இவளுமானதும்


அன்றோர் நேரம்
பொன்வானில் மேகங்களைப் பார்த்திருக்க
எண்ணச் சிறகை இரவல் பெற்று
கண்விட்டகன்றன

அவற்றைத்தான் தேடுகிறேன்
அற்றைக் கனவுகளை வேண்டுகிறேன்
இவளுக்கானதும் இவளுமானதும்
இவளுக்கு வேண்டும் வருவீரோ?
பொழிந்திருந்தாலும் பாதகமில்லை
பிழிந்து தருவீரோ சிலவற்றையேனும்
அன்றைய இவளாய் ஆகட்டுமே ஒருபொழுதேனும்
அற்றைக் கனவுகளைச் சுமந்து 


18 கருத்துகள்:

  1. சில கனவுகள் சிலருக்கு அவசியமே...

    பதிலளிநீக்கு
  2. தங்களைப் பின்னோக்கி அழைத்துச் செல்ல கனவுகள் வரட்டும்
    அருமை சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  3. கனவும் கற்பனையும் சிறப்பு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சகோதரி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  5. ட்க்கென்று பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது க்ரேஸ். கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள் என்று...வேண்டாம் இவளுக்குக் கலைந்து போக வேண்டாம்...//இவளுக்கானதும் இவளுமானதும்
    இவளுக்கு வேண்டும் வருவீரோ?// பிழிந்துதான் கொடுங்களேன் சிலவற்றையேனும்....

    அவள் ஒரு பொழுதேனும் மகிழ்வாய் இருந்திடட்டுமே...

    அருமை க்ரேஸ்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்! ஆமாம், இப்போது எனக்கு நினைவு வந்தது. :-)
      ஆமாம்! யாருக்கும் கனவுகள் கலைய வேண்டாம்..குறிப்பாக, பெண்களுக்கு.

      மனமார்ந்த நன்றி கீதா.

      நீக்கு
  6. அருமை என் கனவுகளை தட்டி எழுப்பிவிட்டாயடி என் அன்பு தோழி :) மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  7. கனவு குறித்த கற்பனை அருமை சகோ

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...