தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் கற்கிறோம் - எழுத்து அட்டைகள்
நான் சொல்லும் வார்த்தையை எழுதி அதற்கு ஏற்றவாறு படமும் வரையச்சொன்னேன். வயிற்றில் 'square'வர வேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பான். அதனால் கட்டத்தை அவன் அப்பாவின் வயிற்றில் வரைந்திருக்கிறான். :)
இங்கு இடையில் குறும்பு, தானாக ஆங்கிலத்தில் ஏதோ எழுதுவதற்கு இடைவெளி எடுத்துக்கொண்டான்.
என் தமிழ்! என் அடையாளம்!
என் தாய்மொழியாம் செம்மொழி எனக்கு முக்கியமானது, அது என் அடையாளம். இது பற்றி ஒருகவிதை என் தமிழ்! என் அடையாளம்! என்ற தலைப்பில் முன்னர் எழுதியிருந்தேன். அதை இன்று மீள் பதிவாக வெளியிடலாம் என்ற ஒரு எண்ணத்தில், இதோ
எனக்கு என்று ஒரு அடையாளம் உண்டு
இங்கு பகிர்வதில் மகிழ்வடைகிறேன்.
எனக்கு என்று ஒரு அடையாளம் உண்டு
என் தாய், என் தந்தை, என் தாய் மொழி,
என் ஊர், என் நாடு என்று
இவற்றில் எதை விட்டுக் கொடுத்தாலும்
என் அடையாளம் அழிந்து விடும்
ஆனால் இன்று பெரிதும் ஒதுக்கப் படுவது
தாய் மொழியாம் தமிழ் மொழி!
நம் தாய் மொழி நம் நாவில் சீராக இல்லாவிட்டால்
நம் தமிழ்த் தாய் நம் வீட்டில் ஆட்சி செய்யாவிட்டால்
நம் தேன் தமிழை நம் குழந்தைகள் ருசிக்காவிட்டால்
நம் ஓங்கு தமிழ் எழுத்துகள் நம் விரல்களில் ஆடாவிட்டால்
நம் செம்மையான தமிழ்க் கருவூலத்தை நாம் மறந்தால்
ஐயோ! வெட்கக்கேடு, தன்மானக் கேடு!
'நான்' என்பதை இழந்து பல செல்வம் திரட்டினாலும் என்ன பயன்?
மேடைக்கு முகமூடி அணியலாம் அதுவே வாழ்வானால்?
சிந்திப்போம், செயல்படுவோம்!
தமிழ் மேன்மை அடைய உழைக்க வேண்டாம்
ஏன் என்றால் அதன் மேன்மை மிகப் பெரிது
அதனைக் கீழே இறக்காமல் இருந்தால்
அதுவே நாம் செய்யும் பெரும் பணி!
தமிழ் என் தாய் மொழி! என் பண்பாடு, என் வாழ்க்கை!
எனக்கும் என் சந்ததிக்கும் அதுவே முதன்மை!
இதனை மறக்காமல் வாழ்வது என் கடமை!
இப்படி ஒவ்வொரு தமிழனும் நினைத்தால் அதுவே மேன்மை!
இங்கு பகிர்வதில் மகிழ்வடைகிறேன்.
என் தாலாட்டு
என்னுடைய முதல் மகன் பிறந்த பொழுது (நவம்பர் 2004 ), வீடு சென்றதிலிருந்து நிறைய பாட்டு பாடுவேன். அவனுடன் நிறையப் பேசுவேன். அப்பொழுது நானாக, என் சொந்த வார்த்தைகளால் தமிழில் அவனைக் கொஞ்சி பாடிய தாலாட்டுப் பாடலை இங்கே பதிவு செய்கிறேன். எண்ணற்ற முறை பாடி அவனுக்கே இப்பாடல் நன்றாக தெரியும்.
பிறகு என் இரண்டாவது மகனுக்கும் இதைப் பாடியிருக்கிறேன், பெயரை மட்டும் மாற்றி... :-)ஆழ் கடல் முத்தேநீல் வான நிலவே
சோலை மலர் மணமே
மலைத்தேன் சுவையே
கானமயில் நடமே
கூவும் குயில் இசையே
வீசும் தென்றல் காற்றே
என் இதயத் துடிப்பே
என் செல்ல மகனே ....Haaaanikuttyyy .... :-)
இதைப் பாடினால் Hani முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியையும் அவன் கண்களில் தெரியும் பிரகாசிப்பையும் பார்க்க அவ்வளவு இனிமையாய் இருக்கும். :-)
என்னுடைய நண்பர்கள் சிலரும் அவர்களின் குழந்தைகளுக்கு இப்பாடலை பாடியுள்ளனர் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி!
இதை என்னுடையஆங்கிலத் தளத்தில் இருந்து இறக்குமதிசெய்து வெளியிடாமல் வைத்திருந்தேன், என்ன காரணத்தினாலோ. நேற்று பொங்கல் சிறப்பு நீயா நானா பார்த்தேன். அதில் தாலாட்டுப் பாடல்கள் பற்றி கோபிநாத் கேட்டபொழுது அட, நான் அங்கு இல்லையே என்று நினைத்தேன். ;-)
அதனால் என்ன, என்னுடைய தாலாட்டுப் பாடல் இங்கே உங்களுக்காக...
என் மற்றொரு தாலாட்டுப் பாடல்.

தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்
“உங்க பையன் தமிழ்
பேசுவானா?!!”, “வீட்டுல தமிழ்தான் பேசுவீங்களா?!!”, “உங்க பசங்க நல்ல தமிழ்
பேசுறாங்களே!!” இவையெல்லாம் யாரோ வேற்றுமொழியினரிடம் கேட்கப்படும் கேள்விகள் என்று
நினைத்து விட்டீர்களானால் மன்னித்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் தமிழச்சியான
என்னிடம் கேட்கப்படும் கேள்விகள் தான்!!!! கேட்பவர்களும் தமிழர்கள் (டமிழர்கள்)
தான். “அப்படியா?!! இப்படியா இருக்கிறது, இன்றைய நிலைமை!!!?”, என்று
ஆச்சரியப்படாமல் இன்றைய யதார்த்தம் இதுதான் என்று தள்ளிவிட்டுப் போகும் நிலை தான்
இன்றைக்கு உண்மை நிலை!! தற்காலத் தமிழின் நிலை!
தமிழ்நாட்டில்
அதுவும் பெருநகரங்களைத் தவிர்த்து வேண்டுமானால் இத்தகைய கேள்விகள் எழாமல் இருக்கலாம்.
ஆனால் பல இடங்களில் இது தான் தமிழின் நிலையாக உள்ளது. தமிழ்க் குழந்தைகள் தமிழ்
பேசத் தெரியாமல், வீட்டிற்கு வரும் தாத்தா பாட்டியிடம் கூட பேச முடியாமல்
இருக்கின்றனர். நம் மொழி அறிந்திருக்க வேண்டும் என்று பெற்றோர் அல்லவா சொல்லிக்
கொடுக்க வேண்டும். நாம் தான் அம்மா என்று அழைப்பதைவிட மம்மி என்று அழைப்பதைப்
பெருமையாக எண்ணுகிறோமே.
தாய்மொழி, முதன்மை
மொழி என்பதெல்லாம் நடைமுறையில் இருக்கிறதா? முன்னேறும் உலகத்தில் தாய்மொழியாவது
ஒன்றாவது, எந்த வழியில் முன்னே செல்லலாம் பணம் பண்ணலாம் என்ற நிலை இருக்கிறதா?
சற்று அலசிப் பார்ப்போம்.
பள்ளிகளில் தமிழ் ஒரு
பாடமாக இருக்கிறது, அதுவே பலருக்கு பாரமாகவும் இருக்கிறது. பல பள்ளிகளில் தமிழைத் தவிர்க்க
வழியுண்டு, வேறு மொழி தேர்ந்தெடுக்கும் வழியாக. தாய் மொழி கற்காமல் பல மொழி கற்பது
சரியா? வேர் வேண்டாம், நான் பல திசையும் செழித்துப் பரவுவேன் என்று ஒரு மரம் சொல்ல
முடியுமா? இனிய தமிழ் நம் தாய்மொழி என்ற உணர்வும் நினைவும் இல்லாமல் தமிழைப்
படிக்கக் கடினமாக இருக்கிறதே, மதிப்பெண் வாங்க வேண்டுமானால் வேறு மொழி எடுத்துப்
படிக்க வேண்டும் என்ற நிலையல்லவா பரவலாக இருக்கிறது? மதிப்பெண்ணை விட்டால்
வாழ்வில் யோசிக்க வேறு ஒன்றும் இல்லையா? அது முற்றிலும் தனியாக விவாதிக்கக்கூடிய ஒரு
தலைப்பானாலும் இங்குக் குறிப்பிட்டது தாய்மொழிக்கும் அது குறுக்கீடாக வரவேண்டுமா
என்ற ஆதங்கம்தான்.
தமிழைத்,
தாய்மொழியைக் கற்றுக்கொள்ள கடினம் என்றால் எங்கு தவறு? பயில்பவரிடமா?
பயிற்றுவிப்பவரிடமா? குடும்பத்திலா? சமூகத்திலா? ஆமாம், தமிழ் படித்து என்ன
கிழிக்கப் போறோம் என்ற மனநிலையை முதலில் கிழிக்க வேண்டும். தாய்மொழியைக்
கற்பதற்கு, அறிந்துகொள்வதற்கு ஒரு ஆதாயம் பார்ப்பதா? தமிழை அறிந்து, தமிழ் நூல்களைப்
படித்தால் ஒரு இன்பம் பொங்குமே, உணர்வு சிலிர்க்குமே – அது தானே வேண்டும். படித்து
உணர்பவர்களுக்கு இது நன்றாய்ப் புரியும். அனைவரும் புரிந்து கொள்வர் என்ற
நம்பிக்கையும் ஆசையும் நிறைவேறட்டும்.
என் பிள்ளைகள் தமிழ்
படிக்கும் வாய்ப்பு பள்ளியில் இல்லையே என்ற ஏக்கம் எனக்கு உண்டு. வீட்டில்
சொல்லிக் கொடுக்க முயற்சிக்கிறேன், ஆனால் அது நான் படித்த வேகத்தை விட குறைவுதான்.
வீட்டுப்பாடம், ஹிந்தி என்று நேரம் செல்கிறது. தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டுமே
என்று என்னாலான முயற்சி செய்கிறேன், ஆனால் நேரம் ஒதுக்குவது கடினமாகத் தான்
இருக்கிறது. பள்ளிப் பாடங்களுக்கு மேலாக இதுவும் ஒரு அழுத்தமாகப் பிள்ளைகள்
உணர்வார்களோ என்று கொஞ்சம் கொஞ்சமாகத் தான் முன்னேற முடிகிறது. இதே வயதில் எனக்கு
எவ்வளவு தெரியும் என்று யோசித்தால் மன வருத்தம் தான். சிறு துளி பெரு வெள்ளம் என்று
கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொடுக்க வேண்டியதுதான். எவ்வளவு தூரம் போகும் என்று என்று
தெரியவில்லை. ஆனால் தமிழில் பேசுவது ஒன்றும் தடைபடவில்லை. வெளியில் பேசும்
தொடர்ச்சியாக எங்களிடம் ஆங்கிலத்தில் பேசினால் புரியாத மாதிரி என்ன என்ன என்று
கேட்போம். பிள்ளைகளும் புரிந்துகொண்டு தமிழுக்கு மாறி விடுவார்கள். இது என் வீட்டில்
தற்காலத் தமிழின் நிலை. எதிர்கால நிலை இன்னும் முன்னேறியிருக்கும் என்று
நம்புகிறேன். புத்தகங்களைப் படித்து அவர்களாகவே புரிந்து கொள்ளும் நிலை
வரும்பொழுது மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
சமூகத்தில் சினிமா,
ஊடங்கங்கள் என்று எடுத்துக்கொண்டால் ஆங்கிலம் கலந்து பேசுவது தான் இன்றைக்கு
அதிகம் உள்ளது, அதுவே யதார்த்தமாகவும் மாறி விட்டிருக்கின்றது. ஆனால் மறுபுறம் தமிழ்ப்
பாடல்கள் உலகமெங்கும் பிரபலமாகும் நிலையும் உள்ளது. சில அமெரிக்கப் பல்கலைக்
கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளிளெல்லாம் தமிழ் பாடல்களைப் பாடியிருக்கின்றனர்.
இதனால் தமிழ் நிலைக்கும் என்றோ வளரும் என்றோ சொல்வதற்கில்லை, என்றாலும் தமிழ் மேல்
ஒரு ஈர்ப்பும் அதனைப் பற்றிய ஒரு தகவேலேனும் பலருக்குச் சென்று சேரும் என்பதில்
ஐயமில்லை.
இன்றைய தலைமுறையினர்
தமிழைப் பேசாமல் படிக்காமல் இருப்பது ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் தமிழ்
தழைத்துக் கொண்டுதான் இருக்கிறது. இல்லாவிட்டால் இக்கட்டுரைப் போட்டி எப்படி?
இந்தக் கட்டுரை எப்படி? ஆமாம், வலைத்தளங்களின் ஊடாக பலரும் தமிழில் எழுதவும்
படிக்கவும் செய்கிறார்கள். தமிழ் புத்தங்கங்கள் பல வெளியிடப்படுவதுடன்,
தமிழ்நூல்களைத் தேடித் படித்துப் பகிர்ந்து கொள்வதும் நடந்துகொண்டுதான்
இருக்கிறது. இவையெல்லாம் உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் நம் சங்க
இலக்கியங்கள் பற்றியும் தமிழரின் வாழ்வுமுறை பற்றியும் தமிழர் வரலாற்றையும்
அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது என்பது நான் காணும் உண்மை. இன்றைய
சமூகத்தின் ஒரு பகுதியினர் தமிழை நிராகரித்தாலும் ஒரு பகுதியினர் தமிழ் மேல் காதல்
கொண்டு தமிழில் மூழ்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதும் உண்மையே.
வெளிநாட்டுவாழ் தமிழ்
மக்கள் தமிழ்ச் சங்கங்கள் வைத்தும் தமிழ்ப் பள்ளிகள் வைத்தும் குழந்தைகளுக்குத்
தமிழ்க் கற்றுக் கொடுக்கின்றனர். இலக்கியக் குழுக்களும் இருக்கின்றன. அவற்றில் தமிழ்
இலக்கியத்தைப் படித்துப் பகிர்ந்து
கொள்கின்றனர்.
இணையத்திலும் தமிழின்
பங்கு அதிகரித்துள்ளது. பல தமிழ் தளங்கள், இணைய நூலகங்கள் என்று பலவும்
அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது.
கற்காலம் முதல்
இருக்கும் நம் மொழியாம் தமிழின் தற்கால நிலை ஒரு கலவை நிலையாகத் தான் இருக்கிறது. சிலர்
பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் பலர் தமிழ்ப் பணி ஆற்றுகின்றனர். இன்றைய
அறிவியல் முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு சொற்களும் சேர்க்கப்படுகின்றன. பல நல்ல
புத்தகங்கள் தமிழில் மொழிமாற்றமும் செய்யப்படுகின்றன. ஒதுக்கப்படுகிறதோ அழிந்து
விடுமோ என்றெல்லாம் பயம் தோன்றினாலும் உண்மையில் தமிழ் மேலும் சீரும் சிறப்பும்
பெரும் என்றே தோன்றுகிறது. தமிழ் தமிழர் பற்றிய வரலாறு என்று மக்களுக்கு ஒரு
ஆர்வம் அதிகரித்திருப்பது நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது.
நம் குழந்தைகளுக்குத்
தாய்மொழியாம் தமிழைக் கற்றுகொடுத்து தாய்மொழி நன்கு தெரிந்தால் எதையும் நன்றாகப்
புரிந்துகொள்ளலாம் என்று சொல்லிக்கொடுத்தால் கற்காலம் முதல் இனிதாய் இருக்கும்
தமிழ் தற்காலம் தாண்டி எதிர்காலத்திலும் எக்காலத்திலும் இனிமையாய்ச் சிறப்புடன்
இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
---------------------------------------------------------------------------------------------------------------
இப்பதிவு திரு.அ.பாண்டியன், திரு.தனபாலன் மற்றும் திரு.ரூபன் அவர்கள் இணைந்து நடத்தும் தைப்பொங்கல் கட்டுரைப் போட்டிக்காக நான் எழுதியது.
உணர்வு நாடுவது தமிழன்றோ
திகட்டும் தித்திக்கும் வகையான இனிப்புகளே
திகட்டாத் தித்திப்பு எம் தமிழன்றோ
திருநாள் இன்பமா தமிழ் தரும் இன்பம்
ஒருநாளும் குறையா நிலையான இன்பமன்றோ
எத்துணைப் பாடல்கள் செவி விழுந்தாலும்
எண்ணமெல்லாம் சிலிர்ப்பது தமிழ்ப் பாடலன்றோ
எம்மொழிப் புத்தகங்கள் தேடித் படித்தாலும்
எம்மொழி தமிழ் படிக்க உள்ளம் ஏங்குமன்றோ
அன்பு நிறைந்த பிற மொழி உரையாடலினும்
என் உள்ளம் உகளுவது தமிழ்ப் பேச்சன்றோ
எங்கு சுற்றினும் தாய் சேரும் சேய் போல்
எம்மொழி கற்றினும் உணர்வு நாடுவது தமிழன்றோ

ஐங்குறுநூறு 15 - ஊரன் அல்லனே செயலால்
ஐங்குறுநூறு 15, பாடியவர் ஓரம்போகியார்,
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது
"மணல்
ஆடு மலிர் நிறை விரும்பிய ஒண் தழைப்
புனல் ஆடு மகளிர்க்குப் புணர் துணை உதவும்
வேழ மூதூர் ஊரன்
ஊரன் ஆயினும் ஊரன் அல்லனே"
புனல் ஆடு மகளிர்க்குப் புணர் துணை உதவும்
வேழ மூதூர் ஊரன்
ஊரன் ஆயினும் ஊரன் அல்லனே"
எளிய உரை: நீர் நிறைந்து மணல் கரைகளில் ஓடும் ஆற்றில் சிவந்த இலைகளால் ஆன உடை அணிந்து விளையாடும் பெண்களை விரும்பி அவர்களுக்கு மிதவைப்போல உதவும் நாணல் வளரும் ஊரைச்சேர்ந்தவன் இவ்வூரைச் சேர்ந்தவன் ஆயினும் இவ்வூரைச் சேர்ந்தவன் இல்லையே.
விளக்கம்: வேழத்தால் ஆன மிதவைகளை ஆற்றில் விளையாடும் பெண்கள் பயன்படுத்துவர். அது அப்பெண்களுக்கு உதவுவதைப்போலத் தலைவனும் அவர்களுக்கு உதவி செய்வதாக அவர்களுடன் விளையாடுகிறான். தலைவன் பரத்தைப் பெண்களுடன் தொடர்பு கொண்டதால் வருந்திய தலைவி அவனை நம்புவதில் பயனில்லை என்று பொருள்படத் தோழியிடம் வருந்துகிறாள். என் தலைவன் ஆனாலும் பரத்தைப் பெண்களுடன் சென்று விட்டானே..அவனை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று வெதும்புகிறாள்.
சொற்பொருள்: மணல் ஆடு - மணற்கரைகளில் ஓடும், மலிர் நிறை - நிறைந்த ஆறு, விரும்பிய - விருப்பப்பட்ட, ஒண் தழைப் புனல் ஆடு மகளிற்கு - சிவந்த இலைகளால் ஆன உடை அணிந்து ஆற்றில் விளையாடும் பெண்களுக்கு, புணர் துணை உதவும் - மிதக்கும் நாணல் போல உதவும், வேழ - கரும்பு, மூதூர் ஊரன் - பழமையான ஊரைச் சேர்ந்தவன், ஊரன் ஆயினும் - ஊரைச் சேர்ந்தவன் ஆயினும், ஊரன் அல்லனே - என் ஊரைச் சேர்ந்தவன் இல்லையே
என் பாடல்:
கரை புரண்டு ஓடும் ஆற்றில் விளையாடும்
இலையுடை அணிந்த பெண்களை விரும்பி
நாணல் மிதவைப் போல உடன் ஆடும் தலைவன்
இந்த ஊரைச் சேர்ந்தவன் ஆயினும் செயலால்
இந்த ஊரைச் சார்ந்தவன் இல்லை தோழி!

ஐங்குறுநூறு 14 - தூங்குவதற்கு இனியதே
ஐங்குறுநூறு 14, பாடியவர் ஓரம்போகியார்,
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது
"கொடிப் பூ வேழம் தீண்டி அயல
வடுக்கொண் மாஅத்து வண் தளிர் நுடங்கும்
அணித்துறை ஊரன் மார்பே
பனித் துயில் செய்யும் இன் சாயற்றே"
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது
"கொடிப் பூ வேழம் தீண்டி அயல
வடுக்கொண் மாஅத்து வண் தளிர் நுடங்கும்
அணித்துறை ஊரன் மார்பே
பனித் துயில் செய்யும் இன் சாயற்றே"
விளக்கம்: வடுமாங்காய்களைக் கொண்ட மாமரத்தின் மென்மையான கிளைகளை நாணல் செடிகளில் பூத்த மலர்கள் தீண்டியது போல தலைவனின் மார்பு மென்மையானதாகவும் குளுமையாய்த் தூங்குவதற்கு இனிமையானதாகவும் இருப்பதால் பல பெண்கள் அவனைத் தழுவுவதாக தலைவி தோழியிடம் சொல்லி வருந்துகின்றாள். நாணல் பரத்தைப் பெண்களைக் குறிக்கிறது.
சொற்பொருள்: கொடிப்பூ வேழம் - வரிசையாக பூக்கள் பூத்த நாணல் செடிகள், தீண்டி - தொடும், அயல - அருகிலுள்ள, வடுக்கொண் மாஅத்து - வடு மாங்காய்களைக் கொண்ட மாமரம், வண் தளிர் - மெல்லியக் கிளைகள், நுடங்கும் - காற்றிலாடும், அணித்துரை ஊரன் மார்பே - அழகியத் துறைகளையுடைய ஊரைச் சேர்ந்தவனுடைய மார்பு, பனித் துயில் செய்யும் - குழுமையாய்த் துயில் கொள்ளும், இன் சாயற்றே - இனிமையானதே
என் பாடல்:
வரிசையாக பூத்த நாணல் மலர்கள்
வடுமாங்காய்க் கொண்ட மாமரத்தின்
மெல்லியக் காற்றிலாடும் கிளைகளைத் தீண்டும்
அழகிய ஊரைச் சேர்ந்தவனுடைய மார்பு
குளுமையாய்த் தூங்குவதற்கு இனியதே
ஐங்குறுநூறு 13 - சாமத்திலும் உறங்காத பெண்கள்
ஐங்குறுநூறு 13
பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது
"பரியுடை நன் மான் பொங்கு உளை யன்ன
வட கரை வேழம் வெண் பூப் பகரும்
தண் துறை ஊரண் பெண்டிர்
துஞ்சு ஊர் யாமத்தும் துயில் அறியலரே"
எளிய உரை: விரைவாக ஓடக்கூடிய குதிரையின் மிகுந்து வளர்ந்த பிடரியைப் போல வெண்மையான மலர்கள் பூக்கும் நாணல் செடிகள் கரையில் வளர்ந்திருக்கும் குளிர்ந்த நீர்நிலைகளை உடைய ஊரைச் சேர்ந்தவனுடைய பெண்கள் ஊர் உறங்குகின்ற சாமத்திலும் உறங்காதவரே
விளக்கம்: விரைவாகச் செல்லக்கூடிய குதிரையின் மிகுதியான வெண் பிடரியைப் போல வெண்மையான மலர்கள் கரையில் உள்ள நாணல் செடிகளில் பூத்திருக்கின்றன. அத்தகைய குளிர்ந்த நீர்நிலைகளை உடைய ஊரைச் சேர்ந்தவனுடைய பெண்கள் ஊர் உறங்கும் சாமத்திலும் உறங்காமல் இருக்கின்றனர் என்று தலைவி தோழியிடம் சொல்கிறாள். அவன் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருப்பதால் வருந்தி அப்பெண்களில் ஒருவரும் உறங்குவதில்லை என்று பொருள்படுகிறது.
சொற்பொருள்: பரியுடை நன்மான் - விரைவாகச் செல்லும் குதிரை, பொங்கு உளை - மிகுந்து வளர்ந்த பிடரி , யன்ன - போல, வட கரை - குளிர்ந்த நீர்க்கரை, வேழம் -நாணல், வெண் பூப் பகரும் - வெண்மையான மலர்கள் பூக்கும், தண் துறை ஊரண் - குளிர்ந்த துறைகளையுடைய ஊரைச் சேர்ந்தவன், பெண்டிர் - பெண்கள், துஞ்சு ஊர் - உறங்கும் ஊர், யாமத்தும் துயில் அறியலரே - நடுநிசியிலும் உறங்காதவரே
என் பாடல்:
விரைந்து செல்லும் குதிரையின் பிடரி போல
வடகரையில் நாணல் வெண்பூக்கள் பூக்கும்
குளிர்ந்த நீர்நிலைகள் உள்ள ஊரைச் சேர்ந்தவன்
பெண்கள் ஊர் உறங்கும் சாமத்திலும் உறங்காதவரே

தமிழ்கொண்டே சென்றிடுவாய்
இனியக் குரலெடுத்து இனிமையாய்
இப்புவி பிறந்திட்ட குழந்தாய்
இனிதாய் வளமாய் அன்பாய்
இனி நீயும் வளர்ந்திடுவாய்
அம்மாவின் அரவணைப்பில்
அப்பாவின் அன்பில்
அறிவும் பண்பும் கலந்தே
அமுதென வளர்ந்திடு ஆன்றோனாய்
மாதா பிதா குரு
மறக்காமல் ஏற்றிப் போற்றிடுவாய்
மண்படைத்த தெய்வமும்
மகிழ்வுறப் பின் வணங்கிடுவாய்
அறநெறி சங்கச்சுவை பலவுண்டு
அவற்றைக் கருத்தாய் கற்றிடுவாய்
அழுத்தமாய் உள்ளத்தில் பதித்திடுவாய்
அவற்றின் வழிநடக்க உறுதிகொள்வாய்
தேவைக்குப் பிறமொழி பேசினும்
தேன்தமிழ் உயிராய்ப் பேசிடுவாய்
தேங்கிப் பழமையில் ஊறாமல்
தேயாமல் புதுவுலகில் பிணைத்திடுவாய்
செந்தமிழைச் செம்மையாய்ப் பற்றிடுவாய்
செம்மொழி நிலவிலும் பதித்திடுவாய்
செவ்வாயோ எவ்வாயோ எக்கிரகம்
சென்றினும் தமிழ்கொண்டே சென்றிடுவாய்
இப்புவி பிறந்திட்ட குழந்தாய்
இனிதாய் வளமாய் அன்பாய்
இனி நீயும் வளர்ந்திடுவாய்
அம்மாவின் அரவணைப்பில்
அப்பாவின் அன்பில்
அறிவும் பண்பும் கலந்தே
அமுதென வளர்ந்திடு ஆன்றோனாய்
மாதா பிதா குரு
மறக்காமல் ஏற்றிப் போற்றிடுவாய்
மண்படைத்த தெய்வமும்
மகிழ்வுறப் பின் வணங்கிடுவாய்
அறநெறி சங்கச்சுவை பலவுண்டு
அவற்றைக் கருத்தாய் கற்றிடுவாய்
அழுத்தமாய் உள்ளத்தில் பதித்திடுவாய்
அவற்றின் வழிநடக்க உறுதிகொள்வாய்
தேவைக்குப் பிறமொழி பேசினும்
தேன்தமிழ் உயிராய்ப் பேசிடுவாய்
தேங்கிப் பழமையில் ஊறாமல்
தேயாமல் புதுவுலகில் பிணைத்திடுவாய்
செந்தமிழைச் செம்மையாய்ப் பற்றிடுவாய்
செம்மொழி நிலவிலும் பதித்திடுவாய்
செவ்வாயோ எவ்வாயோ எக்கிரகம்
சென்றினும் தமிழ்கொண்டே சென்றிடுவாய்
ஐங்குறுநூறு 12 - கரும்பைப் போன்ற நாணல்
ஐங்குறுநூறு 12
பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது
"கரை சேர் வேழம் கரும்பில் பூக்கும்
துறை கேழ் ஊரன் கொடுமை நன்றும்
ஆற்றுக தில்ல யாமே
தோற்கதில்ல என் தட மென் தோளே"
எளிய உரை: கரையில் வளரும் நாணல் கரும்பைப் போல வளரும் அழகிய நீர்நிலைகளை உடைய ஊரைச் சேர்ந்தவனுடைய கொடுமையை பொறுக்க முடியவில்லை எனக்கு. என் வளைந்த மெல்லிய தோள்கள் தோற்பதில்லை.
விளக்கம்: நீர்நிலைகளின் கரையில் நாணல் செடிகள் கரும்பைப் போல வளர்ந்திருக்கும் ஊரைச் சேர்ந்த தலைவன் பிரிந்து சென்றதை நினைத்து வருந்தும் தலைவி தலைவனுடைய அக்கொடுமையை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்கிறாள் தோழியிடம். தன் வளைந்த மெல்லிய தோள்கள் தோற்பதில்லை என்றும் சொல்கிறாள்.
சொற்பொருள்: கரை சேர் வேழம் - கரையில் வளரும் நாணல் செடி, கரும்பில் பூக்கும் - கரும்பைப் போல வளரும், துறை கேழ் ஊரன் - அழகிய நீர்நிலைகளை உடைய ஊரைச் சேர்ந்தவன், கொடுமை நன்றும் ஆற்றுக தில்லை யாமே - கொடுமையை பொறுக்கமுடியவில்லை நானே, தோற்கதில்ல என் தட மென் தோளே - தோற்பதில்லை என் வளைந்த மெல்லிய தோளே
என் பாடல்:
கரும்பைப் போல நாணல் வளர்ந்திருக்கும்
அழகிய ஊரைச் சேர்ந்தவன் கொடுமை
பொறுக்க முடியவில்லை எனக்கு
தோற்றுப் போவதில்லை வளைந்த என் மெல்லிய தோளே
ஓவியத்திலா காட்ட வேண்டும்?
பல ஆயிரமாய்
காடுகளில் சுதந்திரமாகச் சுற்றி திரிந்தோம்
சில ஆயிரமாய்
சரணாலயங்களில் சரண் அடைந்துள்ளோம்
அகன்று பரந்த காட்டை விட்டு
அடிகள் சிலவற்றில் சுருங்கியிருப்பது ஏன்?
எம் பசிக்கு நீ வீசுவதை எதிர்பார்ப்பது ஏன்?
எம் இனத்தைக் காண்பது அரிதாய் இருப்பது ஏன்?
வாழ்வின் ஆடம்பரத்திற்கு காடழித்த மனிதனே
வாழ்வின் ஆதாரமே எமக்கு காடுதான் மறந்தது ஏன்?
அழிந்து விட்டனவாம் பல உயிரினங்கள்
அந்த வரிசையில் சேர வேண்டுமா யாம்?
காட்டை மட்டுமல்ல பல விலங்குகளை மட்டுமல்ல
வேட்டை ஆடுவது நீ இயற்கை சமன்பாட்டை
அறியாயோ மனிதா? கண்ணைத் திறவாயோ மனிதா?
உன் சந்ததிக்கு எம்மை ஓவியத்திலா காட்ட வேண்டும்?
தோலிற்கு எம்மையும் மரத்திற்கு காட்டையும்
பேராசைக்கு இயற்கைச் சூழலையும் பலியாக்காதே
புலிகளை அழிவிலிருந்துக் காத்திடு
புவியில் விலங்குகளும் வாழட்டும் விடு
காட்டில் யாமும் நகரில் நீயும் என்று
சூழல் மண்டலம் இனிது சிறக்க வாழ்ந்திடு!
நெஞ்சு பொறுக்குதில்லையே, பாரதி
"சாதிகள் இல்லையடி பாப்பா!
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி கல்வி
அன்பு நிறை உடையவர்கள் மேலோர்"
என்று பாடிச் சென்றாய் பாரதி
நூற்றாண்டானாலும் மாறவில்லை அந்நியதி
பாப்பா என்று குறிப்பிட்டதால்
பாப்பாவுக்கு மட்டும் என்றே நினைத்துவிட்டனரோ
பாப்பா மனதிலும் பதிய விடவில்லையே
பசுமரத்து ஆணியாய் நிலைக்கவிடவில்லையே
பாவம் என்று சொன்னாய் பாரதி
பாவத்திற்குப் பாவம் அவர் அஞ்சவில்லையே
நீதி மதி கல்வி இவையெல்லாம்
பணத்திற்கு முன் பதராய்ப் பறந்திடுதே
கற்கும் நல்வழி எல்லாம்
ஏட்டுச் சுரைக்காய் என்றாகிடுதே என்று தணியும் சாதியின் மோகம்
நெஞ்சு பொறுக்குதில்லையே, பாரதி
எமக்கும் நெஞ்சு பொறுக்குதில்லையே

இரவின் வருதல் அறியான்
கருங்கண் தாக்கலை என்ற குறுந்தொகைப் பாடலைப் போலவே ஐங்குறுநூற்றில் ஒரு பாடல் படித்தேன். சங்க காலத்தின் இரு நூல்களில் வரும் இரண்டு வெவ்வேறு பாடல்கள் ஒரே கருத்தைச் சொல்வதைக் கண்டு வியந்து மகிழ்ந்தேன். அந்தப் பாடல் இதோ உங்களுக்காக.
"கரு விரல் மந்திக் கல்லா வன்பறழ்
அரு வரைத் தீந்தேன் எடுப்பி அயலது
உரு கெழு நெடுஞ் சினைப் பாயும் நாடன்
இரவின் வருதல் அறியான்
வரும் வரும் என்பள் தோழியாயே"
ஐங்குறுநூறு பாடல் எண் 272, பாடியவர் கபிலர், குறிஞ்சி திணைப் பாடல் – தலைவி (தலைவன் கேட்கும்படியாகத்) தோழியிடம் சொன்னது.
எளிய உரை: கரிய விரல்களை உடையப் பெண் குரங்கின் முதிர்ச்சியில்லாத வலியக் குட்டிக்குரங்கு மலையில் உள்ள இனிமையானத் தேன்கூட்டைக் கலைத்துவிட்டு அருகிலிருக்கும் அச்சமூட்டும் உயர்ந்த கிளைகளில் தாவும் நாட்டைச் சேர்ந்த தலைவன் இரவில் வரமாட்டான். (ஆனால்) தோழி! "வருகிறான், வருகிறான்" என்றே சொல்கிறாள் என் தாயே.
உட்பொருள்: கடினமான அச்சம் தரும் மலைப்பாதையில் இரவில் வருவதைத் (தன்னைக் காண) தவிர்த்துத் தன்னைத் தலைவன் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று தலைவிக் குறிப்பாக உணர்த்துகிறாள். தலைவன் காதில் விழுமாறு இச்செய்தியைத் தோழியிடம் கூறுகிறாள் தலைவி. மந்தியைக் கருப்பொருளாகக் கொண்டு அழகாகத் தன் கருத்தைச் சொல்லும் பாடல். மலை முதற்பொருளாகும்.
சொற்பொருள்: கருவிரல் மந்தி – கரிய விரல்களையுடைய பெண் குரங்கு, கல்லா – முதிர்ச்சியில்லாத, வன்பறழ் – குட்டிக்குரங்கு, அரு வரை – கடினமான மலை, தீந்தேன் – இனியத்தேன், எடுப்பி – கலைத்து, அயலது – அருகிருக்கும், உருகெழு – அச்சம்தரும், நெடுஞ்சினை – உயர்ந்த கிளை, பாயும் – தாவும், நாடன் – நாட்டைச் சேர்ந்தவன், இரவின் வருதல் அறியான் – இரவில் வரமாட்டான், வரும் வரும் என்பள் தோழி– “வருகிறான், வருகிறான்” என்கிறாள் தோழி, யாயே – என் தாயே

ஐங்குறுநூறு 212 - சந்தனமும் அகிலும் சேர்ந்து மணக்கும்...
ஐங்குறுநூறு 212 பாடியவர் கபிலர்
குறிஞ்சித்திணை - தோழி தலைவியின் செவிலித்தாயிடம் சொன்னது.
"சாத்த மரத்த பூழில் எழு புகை
கூட்டு விரை கமழும் நாடன்
அறவற்கு எவனோ நாம் அகல்வு அன்னாய்!"
எளிய உரை: சந்தனக் கட்டையும் அகில் கட்டையும் சேர்த்து எரிப்பதால் எழும் சந்தனமும் அகிலும் கலந்த நறுமணம் வீசும் நாட்டைச் சேர்ந்த நல்லொழுக்கம் உடையவனை நாம் மறுத்தது ஏன் தாயே?
விளக்கம்: தலைவி விரும்பும் தலைவனைத் திருமணம் செய்து வைக்காமல் தலைவி வீட்டில் மறுத்துவிட்டனர். இதனால் வருத்தமுற்றத் தலைவியின் தோழி தலைவியின் செவிலித்தாயிடம் தன் வருத்தத்தைக் கூறுவதாக அமைந்தப் பாடல் இது. சந்தனமும் அகிலும் இனிய நறுமணம் தருபவை. இவையிரண்டையும் சேர்த்து எரிக்கும் பொழுது எழும் நறுமணம் மிக்க புகை எழும் நாட்டைச் சேர்ந்தவன் தலைவன். சந்தனமும் அகிலும் மலையில் வளர்வதால் அவன் மலைநாட்டுத் தலைவன் என்று கொள்ளலாம். அத்தகைய தலைவன் நல்லொழுக்கம் உடையவன், அவனை எதற்காக மறுத்தோம் என்று கேட்கிறாள். தலைவியின் செவிலித்தாய், அதாவது வளர்ப்புத்தாய் தோழியின் தாயாகவும் இருந்திருக்கலாம்.
சொற்பொருள்: சாத்த மரத்த - சந்தன மரம், பூழில் - அகில், எழுபுகை - எழுகின்ற புகை, கூட்டு விரை - கலந்த நறுமணம், கமழும் - மனம் வீசும், நாடன் - தலைவன், அறவற்கு எவனோ - நல்லொழுக்கம் உடையவன், நாம் அகல்வு - நாம் மறுத்தது, அன்னாய் - தாயே

சங்க இலக்கியம் - ஒரு அறிமுகம் 2
எட்டுத்தொகை நூல்களைப் பட்டியலிடும் பாடல் தெரியுமா? இதோ உங்களுக்காக,
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்தப் பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம் எனும்
இத்திறத்த எட்டுத்தொகை
இந்த எட்டு நூல்களில் ஐந்து அகம் பற்றியன. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை மற்றும் அகநானூறு அவ்வகையில் சேரும். மீதமிருக்கும் கலித்தொகை, பதிற்றுப்பத்து மற்றும் பரிபாடல் ஆகிய நூல்கள் அகமும் புறமும் பற்றியன. சரி, அது என்ன அகம், புறம்? அதையும் பார்த்துவிடுவோம்.
ஒரு மனிதன் முதலாவதாக என்ன செய்ய வேண்டும். வீட்டைக் காக்க வேண்டும். பிறகு? நாட்டைக் காக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் வீட்டைக் காத்தால் நாடும் நலமாக இருக்கும் தானே? இப்படித்தான் நம் முன்னோர் வாழ்ந்தனர். வீட்டையும் நாட்டையும் போற்றி இனிது வாழ்ந்த தமிழரின் வாழ்வே சங்கப்பாடல்கள். வீட்டைப் பேண காதலும் நாட்டைப் பேண வீரமும் கொண்டு நம் முன்னோர் வாழ்ந்த வாழ்வு எவ்வளவு இனிமையானது என்று சங்கப் பாடல்கள் வழியாக அறியலாம். இலக்கியச் செல்வமாக மட்டும் இல்லாமல் சங்கப்பாடல்கள் ஒரு வரலாற்றுக் கருவூலமாகவே இருக்கின்றன. ஆக, காதல் வாழ்வைச் சொல்வது அகம் என்றும் வீர வாழ்வைச் சொல்வது புறம் என்றும் தெளிவாகின்றது.
சரி, காதல் வாழ்வைப் பாடுவதற்கும் சில நெறிமுறைகள் வைத்துப் பின்பற்றினர் புலவர்கள். நில அமைப்பிற்கு ஏற்ப மனிதனின் வாழ்வுமுறை வேறுபடும் அல்லவா? அதனால் நில அமைப்பிற்கு ஏற்ப திணை வகுத்து ஒவ்வொரு திணையிலும் நேரத்திற்கும் வாழும் உயிரினங்கள் சார்ந்தும் காதலைப் பாடினர். இன்றுதான் தலைவனும் தலைவியும் காதல்கொண்டால் ஒரு நிமிடம் பாலைவனத்திலும் அடுத்த நிமிடம் வயல்வெளியிலும் இருப்பர்!!! உண்மை நிலைமை அது அல்லவே! அதைத்தான் அழகாகச் சொல்லியிருக்கின்றனர் நம் முன்னோர்.
ஒவ்வொரு திணைக்கும் நிலம் மற்றும் பொழுது முதற்பொருள் என்று கொண்டனர். பின்னர் அந்த நிலத்தின் தெய்வம், உணவு, மக்கள், விலங்கு, பறவை, பூ, மரம், நீர், யாழ், பண், தொழில் போன்றவற்றை கருப்பொருள் என்று வகுத்தனர். காதல் நிகழ்வை உரிப்பொருள் என்று கொண்டனர். இப்படி திணை வகுத்தப் பின்னர் காதல் நிகழ்வைப் பாடும் புலவர்கள் இந்த நிலத்தில் இந்த பொழுதில் இந்தச் சூழலில் இப்படிக் காதல் நிகழ்ந்தது என்று பாடுவர். பாடல்களில் முதலும் கருவும் ஒன்று இடம்பெறலாம், ஒன்று இடம்பெறாமல் போகலாம், ஆனால் உரிப்பொருள் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
இப்பொழுது திணைகள் எவையென்று பார்ப்போம். நில அமைப்புகள் மலை, காடு, வயல், கடல், வறண்ட நிலம் (பாலை) இவையொன்றில் ஒன்றாகத் தானே இருக்க முடியும்? ஆக, மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என்று வழங்கப்பட்டன. காடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை எனவும் வயலும் வயல் சார்ந்த இடங்களும் மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என்றும் வழங்கப்பட்டன. நால்வகை நிலங்களே தனிச் சிறப்புடையன. அதனால் 'நானிலம்' என்று வழங்கினர். மலையும் காடும் வறண்டு போகும் நிலை பாலை எனப்பட்டது.
இப்படியாக திணை வகுத்துப் பாடப்பெற்ற நில ஒழுக்கங்கள் 'அன்பின் ஐந்திணை' என்று போற்றப்பெற்றன.
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
என்று பொருள் சேர்த்தலும் அன்போடு இல்வாழ்க்கை நடத்துதலும் அறன் செய்தலும் அடிப்படையாகக் கொண்டு இனிய வாழ்வு வாழ்ந்தனர் தமிழர் என்று தொல்காப்பியம் சொல்கிறது.
சங்க இலக்கியம் பற்றி மேலும் பார்ப்போம்...

சங்க இலக்கியம் - ஒரு அறிமுகம் 1
சங்க இலக்கியம் என்பது நம் முன்னோர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த காலத்தில் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பு. பாண்டிய மன்னர்கள் தமிழை ஆதரிக்கவும் காக்கவும் சங்கம் அமைத்து புலவர்களை ஆதரித்து உள்ளனர். மூன்று சங்கங்கள் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் இருந்ததாகச் சான்றுகள் கிடைத்துள்ளன.
முதற்சங்கம் இருந்தது - கடல்கொண்ட மதுரையில்
இடைச்சங்கம் இருந்தது - கபாடபுரத்தில்
கடைச்சங்கம் இருந்தது - இன்றைய மதுரையில்
இந்த மூன்று சங்கங்கள் பற்றிப் பல்வேறு செய்திகள் இருந்தாலும் மதுரையில் புலவர்கள் கூடி தமிழ் ஆய்ந்து வளர்த்ததை பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை நூல்களில் இருக்கும் குறிப்புகள் கொண்டு அறியலாம்.
"தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரை"
இது சிறுபாணாற்றுப்படை எனும் பத்துப்பாட்டு நூலில் இடம்பெற்றுள்ளது. தமிழ்மொழி நிலைபெற்றிருக்கும் பெருமை தாங்கி நிற்கும் பழமையான மகிழ்ச்சி தோன்றுகின்ற தெருக்களையும் உடைய மதுரை மாநகரம் என்பது இந்த அடிகளின் பொருள்.
சொற்பொருள்: மறுகு - தெரு
"தொல்லாணை நல்லாசிரியர்
புணர் கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின் .."
என்று மதுரைக்காஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் கடைச்சங்க நூல்களாகும். இப்பாடல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மன்னர்களையும் சில வரலாற்றுச் செய்திகளையும் ஆராய்ந்தால் சிலப் பாடல்கள் முதலாம் நூற்றாண்டுக்கு முந்தையது என்று எண்ண வைக்கின்றன.
சங்க இலக்கியங்களைப் படிக்கும் பொழுது நம் தமிழ் மொழி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே சிறப்புடன் இருக்கும் இன்மொழி என்று இறுமாப்பு வருகிறது. அதே நேரத்தில் இழந்த சில செல்வங்களை நினைத்து வருத்தமும் வருகிறது. இருக்கும் தமிழ் செல்வங்களைப் படித்து இனிய தமிழ் பேசி இன்றைய தலைமுறையினருக்குக் கற்றுக்கொடுத்து காலத்திற்கும் தமிழ் நிலைக்கச் செய்வோம்.
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் பற்றிய செய்திகள் அடுத்த சங்க இலக்கிய அறிமுகப் பதிவில் பார்ப்போம். நன்றி!

ஐங்குறுநூறு 8
தலைவன் தலைவியிடம் திருமணம் செய்து எப்பொழுதும் இணைந்து வாழ்வதாக வாக்கு அளிக்கிறான். ஆனால் அதை நிறைவேற்றாமல் காலம் கடத்திக் கொண்டிருக்கிறான். தலைவிக்கோ ஏக்கமும் வருத்தமும். தலைவி வருந்துவதைப் பார்த்தால் தோழி வருந்தாமல் இருப்பாளா? நல்ல தோழி அவள். வருந்தியத் தோழி தலைவனிடம் அவனுடைய வாக்கை அழகாக நினைவூட்டி அதை நிறைவேற்றவேண்டும் என்று சொல்கிறாள். சினம்தானே வரும், எப்படி அழகாகச் சொல்வது என்று யோசிக்கிறீர்களா? தேன் தமிழில் தேனைப் போலவே பேச முடியும் என்று சொல்லும் ஒரு சங்க இலக்கிய ஐங்குறுநூற்றுப் பாடலைப் பாருங்கள்.
ஐங்குறுநூறு 8, பாடியவர் ஓரம்போகியார்.
மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது
"வாழி ஆதன் வாழி அவினி
அரசு முறை செய்க களவு இல் ஆகுக
என வேட்டோளே யாயே யாமே
அலங்கு சினை மாஅத்து அணி மயில் இருக்கும்
பூக் கஞல் ஊரன் சூள் இவண்
வாய்ப்பதாக என வேட்டோமே"
எளிய உரை: வாழ்க ஆதன், வாழ்க அவினி. அரசு முறையாக ஆட்சி செய்க.
விளக்கம்: சேர மன்னர்கள் ஆதன் என்றும் அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர். மன்னனை வாழ்த்திப் பாடல் துவங்குகிறது. தலைவனுடைய ஊரின் அழகையும் குறிப்பிட்டு தன் கருத்தைச் சொல்கிறாள் தோழி. தலைவியைத் திருமணம் செய்து கொள்வதாகத் தலைவன் உரைத்த வாக்கையே தோழி குறிப்பிடுகிறாள். மாமரம், மயில், பூக்கள் ஆகியவை கருப்பொருள்.
சொற்பொருள்: வாழி ஆதன் வாழி அவினி - வாழ்க ஆதன் வாழ்க அவினி, அரசு முறை செய்க - அரசு முறையாய் ஆட்சி செய்க, களவு இல் ஆகுக - களவு இல்லாமல் ஆகுக, என வேட்டோளே யாயே - என் விரும்புகிறாள் தாய், யாமே – நான், அலங்கு சினை - அசையும் கிளை, மாஅத்து – மாமரம், அணி மயில் இருக்கும் - அழகிய மயில் அமர்ந்திருக்கும், பூக்கஞல் ஊரன் சூள் - பூக்கள் நிறைந்த ஊரைச் சேர்ந்தவனுடைய வாக்கு, இவண் வாய்ப்பதாக - இங்கு நிறைவேறட்டும், என வேட்டேமே - என விரும்புகிறேன்
என் கவிதை:
பூக்கள் நிறைந்த ஊரில்
தென்றலில் அசையும் மாமரத்தில்
மயில் அமர்ந்திருக்க
மாமரத்தின் அடியில் நான் அமர்ந்து
காட்சியை ரசிக்க என்று வேட்டேமே
ஐங்குறுநூறு தொடரும்...

களவு இல்லாமல் ஆகவேண்டும் என்று
விரும்புகிறாள் தாய். மாமரத்தின்
அசையும் கிளைகளில் அழகான மயில் அமர்ந்திருக்கும்
பூக்கள் நிறைந்த ஊரைச் சேர்ந்தவனுடைய வாக்கு இங்கு நிறைவேற வேண்டும் என்று
விரும்புகிறேன் நான்.
விளக்கம்: சேர மன்னர்கள் ஆதன் என்றும் அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர். மன்னனை வாழ்த்திப் பாடல் துவங்குகிறது. தலைவனுடைய ஊரின் அழகையும் குறிப்பிட்டு தன் கருத்தைச் சொல்கிறாள் தோழி. தலைவியைத் திருமணம் செய்து கொள்வதாகத் தலைவன் உரைத்த வாக்கையே தோழி குறிப்பிடுகிறாள். மாமரம், மயில், பூக்கள் ஆகியவை கருப்பொருள்.
சொற்பொருள்: வாழி ஆதன் வாழி அவினி - வாழ்க ஆதன் வாழ்க அவினி, அரசு முறை செய்க - அரசு முறையாய் ஆட்சி செய்க, களவு இல் ஆகுக - களவு இல்லாமல் ஆகுக, என வேட்டோளே யாயே - என் விரும்புகிறாள் தாய், யாமே – நான், அலங்கு சினை - அசையும் கிளை, மாஅத்து – மாமரம், அணி மயில் இருக்கும் - அழகிய மயில் அமர்ந்திருக்கும், பூக்கஞல் ஊரன் சூள் - பூக்கள் நிறைந்த ஊரைச் சேர்ந்தவனுடைய வாக்கு, இவண் வாய்ப்பதாக - இங்கு நிறைவேறட்டும், என வேட்டேமே - என விரும்புகிறேன்
என் கவிதை:
பூக்கள் நிறைந்த ஊரில்
தென்றலில் அசையும் மாமரத்தில்
மயில் அமர்ந்திருக்க
மாமரத்தின் அடியில் நான் அமர்ந்து
காட்சியை ரசிக்க என்று வேட்டேமே
ஐங்குறுநூறு தொடரும்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்
வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை. வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.
-
பொன்விழா கொண்டாடும் நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழு 'வெள்ளிதோறும் இலக்கிய உலா' என்ற நிகழ்வினை சிறப்பாக நடத்தி வருகின்...
-
அவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...