளசிக்குத் தமிழ்ச் செய்திகள் போவது என்னிடம் இருந்து. நான் செய்திகள் பார்ப்பதும் இல்லை வாசிப்பதும் இல்லை. நம் வீட்டில் டிவி கிடையாது. எந்த தமிழ்ப்பத்திரிகையும் கிடையாது. நெட்டில் கூகுளில் மொபைலில் வரும் செய்திகள் மட்டுமே என்பதால்.
மீண்டும் மன்னிப்பு கோருகிறோம்
கீதா
உங்கள் இருகருத்துக்களுக்கும் சேர்த்தே பதில் அளிக்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
நீக்குதவறொன்றும் இல்லை, மன்னிப்பெல்லாம் எதற்கு? நீங்கள் எண்ணியதும் ஜெயஸ்ரீக்கு நிகழ்ந்த கொடுமையும் பெண்ணை பொருளாக, உடைமையாகக் கருதுவதன் விளைவுகள் தானே?
கவிதையின் சில வரிகள் பொதுவாகத் தான் உள்ளது.
நீங்கள் சொன்ன கருத்தும் பொருத்தமே. மிக்க நன்றி கீதா, துளசி அண்ணா.