பொன்னியின் செல்வன் - இந்தச் சொற்றொடரில் தான் எத்துனை வலிமை! எத்துனை இனிமை! வன்வாள் பாய்ந்தது தேனிமை நிறைந்தது என்று சொல்லலாம்!
இந்தச் சொற்றொடர் மனம்கவர் பெயர் மட்டுமல்ல, காலம் கவர் கால உந்தி!ஏரியின் அழகை இரசித்துக்கொண்டே குதிரையில் வரும் இளைஞனின் எண்ண ஓட்டங்கள் சுழலாய் உள்ளிழுக்கும்! ஆனால், மூச்சுத்திணராமல் பல சுழல்களுக்குள் பயணிக்கவைக்கும்! குளிர் சோலைகளைக் காட்டும், சிலிர் சதிகளையும் காட்டும்!